விஜயகாந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட கோரிய பொது நல வழக்கு தள்ளுபடி : உயர் நீதிமன்றம்
தேர்தல் நெருங்குவதால் காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை:
சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், 3 வருடங்கள் ஒரே பதவியில் உள்ள அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்படும் நடவடிக்கை தொடங்கி விட்டது. குறிப்பாக தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி, இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள், சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி.க்கள் என்று அனைத்து மட்டத்திலும் வருகிற ஜனவரி 10-ந் தேதிக்குள் மாற்றங்கள் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னையில் இன்ஸ்பெக்டர்களை மாற்றம் செய்ய போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், 5 கூடுதல் கமிஷனர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவினர், மாற்றம் செய்யப்பட வேண்டிய இன்ஸ்பெக்டர்கள் பட்டியலை தயாரித்து வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
இந் நிலையில் ஐ.ஜி.க்கள் கூடுதல் டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வும், கூடுதல் டி.ஜி.பி.க்கள், டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு உத்தரவும் வர இருக்கிறதாம். கூடுதல் டி.ஜி.பி.க்கள் ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜார்ஜ் ஆகியோர் டி.ஜி.பி.க்கள் பதவி உயர்வு பட்டியலில் உள்ளனராம்.
வடசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் பதவி காலியாக உள்ளது. அந்தப் பதவிக்கு வருவதற்கு 3 அதிகாரிகள் கடும் போட்டி போடுகிறார்கள். இதையொட்டி சென்னையில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் மத்தியிலும் மாற்றங்கள் வரலாம் என்று பேசப்படுகிறது.
இதற்கிடையில் சென்னையில் நீண்ட நாட்களாக ஒரே பதவியில் உள்ள உதவி கமிஷனர்கள் 23 பேர் நேற்று இரவு மாற்றப்பட்டனர்.
அவர்களின் விவரம்:-
1. தெய்வசிகாமணி, வண்ணாரப்பேட்டை-சென்னை தெற்கு போக்குவரத்து புலனாய்வு உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.
2.மனோகரன், தாம்பரம்-உளவுப்பிரிவு உதவி கமிஷனர்.
3.ஜெயசுப்பிரமணியன், புளியந்தோப்பு-மாதவரம் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
4.ராஜேந்திரன், சேலையூர்-சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம்.
5.கங்கைராஜ், ஆவடி-புளியந்தோப்பு உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.
6.நந்தகுமார், கிண்டி-ஆவடி உதவி கமிஷனராக நியமனம்.
7.கருணாநிதி, அண்ணாநகர்-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
8.கமீல்பாட்ஷா, மேற்கு போக்குவரத்து புலனாய்வு-அண்ணாநகர் உதவி கமிஷனராகிறார்.
9.மன்சூர் அலி, பரங்கிமலை-மேற்கு போக்குவரத்து புலனாய்வு உதவி கமிஷனர்
10.சங்கரலிங்கம், மாதவரம்-கிண்டி, உதவி கமிஷனர்.
11.ரவிசேகர், மயிலாப்பூர்-பரங்கிமலை, உதவி கமிஷனர்.
12.முருகைய்யன், மதுவிலக்கு மேற்கு-மயிலாப்பூர், உதவி கமிஷனர்.
13.பீர்முகமது, திருவல்லிக்கேணி- சென்னை மத்திய மதுவிலக்கு உதவி கமிஷனர்.
14.என்.முருகேசன், வில்லிவாக்கம்- போலீஸ் கட்டுப்பாட்டு அறை உதவி கமிஷனர்.
15.ஏ.முருகேசன், அடையாறு-மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்.
16.விமலன், உளவுப்பிரிவு-புளியந்தோப்பு, உதவி கமிஷனர்.
17.எஸ்.தர்மலிங்கம், நிலஅபகரிப்பு பிரிவு-போலீஸ் நலப்பிரிவு உதவி கமிஷனர்.
18.கணபதி, நலப்பிரிவு-உளவுப்பிரிவு உதவி கமிஷனர்.
19.அய்யப்பன், வேப்பேரி-பூந்தமல்லி உதவி கமிஷனர்.
20.கே.கே.முருகேசன், கோட்டூர்புரம்- சேலையூர் உதவி கமிஷனர்.
21.செல்வன், உளவுப்பிரிவு- அம்பத்தூர், உதவி கமிஷனர்.
