Home Blog Page 6042

சந்திராஷ்டம விளக்கம்

சந்திராஷ்டமம் விளக்கம் சந்திராஷ்டம கணிதம் சந்திராஷ்ட நட்சத்திரங்கள் (17ம் நட்சத்திரம்) மற்றும் இராசிகள் மன்மத(2015-16) வருட சந்திராஷ்டம தினங்கள் Manmatha Varusha Chandrashtama Dinam துன்முகி (2016-17)வருட சந்திராஷ்டம தினங்கள் Dunmugi Varusha Chandrashtama Dinam


சந்திராஷ்டம விளக்கம்: சந்திரன் + அஷ்டமம்(எட்டு) = சந்திராஷ்டமம் பொருள்: சந்திரன் நின்ற ராசியில் இருந்து எட்டாம் இடத்தில் இருப்பாதாகும் சந்திரன் பூமியை 27.322 நாட்களில் வலம் வரும் சுழற்சி காலத்தில் 12 இராசி மண்டலங்களையும் கடக்கும். சந்திரன் சஞ்சரிக்கும் மண்டலத்தில் இருந்து பின்புறத்தில் எட்டாம் இராசி மண்டலத்தில் பிறந்தவர்களுக்கு தொல்லைதரும் காலமாகும். சந்திராஷ்டமம் என்பது ஒருவரின் பிறந்த இராசியான “ஜென்ம ராசிக்கு” எட்டாம் இராசி (210 பாகை முதல் 240 பாகை கோண அளவு) மண்டலத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமான இரண்டே கால் நாட்களாகும். இங்கே கோசார சந்திரனை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். ஃஇராசிக்கட்டத்தில் உள்ள சந்திர நிலை. ஒரு இராசி என்றால்: 30 பாகை கோண அளவு, 2 ¼ நட்சத்திரங்கள், 9 பாதங்கள் உள்ளடக்கிய மண்டலமாகும் சந்திராஷ்ட நட்சத்திரம்: ஒருவரின் ஜன்ம நட்சத்திரத்திற்கு 17ம் நட்சத்திர (213 20 முதல் 226 40 வரை)காலம் சந்திராஷ்டம உச்சகாலமாகும். கணித முறைகள்: (படம் விளக்கம்) 1. இராசிக்கு எட்டாம் இடம் ஒருவரின் பிறந்த இராசிக்கு எட்டாம் இராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இந்த முறைதான் நாள்காட்டி மற்றும் பஞ்சாங்கத்தில் இடம் பெறுகிறது. இதை மிக எளிதாக கணக்கிடமுடியும் 2.ஜன்ம சந்திர பாகை பிறந்த காலத்தில் சந்திரன் நின்ற பாகையை துவக்க புள்ளியாக வைத்து 210 முதல் 240 வரை சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும். இது மிகச்சரியான மற்றும் துல்லியமானதாகும் ஆயினும் 360 பாகைக்கு தனித்தனியாக அச்சிடவும், இணையத்தில் வெளியிடவும் முடியாது என்பது இந்த முறையின் பின்னடைவாகும். மிகமுக்கிய முடிவுகள், திருமணம் மற்றும் சுபகாரியங்கள் செய்திட தினம் குறிக்க “இரண்டாம் முறை” யில் மட்டுமே ஜோதிடர்களின் துணைக்கொண்டு கணக்கிடவேண்டும். இதுவே சரியான முறையாகும். சந்திரனின் காரகத்துவம் வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் நட்சத்திர சிந்தாமணி, குமார சாமியம் (கோசாரபடலம்), கோசார தீபிகை, உத்திரகாலமிருதம் மற்றும் பல சோதிஷ மூலகிரந்த நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவிண்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். மேலும் சந்திராஷ்டம காலத்தில் வெளியில் பயணம் செய்யும் பொழுது அதிக கவனம் தேவை. தீர்வுகள்: இக்காலத்தில் அமைதியை நாடி பொறுமையுடன் இருக்க வேண்டும். மனஅமைதிக்கு சந்திரனின் அதிதேவதையான பார்வதியை வணங்கி, சிவபுராணம் படித்தல் நன்று. மனதை ஒருமுகப்படுத்தும் யோகா – தியானம் – பிராணாயாமம் போன்ற முறைகளை கடைபிடித்து “ இன்று நாள் முழுவதும் பொறுமை காக்க வேண்டும்” எனும் தீர்மானத்துடன் இருப்பின் தொல்லைகள் குறையும். மிகமுக்கிய பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாமல் தவிற்கலாம். தானம்: இக்காலத்தில் சந்திரனின் தானியமான அரிசியை ஆதரவற்றோர் இல்லத்தில் தானம் செய்யலாம். வெண்ணிற ஆடையை சாலைகளில் திரியும் மனநலம் பாதித்தவர்களுக்கு தரலாம்.

