Home Blog Page 5857

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புது தில்லி:

ஜல்லிக்கட்டுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்த புகார்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதை அடுத்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது தொடர்பான அரசு அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. இதை அடுத்து, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மனுதாரர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் முன்வைத்த வாதத்தின் போது, “மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் ஏற்கெனவே தனது தீர்ப்பில் கூறியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்தப் போட்டி மிருக வதை தடைச் சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறினார்கள்.

அவர்களுடைய வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை இன்று விசாரிக்கப்படும் என்று கூறினர். அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகின்றன.

மால்டா கலவரப் பகுதியைப் பார்வையிட பாஜக., எம்பி.,க்களுக்கு அனுமதி மறுப்பு

மால்டா: 

மேற்கு வங்க மாநிலத்தில் கலவரம் ஏற்பட்ட பகுதியை பார்வையிடச் சென்ற பாஜக., எம்பி.,க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக.,வுக்கும் இடையே அரசியல் மோதல் முற்றி வருகிறது. அண்மையில்,மேற்கு வங்கத்தில் மால்டா அருகே கலியாசக் பகுதியில் கடந்த 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. காவல் நிலையங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வன்முறையால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள். கலவரக்காரர்கள் மீது மேற்கு வங்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், மதக் கலவரம் ஏற்படவில்லை என்றும், பிஎஸ்எப் வீரர்களுடன் உள்ளூர்க்காரர்களுக்கு பிரச்னை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதனால், வன்முறையாளர்களைத் தடுத்து நிறுத்தாத திரிணாமுல், அவர்களைத் தூண்டி விடுகிறது என பாஜக., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனிடையே, மால்டா ரயில் நிலையத்தில் நேற்று காலை 6 மணிக்கு, பாஜக., தலைவர் அமித்ஷா உத்தரவில், கலவரப் பகுதியை பார்வையிடுவதற்காக வந்திறங்கிய அக்கட்சி எம்.பிக்கள் பூபேந்திர யாதவ், ராம் விலாஸ் வேதாந்தி, எஸ்.எஸ்.அலுவாலியா உள்ளிட்டோரிடம், கலியாசக் பகுதியில் தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதால், திரும்பிச் செல்லும்படி போலீசாரும் மாவட்ட அதிகாரிகளும் தெரிவித்தனர்.

வெகுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், இறுதியில், வேறு வழியின்றி மேற்கு வங்க அரசு இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத் தக்கது எனக் கூறி திரும்பிச் சென்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி தி.மு.க ஆர்ப்பாட்டம்

 

தி.மு.க மகளிர் அணி சார்பில் கோவை மாநகர் செஞ்சிலுவை சங்கம் அருகில் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி வருகிற 30–ந் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

 

பாராளுமன்ற உறுப்பினரும் தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழி தலைமையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர், புறநகர் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, வீரகோபால், தமிழ் மணி, சி.ஆர்.ராமச்சந்திரன், மகளிர் அணி புரவலர் விஜயா தாயன்பன், மகளிர் தொண்டர் அணி, துணை செயலாளர் மீனா லோகு முன்னிலை வகிக்கிறார்கள்.

 

முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், கோவை மு.ராமநாதன், பொங்கலூர் பழனிச்சாமி, விடுதலை விரும்பி, இரா. மோகன் மற்றும் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் அணியினர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

படிப்பில் கவனம் செலுத்தும் அப்சல் குரு மகன்; பத்தாம் வகுப்பில் 95% மதிப்பெண் எடுத்து சாதனை

புது தில்லி:

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 2013ல் தூக்கில் இடப்பட்ட முக்கிய குற்றவாளியான அப்சல் குருவின் மகன் ஹலிப் குரு 10 ஆம் வகுப்புத் தேர்வில் 95% மதிப்பெண் எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அப்சல் குரு மகன் படிப்பில் கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை நடத்திய இந்தத் தேர்வில் ஹலிப் குரு 500 க்கு 474 மதிப்பெண் எடுத்துள்ளான். எழுதிய 5 பாடங்களிலும் A1 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். கஷ்டமான சூழ்நிலையிலும் சாதித்த மாணவன் என சமூக ஊடகங்களில் ஹலிப் குருவுக்கு பாரட்டுக்கள் குவிகின்றான.

