Home Blog Page 5885

பொங்கல் பண்டியையொட்டி 3.35 கோடி பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் : முதலமைச்சர் ஜெயலலிதா

பொங்கல் பண்டியையொட்டி, 3 கோடியே 35 லட்சம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் விலையில்லா வேட்டி சேலைத் திட்டத்தை 1983-இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடங்கினார். இதன்படி, ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
இந்தத் திட்டத்தில் தரமான பாலிகாட் வேட்டி, சேலைகளை வழங்க 2014-இல் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்த நிலையில், 2016-இல் 1 கோடியே 68 லட்சத்து 4 ஆயிரத்து 986 சேலைகளும், 1 கோடியே 67 லட்சத்து 89 ஆயிரத்து 404 வேட்டிகளும் ரூ.486 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளன.
 
இந்தத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா, கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர்த் துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங், வருவாய்த் துறைச் செயலர் இரா. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

காவல் நிலையதில் பிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட பெண் உதவி ஆய்வாளர் : வாலிபர் கைது

 

கோவை மாவட்டம் அன்னூர் காவல் லையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஹேமலதா காவல் நிலைய வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர். உதவி காவல் ஆய்வாளரான ஹேமலதா (வயது 44). இவருக்கும், அசோக்குமார் என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 15 வயதில் மகன் உள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஹேமலதா கணவரிடம் இருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். பின்னர் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய பாலசந்தர் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்திவந்தார்.

அன்னூர் அருகே நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அங்கு ஹேமலதா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த பணி முடிந்ததும் இரவு 8 மணிக்கு காவல் நிலையம் சென்றார். பின்னர் அவர், காவல் நிலைய வளாகத்தில் இருக்கும் பழைய காவல் நிலைய கட்டிடத்துக்கு சென்றார். சிறிது நேரத்தில் காவல் நிலையத்துக்கு வந்த அவர் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

உடனே சக போலீஸ்காரர்கள் ஓடிச்சென்று அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தபோது லேசாக நினைவு வந்த ஹேமலதா, அவர்களிடம் தான் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஹேமலதா கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஹேமலதா தற்கொலை குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆக்கிரமிப்புக்கு கருணாநிதியே காரணம் : சைதை துரைசாமி