ஸ்ரீதணிகை பஞ்சாங்கம் – பாலு சரவண சர்மா –

Sri Thanigai Panchangam – Prohithar – Tambaram Astrologer பழைய தாம்பரம் கிராம பரம்பரை புரோகிதர், ஜோதிடர், பஞ்சாங்க கணிதக்ஞர் +91 9840369677

களை கட்டும் கூத்தாண்டவர் கோயில் விழா

koothandavar5 விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் அருள்மிகு  கூத்தாண்டவர் திருக்கோயில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமியையொட்டி  சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடக்கும். இந்த திருவிழாவுக்கு ஒரு வரலாறு உண்டு. மகாபாரத போர் துவங்குவதற்கு முன்பு யுத்த தேவதையை திருப்திப்படுத்த களப்பலி  கொடுக்கப்பட வேண்டும். அதற்கு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஒரு ஆணை பலி  கொடுக்க வேண்டும். இதற்கு பாண்டவர்கள் தரப்பில் அர்ச்சுணன், கிருஷ்ணன் ஆகியோ ரும், அர்ச்சுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த மகனான அரவானும் மட்டுமே  தகுதி பெற்றிருந்தனர். போருக்கு முன்பு அர்ச்சுனன், கிருஷ்ணனை இழக்க முடியாது  என்பதால் அரவாண் ஒரு நிபந்தனையுடன் களப்பலி காண சம்மதித்தார். அந்த நிபந்தனை  தான் இல்வாழ்க்கை இன்பத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்பதுதான். விடிந்தால்  மடியும் எந்த ஆணைத்தான் பெண் விரும்புவாள்? இதுதான் மகாபாரத காலத்திலும் நடந்தது. இதனால் பரமாத்மா கிருஷ்ணனே மோகினி அவதாரம் எடுத்து அரவாணை  மணமுடித்து இல்வாழ்க்கை இன்பத்தை அளித்தார். மறுநாள் அரவாண் களப்பலி கொடுக்கப்பட்டார் என்பதுதான் கூத்தாண்டவர் கோயிலின் வரலாறு. அரவாணிகள் தங்களை கிருஷ்ணனாகவும், அரவாணை தங்கள் கணவராகவும் பாவித்து வழிபாடு நடத்தி  வருகின்றனர். இந்த ஆண்டும் வழக்கம்போல விழுப்புரத்தில் அரவாணிகள் குவியத்  தொடங்கியுள்ளனர். அரவாணை வழிபட டில்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா,  பெங்களூரு உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த அரவாணிகள் வந்துள்ளனர். கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றம், சாகை  வார்த்தலுடன் தொடங்கியது. 22ம் தேதி பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி  சந்துனுசரிதம், 24ம் தேதி பீஷ்மர் பிறப்பு, 25ம் தேதி தர்மர் பிறப்பு, 26ம் தேதி பாஞ்சாலி பி றப்பு, 27ம் தேதி பகாசூரன் வதம், 28ம் தேதி பாஞ்சாலி திருமணம், 29ம் தேதி  கூத்தாண்டவர் பிறப்பு, 30ம் தேதி ராஜசூயயாகமும் நடந்தது. மே 1ம் தேதி வெள்ளிக்கால்  நடும் நிகழ்ச்சி, 2ம் தேதி கிருஷ்ணன் தூது நிகழ்ச்சியும் நடந்தது. இன்று 3ம் தேதி அரவாண்  பலியும், கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாயணமும், 4ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும்  நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான  5ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு  சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் கோயில் வாசலில் அரவாணிள் புதுப்பெண் போல தங்களை அலங்கரித்துக்கொண்டு பூசாரிகளால் தாலிகட்டிக் கொள்வர்.  இரவு முழுவதும் கூவாகத்தில் அவர்கள் ஆடிப்பாடி மகிழ்வர். 6ம் தேதி அதிகாலையில்  அரவாண் சிசுவும், உடலும் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படும். பின்னர் தேரோட்டம்  நடத்தப்படும். தேர் அழிகளத்தை நெருங்கும் போது அரவாணிகள் ஒப்பாரி வைத்து அழ  ஆரம்பிப்பர். அங்கு அரவான் களப்பலி கொடுக்கப்படும் நிகழ்ச்சி நடத்தப்படும். அப்போது அரவாணிகள் தங்கள் வளையல்களை உடைத்து, பூக்களை எறிந்து தாலிகளை  அறுத்தெறிவர். பின்னர் விதைக் கோலம் பூண்டு அரவாணிகள் தங்கள் சொந்த ஊருக்கு  கிளம்பிச் செல்வர். 7ம் தேதி விடையாத்தி நிகழ்ச்சியும், 8ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய த்துறை அதிகாரிகள், விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்