2013ல் காஷ்மீர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஹலிப் குரு தான் ஒரு மருத்துவராக வரவேண்டும் என தெரிவித்திருந்தான். அப்பாவுக்கு நான் ஒரு மருத்துவராக வர விரும்புவது தெரியும்; அதற்காக அவர் என்னை கடினமாக உழைக்கச் சொல்வார். நான் அவரை ஜெயிலில் சந்திக்கச் செல்லும் போதெல்லாம் அதையே திரும்பத் திரும்பச் சொல்வார். நான் 2013 ஆகஸ்ட் மாதம் அப்பாவை சந்திக்க சென்ற போது அவர் எனக்கு குரான் புத்தகத்தையும் அதனுடன் ஒரு அறிவியல் புத்தகத்தையும் பரிசாக தந்தார் என ஹலிப் குரு தனது பேட்டியில் கூறியிருந்தான்.

அப்சல் குருவின் மகனாவது நல் வழியில் திரும்பி படிப்பில் கவனம் செலுத்தி நாட்டுக்கு பலன் தரும் வகையில் திகழ வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா தண்டனை பெறும் சூழல்; அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் கூட்டணி: ராமதாஸ்

மேட்டுப்பாளையம்:

முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெறும் சூழல் உள்ளது; அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்பவருடன் மட்டுமே கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

உதகையில் நடைபெற்ற பசுந்தேயிலை விலை உயர்வு குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட ராமதாஸ், கோவை செல்லும் வழியில் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,

கரும்புக்கான கொள்முதல் விலை ரூ. 2,850 என உயர்த்தி வழங்கப்படும் என்று புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள ரூ. 1,000 கோடியை வழங்காமல், தேர்தலை மனதில் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் நிலையைக் கருதி, கரும்பு டன்னுக்கு ரூ. 4000-ஆக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட பிப்ரவரி 2-ஆம் வாரத்தில் விருப்ப மனு வழங்கப்படும். அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைக்கப்படும்.

2ஜி வழக்கில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இதில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தண்டனை பெறுவர். முதல்வர் ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கும் பிப்ரவரி 2-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா தண்டனை பெறும் சூழ்நிலை உள்ளது என்றார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

 
மத்திய அரசு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியின் போது துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் கூறினார்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
 
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழக அரசும் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை வற்புறுத்தி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு கடந்த 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கையை மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது.
 
 
இதனால் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
 
இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் ஆர்வலர்களும் மற்றும் குற்றம்சாட்டி மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
 
இந்த நிலையில், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இது நாள் வரை மொத்தம் 13 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
 
அந்த மனுக்களில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் பிற மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவற்றில் இரு மனுக்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுக்கள் ஆகும். அதாவது, மத்திய அரசின் அறிவிக்கை நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாக அவற்றில் கூறப்பட்டு உள்ளது.
 
நேற்று மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது.மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் மற்றும் சித்தார்த் லுத்ரா கியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
 
அவர்களது வாதத்தின் போது உச்ச நீதிமன்றத்தில் கூறியதாவது:–
 
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2014–ம் ஆண்டு மே 7–ந் தேதி வழங்கிய தீர்ப்க்கு எதிராக வெளியிட்டுள்ள அறிவிக்கை, முற்றிலும் மத்திய அரசு நீதிமன்றத்தை அலட்சியப்படுத்துவதாக உள்ளது. ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்த கூடாது என கூறப்பட்டு உள்ளது.
 
ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறி உள்ளது. இதுபோன்ற போட்டிகள் காளைகளின் நலனுக்கு எதிரானது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது.
 
ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்த போட்டி மிருகவதை தடை சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அறிவிக்கை மூலம் மத்திய அரசு மீறுவது சட்டவிரோதமானது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். என மூத்த வழக்கறிஞர்கள் கூறினார்கள்.
 
அவர்களுடைய வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த மனுக்கள் 12-01-2016 (இன்று) விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெறவுள்ளன.
 
இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் அது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக்கொண்டு தங்கள் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்து ‘கேவியட்’ மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

மூட்டை பூச்சிக்கு பயந்து வீடுகளை கொளுத்திய வாலிபருக்கு தீவிர சிகிச்சை!

 
அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஜோகனான் லர்சோனா (40) என்பவர் தங்கியிருந்த அவரது வீட்டில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் இருந்ததை கொன்று ஒழிக்க முடிவு அவர் செய்தார்.
 
