Home Blog Page 5801

திருச்சியில் நடக்கும் சமூகநீதி மாநாட்டில் கருணாநிதி–ராகுல்காந்தி

திருச்சியில் வரும் மார்ச் 20–ந்தேதி திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு நடைபெறுகிறது. இதில் மாநாட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பீகார் முதல்–மந்திரி நிதிஷ் குமார், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

நிதீஷ்குமார், லல்லு ஆகியோர் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் ராகுல் காந்தியையும் மாநாட்டில் பங்கேற்க செய்வதில் திராவிடர் கழகம் ஆர்வமாக உள்ளது.

இது தொடர்பாக ஏற்கனவே ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இன்று இளங்கோவனும் நேரில் அழைத்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் ஒரே மேடையில் அனைத்து தலைவர்களும் பங்கேற்பது தேர்தல் பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் என்று கருதுகிறார்கள்.

மும்பை புனே சிறையில் இருந்து நடிகர் சஞ்சய்தத் விடுதலை

42 மாத சிறைவாசத்தை முடித்து வெளியே வந்தார் சஞ்சய்தத் – 5 ஆண்டு சிறை தண்டனையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை பெற்று, புனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இன்று காலை சிறையிலிருந்து விடுதலையானார். இயக்குனர் ஹிரானி மற்றும் சஞ்சய் தத் குடும்பத்தினர் சிறைக்கு சென்று சஞ்சய் தத்தை அழைத்து வந்தனர். பலத்த பாதுகாப்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த சஞ்சய் தத், பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்த போதும் ஏதும் பேசாமல், காரில் ஏறி விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.

நட்பிற்காக கார்த்தியின் தோழா படத்தில் அனிருத் பாடிய பாடல்!

இன்றைய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக, இசை உலகில் கொடிக் கட்டி பறக்கும் அனிருத் தொடர்ந்து வெற்றி படங்களில் பணி புரிந்து வருகிறார்.

சமீபத்தில் காதலர் தினத்தன்று வெளி ஆன அவரது ஆல்பம் ஒன்றும் இளைஞர்கள் இடையே பிரபலமாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அவர் இப்போது நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா, ஆகியோர் நடிக்க பி. வம்சி இயக்கும், கோபி சுந்தர் இசை அமைக்கும், பி வி பி சினிமா தாயாரிக்கும் ‘தோழா’ படத்தில் டைட்டில் பாடல் ஒன்றை பாடி உள்ளார்.

‘தோழா’ இரு வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வரும் இரு நண்பர்களை பற்றியக் கதை. அந்த நட்பை பிரதிபலிக்கும் பாடல் ஒன்றை தலைப்பு பாடலாக பதிவு செய்ய எண்ணினோம். அந்தப் பாடலை இளைஞர்களிடம் பிரபலமான அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என இயக்குனரும், இசை அமைப்பாளரும் முடிவெடுத்தார்கள்.

உடனே அனிருத்தை அணுகினோம், அவரும் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக் கொண்டார். ‘தோழா என் உயிர் தோழா’ என்று துவங்கும் இந்தப் பாடல், இனி வரும் காலங்களில் தோழமையை குறிக்கும் பாடலாக இருக்கும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம்.

‘தோழா’ படத்தில் பாடல்கள் மிக மிக இனிமையாக வந்து இருக்கிறது. இந்த மாதம் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது’ என பெருமிதத்துடன் கூறினார் பி வி பி சினிமா, ராஜீவ் காமினேனி.

முதலமைச்சரால் மட்டுமே தங்களை விடுதலை செய்ய முடியும்: நளினி பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் முதலமைச்சரால் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என நளினி கூறியுள்ளார். 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தன் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக, பரோலில் இன்று விடுவிக்கப்பட்டார். இதற்காக  வேலூர் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரை காவல்துறையினர் சென்னை கோட்டூர்புரத்திற்கு அழைத்து வந்தனர். 

பின்னர் தந்தையின் இறுதிச்சடங்கில் நளினி கலந்து கொண்டார். இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நளினி, பரோலில் தம்மை விடுவித்ததற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுவிக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்த நளினி, 7 பேரின் விடுதலைக்கு ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

அமெரிக்காவில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தலைவர் பிலிப் மின் பேசுகையில், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் மூலம் 24,660 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

இந்தியாவில் கல்வி கற்க விரும்பும் அமெரிக்க மாணவர்களுக்காக பாஸ்போர்ட் இந்தியா என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் 4,500 அமெரிக்க மாணவர்கள் படித்து வருவகிறது என்று கூறினார்.

கோவையில் அடிப்படை வசதிகோரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

 

கோவை கோவைப்புதூரில் தனியார் கல்லூரியில் அடிப்படை வசதிகோரி 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  முற்றுகையிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. மாணவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். காவல்துறையின் தடையை மீறி உள்ளே நுழைந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் 3 மாணவர்கள் காயம் அடைந்ததால் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி, அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி. வீடியோ வாகனத்தின் மூலம் அரசின் சாதனை விளக்க குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன என்று தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சியை சமூக நலம் மற்றும் சத்துணவு துறை  திட்டத்துறை அமைகாஹ்ர் பா.வளர்மதி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்தியரா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

மோடி அரசு மதவாத வன்முறையை தூண்டுவதாக சர்வதேச மன்னிப்பு சபை அறிவிப்பு

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மதவாத வன்முறைகளை கட்டுப்படுத்தாமல், இந்து அமைப்பின் பிரதிநிதிகளைக் கொண்டே, மற்ற மதத்தினர் மீது தாக்குதல் நடத்த தூண்டி வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. 

உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக கோலி இருப்பார்: ஸ்ரீகாந்த்

உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விராட் கோலி நிச்சயம் திகழ்வார் என்று முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். “சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் விராட் கோலியின் திறமை அபாரம். அவரது ஆட்ட அணுகுமுறைகளில் இதனைக் காண முடியும். 3 வடிவங்களிலும் அவர் அற்புதமாக ஆடி வருகிறார். ஒரு முழுநிறைவான கிரிக்கெட் வீரர் என்றால் எந்த ஒரு ஆட்டத்துக்கும் சூழலுக்கும் தன்னை தகவமைத்து கொள்பவர்தான் சிறந்த வீரர் என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்

ரயில்வே பட்ஜெட்டை மைக்ரோ வெப்சைட் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் நாளை ரயில்வே பட்ஜெட்டை, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்ய உள்ளார்.

ரயில்வே பட்ஜெட் குறித்த விபரங்களை ஒரே இடத்தில் முழுமையாக தெரிந்துகொள்ளும் பொருட்டு ரயில்வே அமைச்சகம் சார்பில் மைக்ரோ வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. ரயில்வே வெப்சைட் முகவரி : https://www.railbudget2016.indianrailways.gov.in இந்த மைக்ரோ வெப்சைட்டில், இந்திய ரயில்வே குறித்த இ-புக்லெட், பட்ஜெட் ஆர்ச்சீவ்ஸ், அதிகமாக கேட்கப்பட்ட கேள்விகள், புகைப்பட ஆல்பம் உள்ளிட்டவை விரைவில் இணைக்கப்பட உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.