Home Blog Page 5802

நெல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ‘தல’ அஜீத் சிறப்பு பூஜை

ஆந்திராவில் நெல்லூர் பகுதியில் கங்காபட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில்பற்றி அஜீத் விவரம் அறிந்தார். இதையடுத்து குடும்பத்துடன் நேரில் சென்று வழிபட முடிவு செய்தார்.

மனைவி ஷாலினியுடன் 2 தினங்களுக்கு முன் கங்காபட்டினம் சென்ற அஜீத் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அஜீத் வரும் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. நட்சத்திர ஓட்டல் எதிலும் தங்காமல் ஊரில் உள்ள ஒரு வீட்டில் ஷாலினியுடன் அஜீத் தங்கினார். கிராம மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டு போட்டோ எடுக்க அனுமதி கேட்டனர். அவர்களுடன் நின்று புகைப்படத்துக்கு அஜீத் போஸ் தந்தார்.

மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் ‘காஷ்மோரா’

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல் இயக்கத்தில கார்த்தி ,நயன்தாரா ஸ்ரீதிவ்யா நடிக்கும்  ‘காஷ்மோரா’ படத்தின் கடைசி 15 நிமிட காட்சிகளை மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் இணைகிறார் ஹன்சிகா

நடிகர்கள்  ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் நடிகை  ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காரு அரவிந்த்சாமி..ஹன்சிகா ஹீரோயின நடிக்கும் இந்த படத்துக்கு ‘போகன்’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் இணைகிறார் ஹன்சிகா

நடிகர்கள்  ஜெயம் ரவி, அரவிந்த்சாமியுடன் நடிகை  ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்காரு அரவிந்த்சாமி..ஹன்சிகா ஹீரோயின நடிக்கும் இந்த படத்துக்கு ‘போகன்’ என தலைப்பிடப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

இந்தோனேசியாவை விபசாரமற்ற நாடாக மாற்றபடும்: அமைச்சர் அறிவிப்பு

இந்தோனேசியா நாட்டில் விபசார தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுமார் நூறு இடங்களில் இயங்கிவரும் விபசார விடுதிகளை நிரந்தரமாக மூடிவிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் சமூகநலத்துறை மந்திரி கோஃபிபா இந்தர் பரவான்ஸா தெரிவிக்கையில், ஜகர்தாவின் வடக்குப்பகுதியில் உள்ள அனைத்து விபசார விடுதிகளையும் காலி செய்து அதில் இருக்கும் பெண்களை வெளியேற்றும் நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் தொடரும்.

இன்னும் மூன்றாண்டுகளுக்குள் மேலும் 100 சிகப்பு விளக்குப் பகுதிகள் காலி செய்யப்படும். 2019-ம் ஆண்டுக்குள் விபசாரமற்ற நாடாக இந்தோனேசியாவை அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

கத்தார் ஓபன் காலிறுதிக்கு முன்னேறியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி

கத்தார் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் ஆட்டத்தில் சீன ஜோடியை 3 செட்களில் வீழ்த்தி சானியா-ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம்  இந்த ஜோடி தொடர்ச்சியாக 41-வது போட்டியில் வென்றுள்ளது.

சீன ஜோடியான யீ-ஃபான் ஸூ, ஸைசை ஸெங் ஆகியோர் கடும் சவால் அளித்த போதும், சானியா-ஹிங்கிஸ் ஜோடி 6-4, 4-6, 10-4 என்ற செட்களிஒ போராடி வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தனர்.

உலகின் நம்பர் 1 மகளிர் இரட்டையர் ஜோடியான சானியா-ஹிங்கிஸ் ஒரு மணி நேரம் 24 நிமிடங்கள் போராடினர். 2-வது செட்டில் தரவரிசையில் இல்லாத அந்த சீன ஜோடி 6-4 என்று வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

அதன் பிறகு சூப்பர் டை பிரேக்கரில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி எழுச்சி பெற்று 10-4 என்று வெற்றி பெற்றனர்.