அதற்காக அமெரிக்காவில் உள்ள மிசிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் உள்ள அவரது வீடு முழுவதும் ஆல்கஹாலை அடித்தார். அந்த நிலையில் அவரது கண்ணில் ஒரு மூட்டை பூச்சி தென்பட்டது. அதனை கொல்ல சிகரெட் லைட்டரை பற்ற வைத்து அதன் மீது வைத்து பொசுக்கினார்.அப்போது லைட்டரில் இருந்து வெளியான தீ வீடு முழுவதும் பிடித்து பின்னர் பக்கத்து வீடுகளுக்கும் பரவி 4 வீடுகளில் தீ பிடித்து பொருட்கள் சேதமடைந்தன.
 
நடைபெற்ற தீ விபத்தில் மூட்டை மூட்டை பூச்சிக்கு பயந்து அதை கொல்ல வீட்டை கொளுத்திய லர்சோனா உடல் முழுவதும் தீயில் கருகியது. அவர் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
அமெரிக்காவில் மூட்டை பூச்சி தொல்லை அதிகம் உள்ள நகரமாக பெரிய நகரங்களில் ஒன்றாக டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பிலா டெல்பியா 5–வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கத்து

“அம்மா” தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி “அம்மா” தான்! : மருத்துவர் சேதுராமன்

 
தமிழகத்தின் நிரந்தர முதல்வர் புரட்சித் தலைவி “அம்மா” தான்! என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் கூறியுள்ளார்.
 
தஞ்சை மாவட்டம் பேராவூரணி நடேசகுணசேகர திருமண மண்டபத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நேற்று (10-01-2016) அதன் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.அந்த கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.தேவர், மாநிலப் பொருளாளர் எம்.கே.செந்தில் முன்னிலை வகித்தனர். நடை பெற்ற கூட்டத்தில் 896 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பொதுக்குழு கூட்டத்தில் ஒன்பது பொது தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவன தலைவரும், மருத்துவருமான சேதுராமன் மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் பேசியதாவது :-
 
முதல்வர் பதவிக்குஆசைப்பட்டு எத்தனை பேர் அலைந்தாலும், தமிழகத்தில் மீண்டும் முதல்வராகப் போவது புரட்சித் தலைவி தான். எதிர்க்கட்சிகள் புரட்சித் தலைவி அம்மாவுக்கு எதிராக எத்தனை சக்ரவீயூகங்கள் அமைத்தாலும் நிரந்தர முதல்வர் “அம்மா” தான் – 2016 தேர்தலில் தமிழக மக்கள் எழுதப்போகும் இந்த தீர்ப்பை யாராலும் மாற்றி எழுத முடியாது.“மக்களால் நான் மக்களுக்காக நான்” என்று சொல்லி ஆட்சி நடத்தும் “அம்மா” வேண்டுமா? இல்லை மகனை முதல்வராக்க ஆசைப்படும் கருணாநிதி வேண்டுமா? என்று கேட்டால் தமிழக மக்கள் உச்சரிப்பது “அம்மா” பெயரைத்தான்.
 
மற்ற கட்சிகள் சில முதல்வர் ஆசையில் திரிகின்றன இவர்கள் எல்லாம் விட்டில் பூச்சிகள், இந்த மின்மினி மேனாக்கிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கப் போவது இல்லை புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் கூட்டணியில் தான் நமது அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் பத்தாண்டுகாலமாக தொடர்ந்து இருக்கிறது. இந்த முறை நமக்கு அங்கீகாரம் தரும் அளவுக்கு “அம்மா” கூடுதலாக தொகுதிகளைத் தருவார். அப்படி அவர் தந்து விடக்கூடாது என்தற்காக சில குள்ளநரிகள் நமக்கு எதிராக பல பொய்ப்புகார்களை ஊரெல்லாம் உளறிக்கொண்டு திரிகிறார்கள்.
 
“டாக்டர் சேதுராமன் யார்” என்று புரட்சித் தலைவி அம்மாவுக்கு நன்கு தெரியும் பதவி ஆசைக்காக அலைபவன் இல்லை நான். பசும்பொன் தேவர் கொள்கைகளை லட்சியமாகக்கொண்டு நாம் செயல்படுகிறோம். புற்றீசல் போல நம் சமுதாய ஒற்றுமையைக் கெடுக்க சிலர் சதி செய்கிறார்கள்.
அத்தனை சதிகளையும் முறியடித்து மூவேந்தர் முன்னணிக் கழகம் புரட்சித் தலைவி “அம்மா”வின்ஆதரவோடு சட்டமன்றத்துக்குள் இந்த முறை நிச்சயம் செல்லும் மூன்று தொகுதியோ, ஐந்து தொகுதியோ எத்தனை தொகுதி என்பதை புரட்சித் தலைவி அம்மா தருகிறாரோ அதனைப் பெற நாம் தயார். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சாதனைகளை மக்களிடம் சொல்ல தமிழக முழுவதும் விரைவில் பிரச்சாரம் செய்ய உள்ளேன் என்று மருத்துவர் சேதுராமன் பேசினார்.
 