தனியாருக்கு சாதகமாக பாலை வாங்க ஆவின் நிர்வாகம் மறுப்பதா?: ராமதாஸ்

தனியாருக்கு, நிறுவனங்களுக்கு சாதகமாக பாலை வாங்க ஆவின் மறுப்பதா? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று அவர் வெளியிட்ட  அறிக்கை?
தமிழ்நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரியமான பால்  உற்பத்தியாளர்களிடம்  பால் கொள்முதல் செய்ய தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, பால் உற்பத்தியாளர்கள் மீது ஆவின் நிறுவனம் அவதூறு பரப்பி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
ஆவின் நிறுவனத்தின் அங்கமாக விளங்கும் 11,503 தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அவற்றில் உறுப்பினர்களாக உள்ள 4,29,080 உற்பத்தியாளர்களிடமிருந்து ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2012-13 ஆம் ஆண்டில் 24.36 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் 2013-14 ஆம் ஆண்டில் 23.22 லட்சம் லிட்டராக குறைந்து விட்டது. எனினும், கடந்த அக்டோபர் மாதத்தில் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப் பட்டதால் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அதிகரித்தது. ஆனாலும், தமிழகத்தில் பால் உற்பத்தி பெருமளவு அதிகரித்திருப்பதால் அதை உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யமுடியாத சூழல் நிலவுகிறது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு பாலை கூடுதலாக கொள்முதல் செய்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை அல்லது ஏற்றுமதி செய்வதே சிறந்த வணிக உத்தியாக இருக்கும். ஆனால், ஆவின் நிறுவனமோ உழவர்களின் வயிற்றில் அடிக்கிறது.
சேலம், கிருஷ்ணகிரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள பால் உற்பத்தியாளர்களிடம் பாலை வாங்க ஆவின் மறுக்கிறது. சில இடங்களில் வழக்கமான அளவைவிட குறைவாகவே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சில தனியார் பால் விற்பனையாளர்களை தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினராக பதிவு செய்துள்ள ஆவின் நிறுவனம், அவர்களிடமிருந்து லிட்டர் ரூ.25 என்ற விலையில் மொத்தமாக கொள்முதல் செய்கிறது. பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களிடம் லிட்டர் ரூ.28 என்ற விலையில் பால் கொள்முதல் செய்வதைவிட மொத்தமாக ரூ.25- க்கு கொள்முதல் செய்வது அதிகாரிகளுக்கும், பால் கூட்டுறவு சங்கத்தின் இயக்குனர்களாக உள்ள ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும்  தனிப்பட்ட முறையில் லாபமாக இருப்பதால் இந்த நடைமுறையை ஆவின் நிர்வாகம் ஊக்கப்படுத்தி வருகிறது.
பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யாமல் இருப்பதற்கு ஏதாவது காரணம் கூற வேண்டும் என்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் பால் இல்லை என்று கூறுகின்றனர். எருமைப் பால், பசும்பால் என வகை பிரித்து தான் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது. இரு வகை பாலும் அவற்றுக்கென உள்ள தரத்தில் தான் இருக்கும். அந்தப் பாலைத் தான் இவ்வளவு காலமும் ஆவின் கொள்முதல் செய்து வந்தது. இப்போது தனியார் குறைந்த விலைக்கு பால் தருகிறார்கள் என்பதற்காக பாரம்பரிய பால் உற்பத்தியாளர்கள் மீது அவதூறு பரப்புவது கண்டிக்கத்தக்கது. சரக்குந்தில் எடுத்துச் செல்லப்படும் பாலில் 2000 லிட்டரை எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ரசாயனத் தண்ணீர் கலப்படம் செய்து தரப்பட்ட பாலையெல்லாம் தரமான பால் என்று சான்றளித்த ஆவின் நிறுவனம், இயற்கையாக பசு தரும் பாலை தரமில்லாதது என்று ஒதுக்குவது விந்தையிலும் விந்தையாகத் தான் இருக்கிறது.
ஆவின் நிறுவனத்தின் இச்செயலைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாலை தரையில் கொட்டி உழவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆவின் நிறுவனம் செய்யும் இந்த துரோகத்தால் இருவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. முதலாவது, கொள்முதல் செய்யப்படாத பாலை உள்ளூரில் உள்ள தனியார் பால் விற்பனையாளர்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டியதாகிறது. இவ்வாறு வாங்கும் பாலை அவர்கள் கூடுதல் லாபம் வைத்து ஆவினிடம் விற்பனை செய்கின்றனர். இரண்டாவது,  ஆவின் நிறுவனம் அதிக அளவில் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு தாராளமாக விற்பனை செய்வதால் ஆவின் நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க முடியாமல் தனியார் நிறுவனங்கள் பால் விலையை குறைத்தன. இதேநிலை நீடித்தால் தனியார் பால் விலை மேலும் சரிந்திருக்கும். ஆனால், ஆவின் கூடுதலாக பாலை கொள்முதல் செய்ய மறுப்பதால் அதன் விற்பனை குறைந்து தனியாரின்  விற்பனை அதிகரிக்கும். இதனால் அவற்றின் விலையும் அதிகரிக்கும்.
இப்படிப்பட்ட சூழல் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் பால் கொள்முதலை ஆவின் குறைக்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது.
தனியாருக்கு சாதகம் செய்வதற்காக பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களுக்கு துரோகம் செய்வது மன்னிக்க முடியாததாகும். இந்த போக்கை கைவிட்டு பாரம்பரிய பால் உற்பத்தியாளர்களிடமிருந்து  முழு அளவில் பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனம் ஆகிய இரு தரப்புமே பயனடைய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மதுவையும் ஊழலையும் ஒழிப்பதே பாமக லட்சியம்: அன்புமணி