 
சென்னையில் ஏற்ப்பட்ட வெள்ள பாதிப்பு தி.மு.க., தான் காரணம் என மேயர் சைதை துரைசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் .
மேயர் சைதை துரைசாமி தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம்நேற்று நடந்தது. கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்புக்கள் ஏற்பட காரணம் குறித்தும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து ஏற்பட்ட சர்ச்சைக்கும் விளக்கம் அளித்தபோது மேயர் கூறியதாவது :-
வடகிழக்கு பருவமழை, கடந்த அக்., 28ம் தேதி துவங்கியது. கடந்த, 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மழை கொட்டி தீர்த்தது. தாம்பரம் கடல் மட்டத்தில் இருந்து, 32 மீ., உயரம். குரோம்பேட்டை, 30 மீ., பல்லாவரம் 24 மீ., மீனம்பாக்கம் 18 மீ., மாம்பலம் 13 மீ., கிண்டி, பழவந்தாங்கல் இரண்டும் 12 மீ., பரங்கிமலை 11 மீ., உயரத்தில் உள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், நவ., 30 மற்றும் டிச., 1ம் தேதிகளில், இரவு பகலாக பெய்த கனமழையால், மூன்று மாவட்டங்களில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பின. செம்பரம்பாக்கம் ஏரி, முழு கொள்ளளவை எட்டியதும், திறந்துவிடப்பட்டது.
இப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீரால் மட்டுமல்ல, அதன் சுற்றுப் பகுதியில் பெய்த, 100 ஆண்டுகள் வரலாறு காணாத பேய்மழையாலும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சார்ந்த பல ஏரிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்ட, அதிக அளவிலான உபரி நீராலும் அடையாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.திரு.வி.க., மேம்பாலம் அருகே, 485 மீ., ஆகவும், மீனம்பாக்கம் விமான நிலையம் பின்புறம் 222 மீ., ஆகவும் அகலம் கொண்ட அடையாறு, நந்தம்பாக்கத்தில் 59 மீ., சைதாப்பேட்டை மேம்பாலம் அருகே 83.3மீ., கோட்டூர்புரத்தில் 125 மீ., என, சுருங்கியதற்கு காரணமே கருணாநிதி தான். கடந்த, 1967ம் ஆண்டு கருணாநிதி, பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த போது, ‘கூவத்தில் படகு விடுகிறோம்’ என்று சொல்லி, அவர் அறிவித்த கூவம் சீரமைப்புத் திட்டத்திற்காக திருவாரூரில் இருந்து நுாற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்களை அழைத்து வந்தார். அவர்களை முதன் முதலாக கூவம் ஆற்றின் கரையோரங்களில் ஆக்கிரமித்து, குடிசை போட்டு தங்க வைத்தார்.
கடந்த, 1971ம் ஆண்டு தேர்தலில், கருணாநிதியை எதிர்த்து நின்று, 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்ற, காங்கிரஸ் வேட்பாளர் குடந்தை ராமலிங்கம் சொன்ன குற்றச்சாட்டே, ‘கூவத்திற்கு வேலை செய்ய அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களை கள்ள ஓட்டுப் போட வைத்து, வெற்றி பெற்று விட்டார் கருணாநிதி’ என்பது தான்.அதன்பின், அவர் தான், ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்து, அரசே கட்டடங்கள் கட்டுவதற்கு அடிகோலினார். இதற்கு அவர் உருவாக்கிய வள்ளுவர் கோட்டமும், மத்திய அரசு நிறுவனத்திற்காக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு கட்டிய கட்டடமும், இன்னும் பிற கட்டடங்களும் சாட்சிகளாக உள்ளன.கடந்த, 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நீர்வழிப் பாதைகள் துவங்கி, மயானம், மந்தைவெளி, மேய்ச்சல் புறம்போக்கு என்று எல்லா பகுதிகளிலும், தன் கட்சிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து வகையான அரசு புறம்போக்கு நிலங்களையும், அரசுக்கு தேவைப்படாத நிலங்கள் என்று அறிவித்து, அரசாணை எண் 854 மூலம், ஆக்கிரப்புகளை வரைமுறைப்படுத்தினார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. கருணாநிதி ஆட்சியில், 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் வினாடிக்கு, 14,400 கன அடி, அதற்கு முன், 1976ம் ஆண்டு, வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில், 15 ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்டது.
அப்போதெல்லாம் இதுபோன்ற பேரழிவு ஏற்படவில்லை. இதற்கு அப்போது இவ்வளவு அதிகமாகவும், பரவலாகவும் பெருமழை பெய்யவில்லை என்பதும், மற்ற ஏரிகளில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேற்றப்படவில்லை என்பதும் தான் காரணம். குடிநீர் ஏரிகள், பாசன ஏரிகள் மழையால் நிரம்பும்போது, அதன் முழு கொள்ளளவிற்கு, 90 சதவீதம் வரும் வரை நீர் திறக்கப்படக் கூடாது என்பது பொதுப்பணி துறை விதிமுறை. அதன்படி தான் அரசு செயல்பட்டது. இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.
‘ஏரியை அழித்து, கருணாநிதி வள்ளுவர் கோட்டத்தை உருவாக்கினார்’ என்று மேயர் சைதை துரைசாமி பேசியதும், தி.மு.க., கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, 20 நிமிடங்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்த தி.மு.க., கவுன்சிலர்களை, கூட்ட அரங்கில் இருந்து வெளியேற்றுமாறு, மேயர் சைதை துரைசாமி உத்தரவிட்ட்தால் சபை காவலர்கள் மூலம், அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

தமிழ்நாட்டில் 12 ஸ்மார்ட் நகரங்கள் : தமிழக அரசு மத்திய அரசிடம் திட்டம் தாக்கல்

 
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான ஸ்மார்ட் நகர திட்டத்தை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்க வேண்டிய ஸ்மார்ட்நகரங்களின் எண்ணிக்கையை மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்க்கு அரசு ரூ.48 ஆயிரம் கோடி செலவிட மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 12 ‘ஸ்மார்ட்’ நகரங்களை உருவாக்க மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இந்த நகரங்களை அடையாளம் கண்டு, டிசம்பர் 15-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு தமிழக அரசை கேட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு ஸ்மார்ட் நகரங்கள் தொடர்பான அறிக்கையைஅளித்துள்ளது.
 