கூட்டத்தில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொது தீர்மானங்களாவது :-
 
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக சட்ட விதி பிரிவு 9ன் படி கூட்டப்பட்டுள்ள மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் 11-10 2015, அன்று நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விதி எண் 10 /பிரிவு 4ன் படி மாநிலப் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு எஸ்.ஆர். தேவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும்,பிரிவு -5ன் படி மாநில இணைப் பொதுச் செயலாளர்கள் பொறுப்புக்கு இரா.பிரபு என்கிற ஆர்.பிரபாகரன், .வி.டி.பாண்டியன், பெ.கழுவன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும், பிரிவு – 6ன் படி மாநிலப் பொருளாளர் பொறுப்புக்கு எம்.கே.செந்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் இந்தப் பொதுக்குழு ஒருமித்த கருத்துடன் ஏற்று புதிய நிர்வாகிகளை அங்கீகாரம் செய்தது.
 
கடந்த 2015ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா சுனாமி தாக்கிய போது தமிழக போர்க்கால நடவடிக்கை எடுத்தாரோ, அதை விட மூன்று மடங்கு வேகத்தில் செயல்பட்டு பல்லாயிரம் உயிர்களை காப்பாற்ற விரைவு நடவடிக்கை செததோடு, 30 இலட்சம் பேருக்கு நிவாரண தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி லஞ்ச லாவண்யமில்லாத அரசு புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான அரசு என்பதை மீண்டும் உணர்த்தியதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு பாராட்டி, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
மழை வெள்ளப் பாதிப்பு அடைந்த சென்னை மாநகரப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக சென்னை மண்டல நிர்வாகிகள் இணைப் பொதுச்செயலாளர் ஆர்.பிரபாகரன்,சென்னை மண்டல தலைவர் எஸ்.ஏ.கிருஷ்ணமூர்த்தி, சென்னை மண்டல செயலாளர், பி.பெரியதுரை, மாவட்ட நிர்வாகிகள் ஜாக்குவார்நாதன், பி.ஆர்.சி.பாண்டியன், ந.பழனிவேல், து.சண்முகவேல் பாண்டியன், சேப்பாக்கம் சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், நிவாரணப் பொருட்களாக ஐந்து லட்சம் மதிப்பில் ஆடைகள், பிஸ்கட், குடிநீர் வழங்கிய மாநிலப் பொருளாளர் எம்.கே.செந்தில் அவர்களுக்கும், நிவாரணப் பொருட்களாக ஒரு இலட்சம்மதிப்பில் ஆடைகள், உணவு பொருட்கள் வழங்கிய இணைப் பொதுச்செயலாளர் வி.டி.பாண்டியன், திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார், இளைஞரணிச்செயலாளர் அருண்பாண்டியன் ஆகியோருக்கும், 45 நாட்களுக்கும் மேலாக தலைநகர் சென்னையிலே முகாமிட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தொடர்ந்து இலவசமருத்துவ முகாம் நடத்தி, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து பொருட்கள், நாப்கின், கொசுவலை, போர்வை உள்ளிட்ட பொருட்களை வாரி வழங்கிய கழக நிறுவனர் தலைவர் மருத்துவர் சேதுராமன் அவர்களுக்கும், மருத்துவப் பணியாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்ந்த 15 டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவக் குழுவிற்கும் இந்தப் பொதுக்குழு பாராட்டுதலையும், நன்றிதனையும் தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
 
