ஊடக துறையினரை அவமானப்படுத்திய சகாயம் – 2016 இளைஞர்கள் எழுச்சி மதுரை மாநாடு
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
விருப்பமுள்ளவர்கள் கூட்டணிக்கு வரலாம், பாட்டாளி மக்கள் கட்சி சாதிக்கட்சி அல்ல ! : மருத்துவர் ராமதாஸ்
ஆப்கன் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசார்–இ–ஷெரிப்பில் இந்திய தூதரகத்திற்குள் துப்பாக்கிகளுடன் நுழைய முயன்ற பயங்கரவாதிகள் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளில் 2 பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் இந்திய தூதரகத்திற்குள் நுழைய முற்பட்டபோது, அதனை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை முறியடித்தது, பின்னர் அங்கு ஆப்கானிஸ்தான் படை விரைந்தது. பயங்கரவாதிகள் இந்திய தூதரகம் அமைந்து உள்ள இடத்தில் வீடு ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, பின்னர் மறைமுகமாக இந்திய தூதரகம் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.
நில அதிர்வை உணர்ந்தேன்: நிர்மலா சீதாராமன்
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பயணம் செய்து வரும் மத்திய அமைச்சர் சீதாராமன், தான் தங்கியிருந்த விடுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
Felt my room shake, in Siliguri government guest house! Hope everyone is ok. #tremor.
— Nirmala Sitharaman (@nsitharaman) January 3, 2016
வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்: முதல்வர்களுடன் பிரதமர் விசாரிப்பு
புது தில்லி:
அஸ்ஸாம், அருணாசப் பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை நில நடுக்கம் உணரப் பட்டது.
இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அருணாசல் முதல்வர் நபம் துகி, மணிப்பூர் முதல்வர் ஓம்கார் இபோபி சிங் உள்ளிட்டோருடன் தாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Spoke to Rajnath ji, who is in Assam, on the situation arising due to the earthquake & asked him to oversee the situation.
— Narendra Modi (@narendramodi) January 4, 2016
Had a telephone conversation with Assam CM Shri Tarun Gogoi on the earthquake in the state & the region.
— Narendra Modi (@narendramodi) January 4, 2016
Spoke to Arunachal Pradesh CM Shri Nabam Tuki on the situation arising in the wake of the earthquake.
— Narendra Modi (@narendramodi) January 4, 2016
Manipur CM Shri Okram Ibobi Singh and I had a telephone conversation. We discussed the post-earthquake situation in Manipur & Northeast.
— Narendra Modi (@narendramodi) January 4, 2016
பதான்கோட் தாக்குதல் குறித்து பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை
புது தில்லி:
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அரசு உயரதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக, பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பெங்களூரில் இருந்து தில்லி திரும்பியதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் தலைமையில் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பதான்கோட் தாக்குதல் குறித்து அஜித் தோவால் விளக்கம் அளித்ததாகவும், இந்தத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடனான உறவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
In Pathankot today, our security forces once again demonstrated their valour. I salute their sacrifice. https://t.co/jqcIYiflzE
— Narendra Modi (@narendramodi) January 2, 2016
விபத்துக்கு முந்தைய நாளில் நேதாஜி என்ன செய்தார்: இணையதளம் வெளியிட்ட தகவல்
லண்டன்:
விமான விபத்தில் சிக்குவதற்கு முந்தைய நாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ன செய்து கொண்டிருந்தார், அவரது பயணம் என்ன என்பது பற்றிய ஆவணங்களை இங்கிலாந்து இணையதளம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய தேசிய ராணுவத்தை அமைத்த, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18ல் தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது. ஆயினும் அதை நேதாஜி ஆதரவாளர்கள் மறுத்து வருகின்றனர். இதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது.
இந்நிலையில், விமான விபத்தை சந்திப்பதற்கு முந்தைய நாளில் அதாவது ஆக.17ம் தேதி, நேதாஜி மேற்கொண்ட பயணம் குறித்த ஆவணங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த இணையதளத்தை நேதாஜியின் உறவினர் ஆஷிஸ் ரே நடத்தி வருகிறார்.