மதுவையும் ஊழலையும் ஒழிப்பதே பாமகவின் லட்சியம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்
காஞ்சிபுரம் போராட்டத்தில் அவர் பேசியது…
 
தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் வ்ணிகர் வீதியில் இன்று மாலை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட பல்லாயிரக்கனோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளரும் தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு பங்கேற்று கண்டன உரையாற்றினார். அவரது உரை விவரம்:
தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது மது தான். இந்தியாவின் மதுவால் ஆண்டு தோறும் 18 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மதுவால் இறக்கின்றனர். புற்றுநோயால் இறப்பவர்களைவிட மதுவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் மது விற்பனையாகிறது. அதிக தற்கொலைகள், அதிக சாலைவிபத்துக்கள், அதிக பாலியல் வன்கொடுமைகள் நடைபெறும் மாநிலம் தமிழகம் தான்.
தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் இளம் விதவைகள் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் மது தான். முன்பெல்லாம் 30 வயதில் தான் மது அருந்தத் தொடங்குவார்கள். இப்போது 12 வயது குழந்தைகள் கூட மது அருந்துகின்றன. இதைப் பற்றியெல்லாம்  தமிழக ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை. அவர்களின் கவலை எல்லாம் பணம் தான்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு மதுவைக் கொடுக்கிறார்கள் என்று கூட கூறமுடியாது. மதுவை திணிக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். தமிழகத்தில் கல்வி, விவசாயம் என மக்கள் நலனுக்கான துறைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை. மாறாக மதுவுக்கு மட்டும் தான் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி, 35 ஆயிரம் கோடி என இலக்கு வைத்து மது விற்பனை செய்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மது தனியாரிடம் இருந்தது; கல்வி அரசிடம் இருந்தது. ஆனால், இப்போது மதுவை அரசு விற்கிறது. கல்வியை தனியார்கள் கடைசரக்கு போல விற்கிறார்கள்.  உலகில் எங்கும் இந்த அவலம் கிடையாது. தமிழகத்தில் மட்டும் தான் இந்த அவலம் காணப்படுகிறது.
1971 ஆம் ஆண்டில் கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு நீக்கப்பட்டு சாராயக்கடைகள் திறக்கப்பட்டன. இப்போது தெருவெல்லாம் மது ஆறாக ஓடுகிறது. பள்ளிகளுக்கு செல்லும் சிறுவர்கள் கூட குடித்து விட்டு தான் செல்வதாக செய்திகள் கூறுகின்றன. 2016 ஆம் ஆண்டில் பா.ம.க.ஆட்சிக்கு வந்தவுடன் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் மது விலக்கை ஏற்படுத்த நம்மால் தான் முடியும். நம்மால் மட்டும் தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்.  மதுவின் தீமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் கதறுகிறார்கள். பெண்களின் தலையெழுத்தை மாற்ற நம்மால் தான் முடியும். தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி; மதுவிலக்கு வருவதும் உறுதி.