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதுகட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெறாமல் சிலர் தடுத்த போது எந்த வித நடவடிக்கையும் எடுக்காது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகித்த தி.மு.கவும் இப்போது ஜல்லிக்கட்டு நிகழ்வில் இரட்டை வேட அரசியல் நடத்தியது, இப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஐனதா அரசு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவின் கோரிக்கையையும், தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் போராட்டத்தையும் உணர்ந்து தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டிற்கு அனுமதி தந்துள்ளதற்கு இந்தப் பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
தஞ்சை சரபோஜி மன்னரால் 200 ஆண்டுகளுக்கு முன்பாக பேராவூரணி தொகுதி மல்லிப்பட்டினம் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்ட ”மனோரா” எட்டு அடுக்கு கோபுரம் தமிழக தொழில் நுட்பம் கலந்து ஆங்கிலேய கலை வடிவத்தின் சின்னமாக திழ்கிறது. தமிழ், தெலுங்கு,மராட்டி, உருது, ஆங்கிலம் கல்வெட்டுகளுடன் திகழும் “மனோரா” கோபுரத்தை தேசிய சுற்றுலாத் தலமாக மத்திய அரசு அறிவிப்பதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க மல்லிப்பட்டினம்துறைமுகத்தை மேம்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிச் சீரமைக்க வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
 
தஞ்சை – பட்டுக்கோட்டை இடையே தடை பட்டு நிற்கும் ரயில் போக்குவரத்து, நிறுத்தப்பட்ட – காரைக்குடி – பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி – சென்னை இடையேயான இரயில் சேவை அகல இரயில் பாதையாக சீரமைக்கும் திட்டங்களுக்கு கடந்த காலங்களில் தடையாக நின்ற தி.மு.கவை இந்தப் பொதுக்குழு கண்டிப்பதோடு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ள இரயில்வே நிதி நிலை அறிக்கையில் நிலுவையிலுள்ள தஞ்சைப் பகுதி ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதியை இரயில்வே அமைச்சகம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் நடத்திடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதி மீனவர்களுக்கு தொடர்ந்து இலங்கை கடற்படை இடையூறு செய்து வருகிறது. இந்தப் பகுதியில் சர்வதேச கடல் எல்லை வரையறை செய்வதில் மத்திய அரசு தாமதம் செடீநுது வருவதால் தான் இலங்கை கடற்படை அடிக்கடி தமிழக மீனவர்களை கைது செய்வதோடு, படகு மீன்பிடி வலைகள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகிறது. இலங்கையின் இந்த சர்வாதிகார செயலை கண்டு கொள்ளாமல் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தாது தொடர்ந்து மெத்தனம் காட்டி வருவதை இந்தப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
பேராவூரணியில் அரசு கலைக்கல்லுhரி அமைத்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மாவை பாராட்டுவதோடு, பேராவூரணிப் பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகம் இருப்பதால் கொப்பரை தேங்காய் கொள்முதல் வளாக மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேராவூரணிப் பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையை சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றிட அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் முன்னின்று செயல்படும் என்பதை இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது என கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
நடைபெற உள்ள 2016- சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து தான் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்போட்டியிடும். 10 ஆண்டுகளாக நாம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் தலைமையிலானகூட்டணியில் தான் தொடர்ந்து நீடித்து வருகிறோம். அதில் இன்று வரை நாம் பின்வாங்கவில்லை.2011 நடந்த பொதுத் தேர்தலில் நமக்கு போட்டியிட வாய்ப்பளித்த புரட்சித் தலைவி அம்மா இந்த முறை நமக்கு கூடுதலாக தொகுதிகள் ஒதுக்குவார் என நம்புகிறோம். ஆனால் நம்மை வளரவிடாமல் தடுக்கிற முயற்சியாக புரட்சித் தலைவி “அம்மா” அவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்கிற முகமாக சில சுயநல சக்திகள் பொய்யான கட்டுக்கதைகளை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதனை இந்தப் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. 2016 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெறுவது, வேட்பாளர்கள் தேர்வு செய்வது போன்ற தேர்தல் பணிகளில் கழக நிறுவனர் தலைவருக்கு இந்தப் பொதுக்குழு முழு அதிகாரம் அளிக்கிறது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
நடைபெற்ற இந்தப் பொதுக்குழு கூட்டம் ஏற்பாடுகளை தஞ்சை புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, இளைஞரணி மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் அயப்பன், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கே.பி.கருணைக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இன்றைய நம் வலிகள் நாளைய மாற்றமாக மலரும்: கபிலன் வைரமுத்து!