ஸ்மார்ட் சிட்டி எனப்படும் நவீன நகரங்கள் பட்டியலில், தமிழகத்தில் திருச்சி, நெல்லை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலூர், கோவை, மதுரை, ஈரோடு தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய 12 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பேய் மழை, வெள்ள நிவாரண பணிகள் காரணமாக ‘ஸ்மார்ட்’ நகரங்கள் திட்ட பட்டியலை மத்திய அரசிடம், தமிழக அரசு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா நேருவை விமர்சித்து காங்கிரஸ் பத்திரிகையில் செய்தி !

 
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவின் தந்தை ஒரு பாசிஸ்ட் ராணுவ வீரர் காஷ்மீர் விவகாரத்தில் ஜவஹர்லால் நேரு தவறு செய்தார் என்ற விமர்சனங்களை முன்வைத்து மும்பையில் இருந்து வெளிவரும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான காங்கிரஸ் தர்ஷனில் கட்டுரை வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் 131-வது நிறுவன நாளையொட்டி இந்த பத்திரிகையின் சிறப்பிதழ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சோனியாவின் தந்தை, இத்தாலி பாசிஸ்ட் ராணுவத்தில் வீரராகப் பணியாற்றியவர் என சாடி ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. அதே போல் ஜவஹர்லால் நேரு, சர்வதேச விவகாரங்களில் சர்தார் வல்லபாய் படேலின் கருத்துகளை புறக்கணித்தார்;
இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வந்தது; இருவரும் அவ்வப்போது ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தனர்; படேலின் கருத்துகளை நேரு கேட்டிருந்தால் காஷ்மீர், சீனா, திபெத், நேபாளம் பிரச்சனைகள் இன்னும் உயிரோடு இருந்திருக்காது. காஷ்மீர் விவகாரத்தை ஐ.நாவுக்கு நேரு கொண்டு போனதை கடுமையாக எதிர்த்தவர் படேல். நேபாளம் தொடர்பாகவும் படேலின் கருத்துகளை நிராகரித்தவர் நேரு என்று காரசாரமாக எழுதப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர் மும்பை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சஞ்சய் நிருபம் இதுகுறித்து கூறும் போது ஒரு ஆசிரியர் அனைத்து கட்டுரைகளையும் படிப்பது இயலாத ஒன்று. இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனினும் இதை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் புது தில்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களோ, காங்கிரஸ் தர்ஷன் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகைன்னு யாருங்க சொன்னது? நாங்கள் இதுவரை அப்படி ஒரு பத்திரிகைப் பற்றி கேள்விபட்டது இல்லை என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் மீது காறித் துப்பிய விஜயகாந்துக்கு ஊடகங்களை புறக்கணிக்கும் தில் இருக்கா ?

அநாகரீகமாக நடந்து கொண்டு ஊடக துறையினர் மீது தூ என காறித் துப்பிய விஜயகாந்துக்கு ஊடகங்களை புறக்கணிக்கும் தில் இருக்கா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்த பின் விஜயகாந்தை சந்தித்தனர். அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விஜயகாந்த் விசாரித்து நியூஸ் – 7 தொலைக்காட்சி என்று கேட்டுத் தெரிந்து கொண்டதும், உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா? என்று பதில் கேள்வி எழுப்பினார். கோபத்தில் நீங்க எல்லாம் பத்திரிக்கைகாரங்களா என்று அநாகரீகமாக நடந்து கொண்டு தூ என காறித் துப்பினார்.
இதையடுத்து விஜயகாந்த் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் மனுவும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊடகதுறையில் செய்தியாளராக பணியாற்றும் செய்தியாளர் மணிகண்டன் ஷங்கர் அவரது முகனூல் பதிவில் கூறியுள்ளதாவது :-
ஊடகங்கள் எல்லாம் ஜால்ரா, பத்திரிக்கையாளர் எல்லாம் அதிமுக கை கூலிகள் என கூறும் விஜயகாந்த், அவர் கட்சியின் அறிக்கைகளை மட்டும் ஊடகங்களுக்கு ஏன் அனுப்ப வேண்டும் ??
 