மதுவுக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. மதுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூடியது. அடுத்தகட்டமாக மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். இந்தியாவில் தனி நபர் மது நுகர்வு அதிகமுள்ள மாநிலம் கேரளம் தான். ஆனால், அங்குள்ள மக்களின் நலன் கருதி அனைத்து பார்களையும் கேரள அரசு மூடியிருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவுள்ளன. கேரளத்தின் இந்த துணிச்சலை நான் பாராட்டுகிறேன்.அதேபோல் தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக ஆட்சியாளர்களுக்கு துணிச்சல் உண்டா?
தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அரசுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. நல்ல அரசுக்கு இலக்கணம் என்னவென்றால் கல்வி, சுகாதாரம், சிறுதொழில் உள்ளிட்ட துறைகளில் மாநிலத்தை முன்னேற்றுவது தான். இந்த அரசுக்கு இதில் அக்கறை இல்லை. ஊழலையும், மதுவையும் ஒழிப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியம் ஆகும். அடுத்த ஆண்டு தேர்தலில் பா.ம.க. ஆட்சிக்கு வந்து இதை சாதிக்கும். இந்த இலக்குகளை எட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல்துறைக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு பேசினார். 

அதிபர் படத்தில் வித்தியாசமான வேடமேற்கும் நந்தா

பெண் கண்ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற படநிறுவனம் சார்பாக P.B..சரவணன் இணை தயாரிப்பில் T.சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் “அதிபர்”.இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சமுத்திரகனி, நந்தா, ரஞ்சித், ரிச்சர்ட் நடிக்கிறார்கள் மற்றும் தம்பி ராமய்யா, சிங்கமுத்து, கோவைசரளா, பாவா லட்சுமணன், ரேணுகா, சரவண சுப்பையா, சங்கிலிமுருகன், வையாபுரி, ராஜ்கபூர், மதன் பாப், பாரதிகண்ணன், மோகன்ராம், சம்பத்ராம், சிவசங்கர், கதா.கா.திருமாவளவன், மாயி சுந்தர், தெனாலி, ஸ்டில்குமார் கோவை செந்தில், அழகு, கோவைபாபு, கவிதா பூஜாரி, அமீர், சித்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – பிலிப்ஸ் விஜயகுமார். இசை – விக்ரம்சிங்கா பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா கலை: – M.G.சேகர் நடனம் – சிவசங்கர், தினேஷ் ஸ்டன்ட் – கனல்கண்ணன் எடிட்டிங் – சஷிகுமார், தயாரிப்பு நிர்வாகம் – அஷ்ரப் – ஹக்கீம் இணைதயாரிப்பு – P.B. சரவணன் தயாரிப்பு – T.சிவகுமார். எழுதி இயக்குபவர் சூர்யபிரகாஷ். இவர் மாயி, திவான், மாணிக்கம், போன்ற படங்களை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் சூர்யபிரகாஷிடம் கேட்டோம். நடிகர் நந்தா இந்த படத்தில் டேவிட் என்ற வித்தியாசமான வேடமேற்கிறார்.ரௌடி வேடமேற்கும் நந்தா – நட்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரம்.அடிதடியயே கொள்கையாக கொண்டிருக்கும் டேவிட் நட்புக்காக நல்லவனாக மாறி வாழும் கதாப்பாத்திரம் ஏற்கிறார். இது நந்தாவுக்கு சவாலான வேடம். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நடிகர் நந்தா
நடிகர் நந்தா