நாகை,தஞ்சை,திருச்சி,கடலூர்,காரைக்கால் மற்றும் புதுவையைச் சேர்ந்த ரோட்டரி சங்கங்களின் பிரம்மாண்ட மாநாடு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமையன்று நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘வலிமை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் கபிலன்வைரமுத்து ஆற்றிய உரையின் சுருக்கம் கீழ் வருமாறு: ”தகவல்யுகத்தின் மிகப்பெரிய சவால் உண்மைத் தகவலை அறிவது. சொல்லப்படுகிற செய்திகளில் இருந்து சொல்லப்படாத செய்திகளை புரிந்துகொள்ள ஒரு பகுத்தறிவு வலிமை தேவைப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்களும் வணிக அரசியலும் நமக்கு முன்னால் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளங்களில் விழுந்து விழுந்து எழுந்து ஓடுகிறோம். என்றாவது ஒருநாள் எழ முடியாத அளவிற்கு ஒரு பெரும் பள்ளம் தோண்டப்படுவதற்குள் நாம் விழித்துக்கொள்ள வேண்டும். மேற்கத்திய வளர்ச்சி தத்துவமும் நகரமயமாதலும் தனி மனித முன்னேற்றத்தை மையப்படுத்துகிறதா அல்லது அதிநவீன முதலாளித்துவத்தை உருவாக்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. 1947க்கு முன் இருந்ததைவிட இப்பொழுதுதான் நாம் இன்னும் விசுவாசமான அடிமைகளாக இருக்கிறோம் என்று தோன்றுகிறது. எங்கே எதைத் தொடங்கவேண்டும் என்று சதா அலைபாய்வது மேற்கத்திய வளர்ச்சி தத்துவம். எங்கே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற தெளிவுதான் இந்திய தத்துவம். அந்தத் தெளிவை நாம் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. வெள்ளம் என்ற வலியில் இருந்து மனிதநேயம் என்ற வலிமை பிறந்தது போல், இன்றைய நம் வலிகள் நாளைய மாற்றமாக மலரும் என்று நம்புவோம்” இவ்வாறு கபிலன்வைரமுத்து பேசினார். ரோட்டரி சங்கத் தலைவர் திரு. குணசேகரன், விழா தலைவர் மணிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக காலை நடந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி திரு.கற்பகவிநாயகம் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி சிறப்புரையாற்றினர். தஞ்சை தொழிலதிபர் திரு.ஆசிஃப் அலி, திரு.செழியன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 நிர்ணயம்: ஜெயலலிதா

சென்னை:

கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையைவிட ரூ. 650 கூடுதலாக நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு ரூ 2,300 என நிர்ணயம் செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

வேளாண் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் விவசாயப் பெருமக்களின் வாழ்வு செழிப்படையும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

நெல் சாகுபடி உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்படும் பரப்பினை அதிகரித்தல், பயறு வகைகள் சாகுபடியை பெருக்குதல், தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், துல்லிய பண்ணையம் மூலம் சாகுபடி மேற்கொள்ளுதல், சொட்டுநீர் பாசன முறையை ஊக்குவிக்க மானியம் வழங்குதல், விளைபொருட்களை பாதுகாப்பாக வைக்க கிடங்குகள் அமைத்தல், வேளாண் இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு மானியம் அளித்தல், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் என பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாகத் தான் உணவு தானிய உற்பத்தியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய சாதனையை தமிழகம் படைத்து வருகிறது.

கரும்பு உற்பத்தி திறனை அதிகரித்து, கரும்பு உற்பத்தியை பெருக்கும் வகையிலும், சர்க்கரை ஆலைகள் முழு அரவைத் திறனை அடையும் வகையிலும், நிழல்வலை கூடத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்தல், பாசன நீர் மற்றும் உரங்களை திறனுடன் பயன்படுத்துதல், நுண்ணீர் பாசனத்தின் மூலம் உரமிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட நீடித்த நவீன கரும்பு உற்பத்தித் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நுண்ணீர் பாசன உபகரணங்களுக்கென சிறு மற்றும் குறு விவசாயகளுக்கு 100 விழுக்காடு மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 விழுக்காடு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக கரும்பு மகசூல் திறனில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை நிர்ணயித்து வருகிறது. மத்திய அரசு நிர்ணயம் செய்யும் நியாயமான மற்றும் ஆதாய விலையை விட உயர் அளவில் இந்த பரிந்துரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

2015-2016 ஆம் ஆண்டிற்கான கரும்பு பருவத்திற்கு நியாயமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாய் உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன்  மூலம்  கரும்பு விவசாயிகளுக்கு நடப்பு கரும்புப் பருவத்தில் டன் ஒன்றுக்கு  2,850 ரூபாய் கிடைக்கும்.

அரசின்  இந்த நடவடிக்கை,  கரும்பு  சாகுபடி  செய்யும்  விவசாயிகளுக்கு மனமகிழ்ச்சியினை அளிக்கும்