நேபாள விமான விபத்தில் 23 பேர் பலி

நேபாளம் மலைப் பகுதியில் 21 பேருடன் சென்ற சிறிய ரக விமானம் மாயமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கு மலை பகுதியில் நிலவிய அடர்ந்த பனி மூட்டமே காரணம். மயமான விமானத்தை தேடும் பணிகள் நடந்து வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாகவும் நேபாள நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 2-0 என்று தொடரைக் கைப்பற்றி தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

நம்பர் 1 நிலை குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், “இது தங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம். ஒவ்வொரு தொடரையும் வெற்றி பெற விரும்புகிறோம், அதுவும் அயல்நாடுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு இலக்காகவே எங்களுக்கு மாறியுள்ளது.  இங்கு வரும்போது 2-0 என்று வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறுவோம் என்று தெரியும்.   இப்போது அணிக்கு உள்ள சவால் என்னவெனில் இந்த முதலிடத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து வெற்றி பெற்று தக்கவைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பஞ்சம் போக்கிய வள்ளல்

காலையிலே பத்திரிகைகளைப் பார்த்தேன்.  இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் வாழ்த்து என்ற பெயரால், வரவேற்பு என்ற பெயரால், தலைவர்களைப் பாராட்டுவது என்ற பெயரால், என்னென்னவோ விளம்பரங்களைச் செய்கிறார்கள். “ஆண்டவரே’ என்கிறார்கள்- “கடவுளே’ என்கிறார்கள் – “பரமேஸ் வரியே” என்கிறார்கள் – “எங்களைக் காக்க வந்த ஆண்டவனே” என்றெல்லாம் கவிதைகளை இயற்றுகிறார்கள். இவைகளெல்லாம் பத்திரிகைகளிலே வருகிறது. 

காலையிலே இன்றைக்கு நான் தங்கியிருந்த இடத்திற்கு தம்பி வேலு வந்தபோது ஒன்றைச் சொன்னேன் – அப்போது சற்றுக் கடுமையாக அவரிடத்திலே கோபித்துக் கொண்டேன்.  “எல்லாம் சரி – என்னை தந்தை பெரியாரின் தொண்டனே என்று வாழ்த்துங்கள் – அண்ணாவின் தம்பியே என்று அழைத்து வாழ்த்துங்கள். ஆனால், “வள்ளுவரே” என்றும், “தொல்காப்பியனே” என்று சொல்லி, என் மனதைப் புண்படுத்தாதீர்கள் என்று நான் அவரிடத்திலே (எ.வ.வேலுவிடம்) சொன்னேன். அதைச் சொன்னேனா, இல்லையா என்பதை அவரிடத்திலே நீங்கள் கேட்டுப் பார்த்தால் சொல்வார். 

ஏனென்றால், ஒருவரைப் பெருமைப்படுத்துகிற அளவிற்கு –  என்மீது என்னதான் ஆசையிருந்தாலும், என்னதான் என்மீது அன்பு இருந்தாலும், என்னைப் பாராட்ட வேண்டுமென்று கருதினால். “பெரியாரின் தொண்டன்” -“அண்ணாவின் தம்பி” –  “தொண்டர் களுக்குத் தோழன்” –  “ஏழைகளுக்குத் தோழன்” என்று சொல்லுங்கள். ஆதிதிராவிடர்களுக்கு, அனாதை மக்களுக்கு, நோயுற்ற குழந்தைகளுக்கு – இன்றைக்கு இந்த அரசு ஆற்றுகின்ற பணிகளை யெல்லாம் ஒன்றுபடுத்தி, அந்த நிலையிலேயிருந்து புகழுங்கள்.  அதை விட்டு விட்டு, “தொல்காப்பியரே” என்றும், “வள்ளுவரே” என்றெல்லாம் சொன்னால், அவர்களுடைய காலடிக்குக்கூட நான் சமம் அல்ல. அவர்களுக்கு நான் எந்த வகையிலும் பொருத்தமானவன் அல்ல. எனவே, தயவு செய்து – வேலு அவர்களுக்கு நான் காலையிலே சொன்ன –  கோபத்தோடு சொன்ன அந்த எச்சரிக்கையை நம்முடைய கழகத் தோழர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  இந்தத் திருமணத்திலே இதுதான் நான் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கு விடுக்கின்ற செய்தியாகும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

(பின் குறிப்பு: இதில் நம் கற்பனை, எள்ளளவும் எள்முனையளவும், கடுகளவும் கடுகுத் தோலளவும் இல்லை…. எல்லாமே ஒரிஜினல். நம் கற்பனை வறட்சியைப் புரிந்து கொண்டு ‘டாக்’ கொடுத்த டாக்-டர் வாழ்க! கற்பனைப் பஞ்சத்தைப் போக்கிய வார்த்தை வள்ளல் வாழ்க வாழ்க!)

காதிலே பூ!

கையில் கொடுத்தது..

காதில் வைப்பதற்கு!