ஆஸ்திரேலியா – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 2-0 என்று தொடரைக் கைப்பற்றி தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
நம்பர் 1 நிலை குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், “இது தங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம். ஒவ்வொரு தொடரையும் வெற்றி பெற விரும்புகிறோம், அதுவும் அயல்நாடுகளில் வெற்றி பெறுவது என்பது ஒரு இலக்காகவே எங்களுக்கு மாறியுள்ளது. இங்கு வரும்போது 2-0 என்று வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறுவோம் என்று தெரியும். இப்போது அணிக்கு உள்ள சவால் என்னவெனில் இந்த முதலிடத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து வெற்றி பெற்று தக்கவைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