கல்யாணத்து முன்னாடி சேர்ந்து வாழ்வது தப்பில்லை: சொல்கிறார் டாப்ஸி

a3e0d1cdc8b7a4f9d4b93e7d66207deb - 2026 சமீபகாலமாக நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ இணையதளங்களில் வெளியானது நினைவிருக்கலாம். ஆனால் இதை நடிகைகள் யாரும் பெரிய பொருட்டாக கருதவில்லை. அவரவர் வேலையை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து நடிகை டாப்ஸி கருத்து தெரிவித்துள்ளார். அதில், சில நடிகைகளின் போலியான ஆபாச எம் எம் எஸ் களை சில விஷமிகள் நெட்டில் பரவ விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். மேலும் என்னை பொறுத்தவரையில் லிவ்இன் ரிலேஷன்ஷிப் ஒன்றும் தவறு இல்லை. திருமணத்திற்குப் பிறகும் கணவன்-மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு அது விவாகரத்து வரை செல்வது இன்று வாடிக்கையாகி வருகின்றது. இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதேசமயம் திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் சந்தோஷமாக வாழலாம். அதனால லிவ்இன் ரிலேஷன்ஷிப் சரிதான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹா ம் கால்வாய்

சென்னை – ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியத் தொழில் நிறுவன கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை (07.04.2015) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார் பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள். இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது. தற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே, மீண்டும் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். நமது அரசு செய்யுமா? என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது. வந்த பதில்: The scheme for utilising the Buckingham canal as on inland water ways is under the consideration of the National Inland Waterway Authority and the same would be implemented in due course. Petitioner informed vide EIC WRD PWD Chepauk ch-5 lr.no.S7/CMP/CR/2014 dt 05.01.15. குவைத்திலிருந்து… பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ 864ed5a4619e22793acf118d114d11fd - 2026

பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்ப டுத்த நடவடிக்கை தேவை: இராமதாசு

பருப்புகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து வகை பருப்புகளின் விலையும் கடந்த சில நாட்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.25 வரை அதிகரித்துள்ளன. சர்க்கரை உள்ளிட்ட பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இப்பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று வணிகர்கள் கூறியுள்ளனர். மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கவலையளிக்கிறது. துவரம் பருப்பின் விலை கடந்த மாதம் வரை கிலோ ரூ.100 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.125 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல் உளுத்தம் பருப்பின் விலை கிலோ 90 ரூபாயிலிருந்து ரூ.115 ஆக உயர்ந்திருக்கிறது. கடலைப் பருப்பின் விலை கிலோ 50 ரூபாயிலிருந்து ரூ. 60 ஆக அதிகரித்திருக்கிறது. சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.2 வரையிலும், வெல்லம் விலை கிலோவுக்கு 5 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. பூண்டு விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. ஏற்கனவே மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு, பெட்ரோல் & டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பருப்பு வகைகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்திருப்பது ஏழை மக்களை பேரிடியாக தாக்கியிருக்கிறது. பருப்பு வகைகளின் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவும், ஆன்லைன் வணிகம் மூலம் சிலர் பெருமளவில் வாங்கி பதுக்கி வைத்திருப்பதும் காரணம் என்று கூறப்படுகிறது. விளைச்சல் குறைவால் ஏற்படும் தட்டுப்பாட்டை தடுக்க முடியாது. ஆனால், பருப்பு வகைகளை வாங்கி பதுக்கி வைப்பதன் மூலம் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை தடுக்கவும், போக்கவும் தமிழக அரசால் முடியும். ஆனால், இதற்காக சிறு துரும்பைக் கூட தமிழக அரசு கிள்ளிப் போடாதது கண்டிக்கத்தக்கதாகும். வெளிச்சந்தையில் ஏதேனும் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கான ஒரே வழி தட்டுப்பாடுள்ள பொருட்களை அரசு நிறுவனங்களின் மூலம் தாராளமாக வினியோகிப்பது தான். ஆனால், இதற்கு நேர் எதிரான செயலை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. சிறப்பு பொது வினியோகத்திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றின் வினியோகத்தை தமிழக அரசு பாதிக்கும் கீழாக குறைத்து விட்டது. ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் வழங்கப்பட வேண்டிய துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் அளவில் 40 முதல் 50 விழுக்காடு அளவுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீடு செய்கிறது. கடந்த 6 மாதங்களாகவே இதே நிலை தான் காணப்படுகிறது. பல நியாயவிலைக் கடைகளில் பருப்புகளே வழங்கப்படுவதில்லை. நியாய விலைக் கடைகளில் வழங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் 13,461 டன் துவரம் பருப்பும், 9,000 டன் உளுத்தம் பருப்பும் தேவை என்று தமிழக அரசு உணவுத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த சில மாதங்களில் மாதத்திற்கு சராசரியாக 17,500 டன் துவரம் பருப்பும், 9000 முதல் 9500 டன் உளுத்தம் பருப்பும் தமிழக அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தேவைக்கு அதிகமாகவே பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டும் நியாயவிலைக் கடைகளில் பருப்பு வினியோகிக்கப்படாததற்கு காரணம் என்ன? வாங்கப்பட்ட பருப்பு வகைகள் என்னவாயின? என்பதெல்லாம் ஆட்சியாளர்களுக்குத் தான் வெளிச்சம். நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள் தாராளமாக வினியோகிக்கப்பட்டால் தான் வெளிச் சந்தையில் பருப்புக்கான தேவை குறைந்து விலையும் குறையும். தமிழக அரசிடம் பல மாதங்களுக்குத் தேவையான துவரம் பருப்பும், உளுத்தம் பருப்பும் இருப்பதால், வெளிச்சந்தையில் விலை குறையும் வரை, அவற்றை குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ வீதம் வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படாத பொருட்கள் பதுக்கப்படுவதை தடுத்தும், பதுக்கப்பட்டதை மீட்டும் வெளிச்சந்தையில் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

