Home Blog Page 5872

சிம்பு பீப் பாடல்’ வழக்கில் தர்மம் வென்றது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை : டி.ராஜேந்தர்

 
‘பீப் பாடல்’ சர்ச்சை தொடர்பான வழக்கில், சிம்புவுக்கு சென்னை உச்ச நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது தர்மம் வென்றதாக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
பீப்பாடல் சர்ச்சை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் டி.ராஜேந்தர், கூறியதாவது : –
பீப் பாடலை தேவையில்லாமல் பூதாகரமாக்கிவிட்டார்கள். யாரோ ஒரு விஷக்கிருமி அந்தப்பாடலை திருடி, சிம்புவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர். என் மகனின் வாழ்க்கையில் திருப்பமான நாள் இன்று. எங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை நீதிபதியிடம் எடுத்து உரைத்தோம். அதன்படி இந்த வழக்கில் இன்று எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து தர்மம் வென்றது.
பீப்பாடல் விவகாரத்தில் நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, ரேகிணி, சுகாஷினி உள்ளிட்டோரைத் தவிர வேறு யாறும் உதவ முன்வரவில்லை .
எங்களுக்கு ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, குறிப்பாக இறைவனுக்கு நன்றி என்றவர், பாடலை திருடி வெளியிட்டவர்கள் மீது நான் கொடுத்த புகாருக்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று டி.ராஜேந்தர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது குற்றம் சாட்டியுள்ளார்.

ஆண்டு முழுவதும் விடுமுறை எடுக்காமல் கல்விப் பணியாற்றிய ஆசிரியைக்கு விருது

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை எடுக்காமல் கல்விப் பணியாற்றிய முத்து மீனாள் என்ற ஆசிரியைக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

விருது வழங்கும் விழா அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். தேவகோட்டை உதவி தொடக்கி கல்வி அலுவலர் லெட்சுமி தேவி சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார்.

கடந்த 2015 ஒரு ஆண்டு முழுவதும் தற்செயல் விடுப்பு உட்பட எந்த விடுப்பும் எடுக்காமல் எடுக்காமல் அந்த பள்ளியில் கல்விப் பணியாற்றிய இடை நிலை ஆசிரியர் முத்து மீனாளை பாராட்டி லெட்சுமி தேவி விருது வழங்கினார் .

விழாவில் தேவகோட்டை உதவி தொடக்கி கல்வி அலுவலர் லெட்சுமி தேவி பேசியதாவது :-

இன்றைய சூழ்நிலையில் குடும்பத்தின் பல்வேறு வேலைகளுக்கு இடையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் விடுமுறை எடுக்கமால் ஆண்டு முழுவதும் ஓய்வறியா கல்வி பணியாற்றிய ஆசிரியை முத்து மீனாளை பாராட்டி, வாழ்த்தி விருது வழங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் ஆசிரியைக்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைக்கவும், தொடர்ந்து அவரது கல்விப் பணி சிறக்கவும் ,குடும்பத்தினர் அனைவரும் நன்றாக வாழவும் வாழ்த்துகிறேன் என்றார்.

தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன்
பேசியதாவது :-

அரசு உதவி பெறும் பள்ளியில் பெண் ஆசிரியை முத்து மீனாள் எவ்வித விடுப்பும் எடுக்காமல் ஒரு குறிக்கோளுடன் குடும்பத்தையும் கவனித்து , அத்துடன் அரசு விடுமுறை நாட்களிலும் திருச்சி,சென்னை போன்ற இடங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்றது, விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கும் பயற்சி கொடுத்து அழைத்து சென்றதும் பாராட்ட பட வேண்டிய செயல் ஆகும் என்று பேசினார்.

நடை பெற்ற விருது வழங்கும் விழாவில் அந்த பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஆசிரியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.

–  முதுவை ஹியாத்  –
செய்தியாளர் ( தினசரி தமிழ் செய்தித் தளத்தின் வாசகர் )

சகாயம் அறிக்கைக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க அவகாசம் : சென்னை உயர்நீதிமன்றம்

 
கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
தமிழக கிரானைட் முறைகேடு குறித்து சிறப்பு விசராணைக்குழு அமைக்கவும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 2013ல் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி அமர்வு, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக்குழு அமைத்து 2014ல் உத்தரவிட்டது.
கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார். அதன்படி, மதுரை மாவட்டத்தில் மட்டுமே 1,06,000 கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்ய தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார்.
 
அரசு அதிகாரிகளின் துணையில்லாமல் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக , தமிழக அரசு அறிக்கையை ஆய்வு செய்து பதிலளிக்க கால அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்து.
 
இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுன், நீதிபதி புஷ்பா சத்யநாராயணனா ஆகியோர் முன்னிலையில் இன்று வழக்கு விசராணைக்கு வந்தது.
தமிழகஅரசு தரப்பில் ஆஜரான, அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, அறிக்கையை ஆய்வு செய்து வருவதாகவும், விரிவான விளக்கமளிக்க மேலும் 4 வார கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதிகள் தமிழக அரசுக்கு 6 வார கால அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர் .

திருவண்ணாமலையை ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டன் வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை

 
திருவண்ணாமலை மாவட்ட நகரில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் பிடித்த லண்டனை சேர்ந்த வெளிநாட்டு வாலிபர் சிக்கினார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்திற்கு நேற்று மாலை வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்து நிர்வாகத்தினரிடம், தான் ரமணாஸ்ரமத்தையும்,கோயில் மலையையும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுத்து சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும் என கேட்டுள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகத்தினர் படம் எடுக்க அனுமதி கிடையாது என கூறி அந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் ரமணாஸ்ரமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த வெளிநாட்டு வாலிபரை தனி அறைக்கு அழைத்து சென்று சுமார் 1 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில்அந்த வாலிபர் லண்டனை சேர்ந்த ஜோசப்(27) என்பதும், இவர் கடந்த மாதம் 14ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து, மணக்குளவிநாயகர் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி திருவண்ணாமலையை சுற்றி பார்த்த போது ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விமானத்தை பயன்படுத்துவதற்கு லண்டனில் அனுமதி பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையை தொடர்ந்து அவரிடம் இருந்த ஆளில்லா குட்டி விமானத்தை பறிமுதல் செய்து, ஆசிரமத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.
வெளிநாட்டு வாலிபர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம் எடுக்க காரணம் என்ன? இங்கிருந்து படத்தை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் தீட்டியுள்ளாரா? என காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு: விஜய்க்கு போதிய ஆதரவு இல்லை!

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் கூட்டணி அமைக்க அனைத்து கட்சிகளும் தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன. மற்றொருபுறம், தேர்தல் குறித்த கருத்து கணிப்புகளும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களும், பண்பாட்டு மக்கள் தொடர்பகமும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இதில் நடிகர்கள் அரசியலுக்கு வந்து தனி கட்சி தொடங்கினால் ஆதரிப்பீர்களா என்ற கேள்வி உட்பட பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்த கேள்விக்கு ஆதரிக்க மாட்டோம் என்று 65.3% பேர் கூறியுள்ளனர்.

மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ற கேள்விக்கு 17.2% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். கமல் ஹாசனுக்கு 10% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே சமயம் நடிகர் விஜய்க்கு 5% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 27 பேர் இந்த கருத்து கணிப்பை நடத்தினார்கள். மாவட்டந்தோறும் தலா 5176 பேரிடம் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரி பொது நல வழக்கு

விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இன்று
பொது நல வழக்கு தொடரப் பட்டுள்ளது.
அந்த வழக்கை மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும்.அதிமுக-வின் இலவச சட்ட உதவி மையத்தின் செயளாலருமான ஏ. ஜெயராம், தொர்ந்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் வழக்கறிஞர் கூறியுள்ளதாவது :-
‘தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்வேறு குற்றங்களில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மக்களிடையே அச்ச உணவை ஏற்படுத்துகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“எதிர்காலத்தில் பொது மக்களின் அமைதியை அச்சுறுத்தும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை தடுப்பது மிகவும் அவசியம். சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுப்பது போதுமானது அல்ல.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட என்றால் விஜயகாந்தை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய தஞ்சை மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார்

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு 

திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரம் வர்த்த்கம் மிகுதியாக நடைபெறும் நகரமாகும் இங்குள்ள தினசரி காய்கறி மார்கெட்டில் இருந்து ,கோயமுத்தூர் ,திருப்பூர் சென்னை என தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா ,கர்நாடகா என பல்வேறு இடங்களுக்கு இங்கிருந்து காய்கறிகள் செல்வது வழக்கம்  ,இங்குள்ள  காய்கறி மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு ஏற்பட்டுள்ளது ,ஆனால் வெண்டைக்காய் விலை ஏற்றம் காணப்பட்டது.
பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கடந்த வாரம் தேய்காய் கிலோவுக்கு ரூ.29 வரை விற்றது  திடீரென ரூ.17க்கு சரிந்தது. இதனால் தேங்காய் விவசாயிகள் பெரும் கவலையடைந்தனர். ஆனால் பொதுமக்கள் தேங்காய் விலை குறைவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது கடந்தமாதங்களில் மழையின் காரணமாக தேங்காய் வரத்து குறைவாக இருந்தது, இதனால் விலை ஏற்றம் காணப்பட்டிருந்தது, தற்போது தேங்காய் வரத்து வழக்கத்தை விட கூடுதலாக இருப்பதால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் .,மேலும் கடந்த நாட்களில் வெண்டைக்காய்  கிலோ ரூ.30 வரை விற்றது தற்போது  கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து ரூ55க்கு விற்றபனையாகிறது. வழக்கமாக வரும் வெண்டைக்காய் வரத்து இன்றி மிக குறைவாக வந்ததால் வெண்டைக்காய் விலை ஏற்றம் காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர் .