22.தனவேல், மதுவிலக்கு-வில்லிவாக்கம், உதவி கமிஷனர்.
23.கே.கண்ணன், சி.பி.சி. ஐ.டி.-வண்ணாரப்பேட்டை, உதவி கமிஷனர்
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் கொள்ளை முயற்சி
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடல் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. கொள்ளை முயற்சி நடந்தபோது, திடீரென அலாரம் அடித்ததால், சத்தம் கேட்டு பொதுமக்கள் கோவிலின் முன்பு திரண்டனர். இதனால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதை அடுத்து, கோவில் உண்டியலில் இருந்த பணம், ஸ்வாமி கழுத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், கவசங்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையரிடம் இருந்து தப்பின. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வங்கிக்கு வந்து சேர்ந்த நிவாரணப் பணம்: ஏடிஎம் மையங்களில் கூட்டம்
சென்னை உள்ளிட்ட வெள்ளம் பாதித்த மக்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்ட தொகை அவரவர் கணக்குக்கு இன்று காலை வந்து சேர்ந்தது. பணம் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருப்பது குறித்து வங்கிகளில் இருந்து பொதுமக்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) இன்று காலை முதல் வரத் தொடங்கியது. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி முதல் கட்டமாக இன்று வந்ததை தொடர்ந்து வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சிங்கப்பூர் இலக்கிய வட்டம் – கம்பன் ஒரு பத்திரிகையாளன் சிறப்பு நிகழ்ச்சி
இலக்கிய வட்டம் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு அழைக்கிறது.
” பெறுவீர் பிழையின்றிப் பீடளிக்கும் வண்ணம்,
வருமாண்டில் வற்றா வளங்கள்”- தருமாறு,
வேண்டுகிறேன் ஈசனை: – ”வெற்றிபெற நண்பர்பால்
ஆண்டவனே நீகூட்(டு) அருள்”.
==============================
பேச்சாளர் கலைமகள் பத்திரிகை ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்.
தலைப்பு :- கம்பன் – ஒரு பத்திரிகையாளன்.
– அ. கி. வ
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை
திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் 16 கரங்கள் கொண்ட நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் , ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் , பொதுமக்களும் செய்திருந்தனர்
கற்பழிப்பு குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லவோ, தூக்கிலிடவோ ஆசை : காவல் ஆணையாளர்
“கன மழையில் பாடம் பயில்வோம்” -எஸ்.எஸ்.குமரன் இசையில் ஆல்பம்
2015ம் வருட டாப் 30 படங்களின் வருமானப் பட்டியல்
2015ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் வசூல் அடிப்படையில் முதல் 30 இடங்களைப் பெற்ற படங்களின் பட்டியல்….
தமிழ்நாடு தியேட்டர்களில் விற்கப்பட்ட டிக்கட்டுகளின் வசூலின் மூலம் செலவு போக, வினியோகஸ்தர்களுக்கோ அல்லது தயாரிப்பாளர்களுக்கோ கிடைத்த நிகர வருமானத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது…
வேதாளம் – 60 கோடி
ஐ – 45 கோடி
காஞ்சனா 2 – 40 கோடி
பாகுபலி – 38 கோடி
புலி – 29 கோடி
தனி ஒருவன் – 28 கோடி
என்னை அறிந்தால் – 17 கோடி
மாரி – 17 கோடி
கொம்பன் – 16 கோடி
காக்கிச்சட்டை – 15 கோடி
பாபநாசம் – 14 கோடி
தங்கமகன் – 13 கோடி
ரோமியோ ஜீலியட் – 11.50 கோடி
நானும் ரௌடிதான் – 11.50 கோடி
ஆம்பள – 11.50 கோடி
உத்தமவில்லன் – 8.50 கோடி
தரிஷா இல்லனா நயன்தாரா – 8 கோடி
வாலு – 8 கோடி
36 வயதினிலே – 7.50 கோடி
தூங்காவனம் – 7.50 கோடி
ஈட்டி – 7 கோடி
மாயா – 6.50 கோடி
ஓகே கண்மணி – 6.50 கோடி
பாயும்புலி – 6 கோடி
புறம்போக்கு என்கிற பொதுவுடமை – 5 கோடி
டிமாண்டிகாலனி – 4.50 கோடி
சண்டி வீரன் – 2.50 கோடி
டார்லிங் – 3 கோடி
மாசு – 5 கோடி
சகலகலா வல்லவன் – 2.50 கோடி
பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை திரும்பப் பெறுக : ராமதாஸ்