போலி சான்றிதழ் விவகாரம்: தில்லி சட்ட அமைச்சருக்கு சிக்கல்

புதுதில்லி: தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சட்டத் துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமர், சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் அளித்துள்ளதாகத் தகவல் வெளியானது. சட்டத் துறை அமைச்சராக உள்ள தோமர் சட்டம் படிக்காமலேயே சட்டம் படித்ததாக போலி சான்றிதழ் அளித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இதுகுறித்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் தோமர் அளித்துள்ள சான்றிதழ்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்யுமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். பீகாரின், பாகல்பூர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அந்த சான்றிதழ்கள் அனுப்பப்பட்டன. அந்தப் பல்கலைக் கழகம் அளித்துள்ள பதிலில், அமைச்சர் குறிப்பிட்டுள்ள சான்றிதழ் எண், வேறொருவர் பெயரில் உள்ளதாகவும், சான்றிதழின் விவரங்கள் திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதை அறிந்த, பா.ஜ.க, மற்றும் காங்கிரஸ், ‘சட்டத் துறை அமைச்சர் தோமரை, பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என, முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. ஆனால், ‘இந்த விவகாரம் குறித்து, அமைச்சர் தோமர், நீதிமன்றத்தில் உரிய பதிலளிப்பார்’ என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்தது.

சாலையோர ஓட்டலில் புகுந்த அரசு பஸ்: டீ குடித்துக் கொண்டிருந்த 5 பேர் பரிதாப பலி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையோர ஹோட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மற்றும் பஸ்ஸுக்குக் காத்திருந்த 5 பேர் தறிகெட்டு வந்த பஸ் மோதி பரிதாபமாக பலியாகினர். மதுரையில் இருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் நேற்று இரவு 10 மணி அளவில் திருவண்ணாமலை நோக்கி வந்தது அந்த பஸ், திருக்கோவிலூர் கடந்து திருவண்ணாமலை நோக்கி தென்மாத்தூர் அருகே வந்தபோது, இன்று அதிகாலை பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தென்மாத்தூர் கூட்ரோடில் உள்ள முருகன் கோவில் அருகில் சாலையோரம் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. அப்போது, ஓட்டலில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீதும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் தென்மாத்தூர் காமராஜ் நகரைச் சேர்ந்த சீமான் (70), ஏழுமலை (40), அருணாசலம் (55), ரங்கன், தென்மாத்தூர் ராமலிங்கம்(58) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(53), முனுசாமி(48), தாணல்(80) ஆகிய 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் முனுசாமி, தாணல் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். 5 பேர் பலியான சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பலியான 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெறையூர் போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான டிரைவரை தேடி வருகின்றனர். விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், ஆட்சியர் ஞானசேகரன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி ஆகியோர் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். செய்தியாளர்: வி.பாலாஜி, திருவண்ணாமலை