அருணாப்பேரியில் நியாயவிலைக்கடை பூமி பூஜை மற்றும் கல்வெட்டு திறப்புவிழா

அருணாப்பேரியில்   ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ9.20  லட்ச மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள  நியாயவிலைக்கடைக்கான பூமி பூஜை  .மற்றும் கல்வெட்டு திறப்புவிழா நடைபெற்றது ,கீழப்பாவூர் யூனியன் சேர்மன் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்தார், ஒன்றிய கவுன்சிலர்ஞான அருள் பொன்னுத்தாய் முன்னிலை வகித்தார் ,பெத்தநாடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இராதா வரவேற்புரை ஆற்றினார்  ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு  பூமி பூஜையை துவக்கி வைத்து கல்வெட்டினை திறந்து வைத்தார்  .விழாவில் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர்கள் ஐவராஜா ,முடி சூடும்பெருமாள் ,இளைஞரணி செயலார் இருளப்பன் ,கீழப்பாவூர் பேரூர் கழக செயலார் பாஸ்கர் ,அம்மா பேரவை வேல்முருகன் ,ஊராட்சி செயலர்கள் திருமால் முருகன் ,மதனதுரை,அருள்,ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகராஜன் ,ஆண்ட பெருமாள் ,ரமேஷ் ,பொன்னு லட்சுமி பொன்னுத்துரை,ராஜேஸ்வரி முருகேசன் ,எம்.ஜி.ஆர் மன்ற செயலர் வேலுசாமி,சண்முகையா ,ராஜேந்திரன் ,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

கீழப்பாவூரில் 6265 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டது

கீழப்பாவூரில் 6265 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருட்கள்
கீழப்பாவூரில் 6265 பேருக்கு  தமிழக அரசின் விலையில்லா மிக்சி கிரைண்டர் பேன் ஆகியவை வழங்கப்பட்டது
 கீழப்பாவூரில் நடைபெற்ற விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன்  முதற்கட்டமாக தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கினார்
விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன் ,தனி துணை வட்டசியார் (சிறப்புத்திட்டம் செயலாக்கம் )செல்வசுந்தரி மாவட்ட கவுன்சிலர் மு.சேர்மபாண்டியன் ,வருவாய் ஆய்வாளர் மாரிச்செல்வம் ,கிராமநிர்வாக அதிகாரி குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்

பெண்களிடம் அவதூறு பேச்சு தனியார் நிறுவனத்தில் பெண்கள் முற்றுகை

பாவூர்சத்திரம் அருகே அவதூறாக பேசும் ஊழியரை மாற்றக்கோரி பீடிக்கடையை பெண்கள்  முற்றுகையிட்டனர்.
பாவூர்சத்திரம் அருகே மலையராமபுரத்தில் தனியார் பீடி நிறுவனம் உள்ளது. இங்கு இப்பகுதி பெண்கள் இலை, தூள் வாங்கி  பீடி சுற்றி கொடுத்து வந்தனர். இந்நிலையில் இங்கு பணிபுரிந்து வந்த நிறுவன ஊழியர் ஒருவர் பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் வேண்டதகாக வார்த்தை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பெண்கள் நிறுவன ஊழியரை உடனடியாக மாற்றுக்கோரி பீடிக்கடையை முற்றுகையிட்டனர்.
சம்பவம் அறிந்து பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர் ஜெயகுமார் தலைமையில் போலீசார் விரைந்து முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பீடிக்கடையை நிர்வாகிகளை தொடர்புகொண்டு பிரச்சனைக்குரிய ஊழியரை இடம் மாற்ற செய்திட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து முற்றுகையிட்ட பெண்கள் கலைந்துசென்றனர்.
பெண்களின் திடீர் முற்றுகையால் இப்பகுதியில்  பரபரப்பு ஏற்றப்பட்டது