விமான விபத்துக்கு முந்தைய நாள், நேதாஜி, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து புறப்பட்டு, வியட்நாமில் உள்ள சியாகூன் சென்றார். அதற்கு இரு தினங்களுக்கு முன்னர்தான் இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஏற்று ஜப்பான் சரண் அடைந்திருந்தது. இருப்பினும் திட்டமிட்டபடி நேதாஜி ஜப்பான் செல்வதற்கு நேரடி விமானம் கிடைக்கவில்லை. எனவே, ஜப்பான் அதிகாரிகளுக்கும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்துக்கும் தொடர்பாளராக இருந்த ஜெனரல் இசோடா, தைவான் வழியாக ஜப்பானுக்குச் செல்லும் ஒரு விமானத்தில் இரண்டு இருக்கைகள் மட்டும் இருப்பதாக நேதாஜியிடம் தெரிவித்தார். இதன்மூலம், நேதாஜியின் பெரும்பாலான ஆலோசகர்களும், அதிகாரிகளும் அவருடன் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளும்படி, நேதாஜிக்கு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவரும் ஏற்றுக்கொண்டு, தன்னுடன் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஹபிப் உர் ரகுமானையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால், விமானத்தில் அளவுக்கு அதிகமான சுமை இருப்பதாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, நேதாஜி தனது புத்தகங்கள் மற்றும் ஆடைகளில் ஒரு பகுதியை அங்கேயே விட்டுச் சென்றார்.
அதே விமானத்தில், ரஷ்ய விவகாரங்களை கவனிக்கும் ஜப்பானிய ராணுவ அதிகாரி ஷிதேயும் இருந்தார். அவர் சீனாவில் உள்ள மஞ்சூரியாவுக்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் நேதாஜியும் மஞ்சூரியாவுக்கு செல்ல வேண்டும் என்று அவருடைய ஆலோசகர்கள் யோசனை தெரிவித்தனர். அதை நேதாஜியும் ஏற்றுக்கொண்டார்.
விமானம் புறப்படத் தாமதமாகி விட்டதால், திட்டமிட்டபடி தைவானுக்குச் செல்வதற்கு பதிலாக, வழியில் வியட்நாமில் உள்ள டூரன் நகரில் விமானம் தரை இறக்கப்பட்டது. அங்கு ஜப்பானிய அதிகாரிகள், விமானத்தின் சுமையைக் குறைக்கும் விதமாக, விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கிகள், வெடி பொருட்கள் உள்பட 600 கிலோ எடைகொண்ட பொருட்களைக் கீழே இறக்கினர். அன்றைய இரவில், டூரன் நகரில் உள்ள ஓட்டல் மோரினில் நேதாஜி தங்கினார். – என்று அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களில், நேதாஜி மர்மம் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட ஷாநவாஸ் கான் கமிட்டி முன்னர், நேதாஜியின் சுதந்திர இந்திய தற்காலிக அரசு, இந்திய தேசிய ராணுவம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அளித்த சாட்சியங்களும் இடம்பெற்றுள்ளன.
துத்தா நிகித லகுதா: இது பார்த்திபனின் ‘பீப்பீ’ பாடல்
சென்னை:
நடிகர் பார்த்திபன் புதிய பீப்பீ பாடலை எழுதி வெளியிட்டுள்ளார். துதா நிகித லகுதா என்று அர்த்தமற்ற வரிகளைக் கொண்டு நோ மீனிங்ச்., ஒன்லி ஃபீலிங்க்ஸ் என்ற அறிமுகத்துடன் அந்தப் பாடலை யுடியூபில் உலவ விட்டுள்ளார்.
சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நடிகர் பார்த்திபன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். தற்போது சென்னை மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன் வெள்ளப் பாதிப்பு பற்றி இந்தப் பாடலை எழுதி வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நடிகர் பார்த்திபன் கூறுகையில்,
ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள். அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘‘பீப்’’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ’’பீபீ’’ என்று தொடங்குவது போல எழுதினேன்.
இந்தப் பாடலில் வெள்ள பாதிப்பின்போது பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களை ஆட வைத்தேன். இதில் சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். துயரப் பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மக்களிடையே இருக்கும் மனித நேயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கம். மீ அன்ட் யூடியூப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேவை தொடங்கி அதில் இந்த பாடலை பதிவேற்றம் செய்துள்ளேன் … என்றார்