பெட்ரோல், டீசல் மீதான ரூ.1.12 லட்சம் கோடி கூடுதல் வரியை உடனே திரும்பப் பெறுக என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி ஏழாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 37 பைசாவும், டீசல் மீதான வரி லிட்டருக்கு 2.00 ரூபாயும் அதிகரித்திருக்கிறது. பொது மக்களுக்கு விலைக் குறைப்பு என்ற வடிவில் சென்றடைய வேண்டிய ரூ.17,200 கோடியை கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொள்வது மக்கள் நலனுக்கு எதிரானதாகும்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல் – டீசல் விலை உயர்த்தப்பட்டது. இரக்கமே இல்லாமல் ஒரு மாதத்திற்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்ட வரலாறு உண்டு. இது பற்றி கேட்ட போதெல்லாம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் கூறிய ஒரே பதில்,‘‘ எரிபொருள் விலை உயர்வுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உள்நாட்டிலும் உயரும், உலக சந்தையில் குறைந்தால் உள்நாட்டிலும் குறையும் என்பது தான்’’. அவர்கள் கூறியவாறே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. ஆனால், உலக சந்தையில் விலை குறைந்த போது உள்நாட்டில் குறையவில்லை. எரிபொருள் விலை நிர்ணயத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறிய மத்திய அரசு, இப்போது கலால் வரி உயர்வின் மூலம் எரிபொருள் விலையை திரிப்பது ஏன்?
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கிய பின்னர் இதுவரை 7 முறை எரிபொருள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இடையில் சில முறை கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது வரியைக் குறைத்து மக்களின் சுமையை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு முன்வரவில்லை. மாறாக அப்போது விலையை உயர்த்தி மக்களின் சுமையை மத்திய அரசு அதிகரித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த ஓராண்டில் 7 கட்டங்களாக 7.73 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 7.83 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,12,832 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அவ்வளவும் அப்பாவி மக்களுக்கு சென்றடைய வேண்டியதாகும்.
உலக சந்தையில் கடந்த திசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 32.90 டாலராக இருந்தது. கச்சா எண்ணெய் விலை இந்த அளவுக்கு குறைந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 30.50 ரூபாய்க்கும், டீசல் 22.00 ரூபாய்க்கும் தான் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 59.77 ரூபாய்க்கும், டீசல் 46.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பெட்ரோல், டீசல் என்ன விலைக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமோ, அதைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதன் அடக்க விலையை விட அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு 19.73 ரூபாயை கலால் வரியாக வசூலிக்கிறது. இது தவிர சாலை பராமரிப்புக் கட்டணமாக 2 ரூபாயை மத்திய அரசு வசூலிக்கிறது. இவை தவிர தமிழக அரசின் சார்பில் மதிப்பு கூட்டு வரியாக 27%, அதாவது 12.69 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய, மாநில அரசுகளின் வரியாக மட்டும் ரூ.34.42 வசூலிக்கப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் உற்பத்திச் செலவு என்பது 20 ரூபாய்க்கும் குறைவு தான். அத்துடன் மத்திய, மாநில அரசு வரிகள், எண்ணெய் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் லாபம் சேர்த்து தான் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.59.77 விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டீசல் மீதும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு வரி நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளின் உற்பத்திச் செலவை விட விற்பனை விலை 3 மடங்கு அதிகமாக இருப்பது மக்கள் மீது தொடுக்கப்படும் மிகப் பெரிய பொருளாதாரத் தாக்குதல் ஆகும். வருவாயை பெருக்குவதற்கான வரி ஆதாரங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அதையெல்லாம் செய்யாத மத்திய அரசு, அப்பாவி மக்களை பணம் காய்க்கும் மரங்களாக கருதி பெட்ரோல், டீசல் மீது வரிகளை திணிப்பது நியாயமற்றதாகும்.
மக்களின் உணர்வுகளை மதித்தும், கச்சா எண்ணெய் விலை உயர்வின் பயன்களை மக்களுக்கு வழங்கும் வகையிலும் கடந்த ஓராண்டில் மட்டும் விதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 12,832 கோடி ரூபாய் கூடுதல் கலால் வரியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