தன் மகன் நடிக்கும் “தமிழன் என்ற சொல்” படத்தின் பாடல் வெளியிட்டிற்கு மட்டும் ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தது ஏன்? அப்படி என்றால் நீங்கள் சொல்வதை மட்டும் கேட்க ஊடகங்கள் வேண்டும், எதிர் கேள்வி கேட்டால் வேண்டாம்.
பத்திரிகையாளர்கள் எங்களுக்குத்தான் தைரியம் இல்லை. ஏன் என்றால் நீங்கள் குறிப்பிடுவது போல நாங்கள் ஊடக முதலாளிகளிடம் சம்பளம் வாங்குகிறோம். நீங்கள் தான் சம்பளம் கொடுக்கும் இடத்திலும் , எதிர்கட்சித் தலைவராகவும், அரசியல் கட்சி தலைவராகவும், கல்லூரி மற்றும் ஓட்டல் அதிபராகவும், நடிகராகவும் உள்ளீர்களே, நீங்கள் போய் ஜெயலலிதாவை கேள்வி கேளுங்களேன்.
எங்களால் சட்டமன்ற நிகழ்வை எழுதத்தான் முடியும், ஆனால் உங்களுக்கு அப்படி இல்லையே, கேள்வி நேரம், ஜீரோ அவர், விவாதம் என எல்லாவற்றிலும் ஜெயலலிதாவை கேள்வி கேட்டிருக்கலாமே?
ஜெயலலிதாவை கேள்வி கேட்க செய்தியாளர்கள் எங்களுக்கு பயம் இல்லை. எங்களால் அவரை சந்திக்க முடியவில்லை. ஊடகங்களை அவர் வீட்டு தெரு முனைக்கு கூட அனுமதிப்பதில்லை. அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட அவர் பங்கேற்பதில்லை.
நீங்களும் ஊடகங்கள் எட்ட முடியாத அளவிற்கு தான் இருக்கிறிர்கள். உங்கள் கட்சி அலுவலகத்தின் முன் பக்கம் ஊடகங்கள் நின்றால் நீங்கள் பின் பக்க வழியில் சென்றுவிடுகிறீர்கள். சட்டமன்றத்தில் சபை நடந்து கொண்டு இருக்கும் போது கூட இரண்டாம் கதவு எண் பக்கமாக வந்து கையெழுத்திட்டுவிட்டு சென்றுவிடுகிறீர்கள். அங்கேயும் எங்களால் வர முடியாது.
இதே போல் தான் எங்களுக்கு ஜெயலலிதாவும் சந்திக்க முடியாத இடத்தில் இருக்கிறார்.நீங்கள் எதிர்கட்சிதலைவர் என்ற முறையில் எத்தனை செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளீர்கள். இதையும் தாண்டி நீங்கள் வந்து செல்லும் விமான நிலையம் இது போன்ற ரத்த தான முகாம் ஆகிய இடங்களில்தான் உங்களை பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட சூழல்களிலெல்லாம் என்ன நடந்தது என்று ஊர் அறியும்.
இல்லை இனிமேலும் பத்திரிகை எல்லாம் ஜால்ரா. செய்தியாளர்கள் எல்லாம் (உங்கள் மொழியில்) கை கூலிகள் என்று சொல்லி கொண்டே இருப்பீர்கலென்றால், தே.மு.தி.க., உங்கள் சினிமா நிறுவனம், உங்கள் மகன் திரைப்படம் எல்லாவற்றிலும் இனி ஊடகங்களை புறக்கணியுங்களேன் பார்போம்….
இப்படிக்கு
ஊடக முதலாளிக்கும் எங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் த்தூ ப்பியதை துடைத்து கொண்டு இருக்கும் சாதாரண செய்தியாளன் என்று செய்தியாளர் மணிகண்டன் ஷங்கர் அவரது முகனூல் பதிவில் கூறியுள்ளார்.இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது .

__404__

Bad karma: we can’t find that page!

You asked for {%sh404SEF_404_URL%}, but despite our computers looking very hard, we could not find it. What happened ?

  • the link you clicked to arrive here has a typo in it
  • or somehow we removed that page, or gave it another name
  • or, quite unlikely for sure, maybe you typed it yourself and there was a little mistake ?

{sh404sefSimilarUrlsCommentStart}It’s not the end of everything though : you may be interested in the following pages on our site:{sh404sefSimilarUrlsCommentEnd}

{sh404sefSimilarUrls}

 

தேர்தலில் இணைய தளம் மூலம் ஓட்டுப்பதிவு : அரசு திட்டம்

 

வாக்காளர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே இணைய தளம் மூலம் வாக்களிக்கும் முறையை இந்தியாவிலேயே முதன் முறையாக கடந்த 2010–ம் ஆண்டு குஜராத் மாநில அரசு அறிமுகம் செய்தது.

குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் இணைய தளம் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

குஜராத்தில் உள்ள சுமார் 96 லட்சம் வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் இணைய தளம் மூலம் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 806 பேர் இணையத்தளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் வாக்கை பதிவு செய்திருந்தனர். இதனால் அப்போது இணையத்தள வாக்குப்பதிவு முறைக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை.

என்றாலும் இணையத்தளத்தின் மூலம் வாக்கை பதிவு செய்யும் நடைமுறையை தொடர குஜராத் மாநில அரசுதிட்டமிட்டு நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் இணையத்தளத்தின் வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்பகுதிகளில் இருப்பவர்களே இணையத்தளத்தின் வாயிலாக வாக்களிப்பை விரும்பாத நிலையில் இருந்த போதிலும் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பதில் கேள்வி நீடிக்கிறது. கிராம மக்கள் இதில் ஆர்வம் காட்டுவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில்
கிராம மக்களில் எத்தனை சதவீதம் பேர் இணையத்தள வசதி பெற்றுள்ளனர் என்ற ஆய்வையும் குஜராத் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது .

 

விஜயகாந்த்தை கண்டித்து அ.தி.மு.க.வினர் நடத்திய பாட்டில் வீச்சு… உருவபொம்மை எரிப்பு போராட்டம்!

 
 
புதுச்சேரியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தங்கி இருந்த தங்கும் விடுதியில் பாட்டில் வீசியும், உருவபொம்மை எரித்தும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தே.மு.தி.க. ஆர்ப்பாட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஆர்ப்பாட்டம் நடத்த இடத்துக்கு எதிரே பேருந்து நிறுத்தத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டு இருந்த படத்தை அகற்றும்படி விஜயகாந்த் கூறினார். இதையடுத்து உடனே தே.மு.தி.க. தொண்டர்கள் ஜெயலலிதா படத்தை அகற்றினார்கள்.
 
இந்த தகவல் அறிந்து அங்கு திரண்டு வந்த அ.தி.மு.க.வினர் கோபத்தில் அப்பகுதியில் இருந்த தே.மு.தி.க. பேனர்களை கிழித்து எரிந்ததுடன் தே.மு.தி.க.வினர் வாகனங்களையும் தாக்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
மேலும், கடலூரில் தே.மு.தி.க. சார்பில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் நேற்று இரவு புதுச்சேரி வந்து தங்கினார். அவர் காமராஜர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தார்.
 
 
இந்நிலையில், இன்று காலை விஜயகாந்த் கடலூர் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, அ.தி.முக. எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் 100 பேர் அண்ணாமலை தங்கும் விடுதி முன் திரண்டு வந்தனர். வாகனங்கள் வெளியே செல்லும் வழியில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
 
அப்போது, அ.திமு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் 100 பேர் அந்த ஓட்டலுக்கு திரண்டு வந்தனர். அவர்கள், அந்த ஓட்டலுக்குள் வாகனங்கள் செல்லும் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். பிரச்னை பெரிதாவதை அறிந்த தங்கும் விடுதி ஊழியர்கள், அவர்களை உள்ளே அனுமதிக்காமல் கேட்டை இழுத்து மூடினார்கள்.
 
அதனால் ஆத்திரம் அடைந்த அ.தி.மு.க. தொண்டர்கள், திடீரென விஜயகாந்த் உருவ பொம்மை ஒன்றை எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர். மேலும், தண்ணீர் பாட்டில்களை ஓட்டலுக்குள் தூக்கி வீசினார்கள்.
 
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அ.தி.மு.க.வினரை தடுக்க முயன்றனர். இதனால் அ.தி.மு.க.வினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அ.தி.மு.க.வினர் தங்கும் விடுதியின் 2 வாசல்களையும் முற்றுகையிட்டு, விஜயகாந்துக்கு எதிராக ஆவேசமாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த சம்பவத்தால் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால்அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது .

மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் நியமனம்

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளராக கீழப்பாவூரை சேர்ந்த ராஜாமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நியமனம் செய்யப்பட்ட ராஜாமணி நெல்லை கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பனை நேரில் சென்று வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ஜெகதீசன், மேகநாதன், மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள் ,அன்பரசு மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்