Home Blog Page 5797

நடிகர் நகுல்-ஸ்ருதி திருமணம்

நடிகர் நகுல்-ஸ்ருதி திருமணம் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹால் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த திருமண விழாவில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் மற்றும் அவர்களது உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் நேரிலும், போனிலும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் பயங்கர தீ விபத்து

கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி பங்கேற்ற மாநாட்டு வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 4 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.

மைதானத்தில் இருந்த புற்களில் எப்படி தீப்பிடித்தது? மர்மநபர்கள் யாரும் வேண்டும் என்றே தீவைத்தார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தினால் பிரதமர் மோடி கலந்து கொண்ட மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் மின்வெட்டே இல்லாத மாநிலமாக விளங்குகிறது: ஜெயலலிதா பெருமிதம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு அச்சக வளாகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.193 கோடியே 26 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திட்டங்களை தொடங்கிவைத்து உரையாற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, “தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையானது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படும். பொதுமக்களின் குறைகளை போக்க அம்மா திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார். 

பா.ஜ.க கூட்டணியில் சரத்குமார் கட்சி

சென்னை விமான நிலையத்தில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பா.ஜ., கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதாக ச.ம.க., கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

 

மேலும் கூட்டணி குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும், தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நள்ளிரவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன் சரத்குமார் சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நிருபர்

இஸ்லாமிய தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த நவம்பர் 21ல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த நிருபர் முகமது அல் க்யூ, இவர்  அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

 

இதை எதிர்த்து அவர் கடந்த 94 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமானது. இதனிடையே வரும் ஜூன் 21ம் தேதி முகமது அல் விடுதலை செய்யப்படுவதாக இருந்தது. இது மே 21ம் தேதியாக அறிவிக்கப்பட்டது.

 

இதனால் உண்ணா விரதத்தை கைவிட்டு சிகிச்சைக்கு  அவர் உடன்பட்டார். உலகத்தி லேயே இவ்வளவு நாள் உண்ணாவிரதம் இருந்தது இவர் மட்டுமே.

 

சாலையோர கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில், உயிர் தப்பினார் உம்மன் சாண்டி

தனது சொந்த கிராமத்துக்கு சென்ற கேரள முதல் மந்திரி உம்மன் சாண்டியின் கார்  இன்று அதிகாலை 2.45 மணியளவில் வைக்கம்-எட்டுமன்னூர் சாலை வழியாக வந்துகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகிச்சென்று பக்கவாட்டில் இருந்த கால்வாயில் சரிந்து விழுந்தது.

 

எனினும், தனக்கு பாதுகாப்பாக வந்த வேறொரு காரில் தனது பயணத்தை தொடர்ந்த உம்மன் சாண்டி இன்று காலை தனது கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

 

​தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் திருப்பதி கோயில் தங்கம் 3000 கிலோ முதலீடு

திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் மூலம் 3000 கிலோ தங்கம் விரைவில் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

ஏழுமலையான் கோயிலில் உள்ள 1300 கிலோ சுத்தமான தங்க கட்டிகளை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் குறைந்த கால முதலீடாக மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு விரைவில் செய்யபடவுள்ளது. மேலும் ஸ்டேட் வங்கியில் ஏற்கனவே தேவஸ்தானம் சார்பில் 1000 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்காண ஒப்பந்தம் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. எனவே இந்த 1000 கிலோ தங்கமும் பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 1.75 சதவீதம் வட்டி கிடைக்கும் விதமாக முதலீடு செய்யப்படவுள்ளது. இதே போல் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய கலப்பட தங்க நகைகள் 1400 கிலோ உள்ளது. இதனை மும்பையில் உள்ள மிண்டிற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தமான தங்ககட்டிகளாக மாற்றப்படவுள்ளது.

ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி

மிர்பூரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சர்பராஸ் அகமது 25 ரன்களும், குர்ராம் மன்சூர் 10 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி பந்துவீச்சில் ஹர்திக் பாண்டையா 3.3 ஓவர்களில் 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும் ஜடேஜா 2, நெஹ்ரா, பூம்ராங், யுவராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார். இதனையடுத்து 84 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதலில் தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித், ரஹானே டக் அவுட் ஆகி அதிர்ச்சி தந்தனர். ரெய்னாவும் 1 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த விராட்கோலி – யுவராஜ் சிங் ஜோடி நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.

அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட்கோலி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களமிறங்கிய பாண்டையாவும் டக் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய டோனி யுவராஜ் சிங்குடன் சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் இந்திய அணி 15.3 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3, முகமது சமி 2 விக்கெட் வீழ்த்தினர்.

பாவூர்சத்திரத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் தேர்தல் விதிமுறைகள் குறித்த  ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் உதவி ஆய்வாளர்  ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் காவல் துறையினரால் குறிப்பிடப்படும் இடங்களில் மட்டுமே அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மேலும் தேர்தல் விதிமுறைகளின் படி இரவு 10 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சியின் தலைவர் வருகை குறித்து காவல் நிலையத்தில் தெரியபடுத்த வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இன்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். டிஜிட்டல் பேனர்களை வைக்க கண்டிப்பாக அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெறாத டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படும்.உள்ளிட்ட பல   தேர்தல் விதிமுறைகளை உதவி ஆய்வாளர் எடுத்து கூறினார்.
 இதில் அனைத்து கட்சியின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

திருப்பதி கோவிலில் புதிய அக்‌ஷயபாத்திரம்

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக கடந்த 1985ம் ஆண்டு முதல் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கு பணி தொடரப்பட்டது.

ஒரு நாளைக்கு 2000 பக்தர்களுக்கு அன்னபிரசாதம் தயார்செய்யப்பட்டது. தற்போது ஒரு நாளைக்கு 1.25 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலில் நடக்கும் பிரமோற்சவம் போன்ற முக்கிய நிகழ்ச்சியின் போது பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் அன்னபிரசாதம் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, கூடுதலாக 1 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் தயார் செய்யும் வகையில் அக்‌ஷயபாத்திரம் என்ற பெயரில் அன்னக்கூடம் கட்டடப்பட்டு வருகிறது.