Home Blog Page 6062

சுஷ்மா ஸ்வராஜுடன் தமிழக மீனவர்கள் ஏப்.27ல் சந்திப்பு

ராமநாதபுரம்: மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக மீனவப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். வரும் ஏப்.27ஆம் தேதி இந்த சந்திப்பு தில்லியில் நடக்கிறது. பேச்சுவார்த்தைக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், தமிழக–இலங்கை மீனவர்கள் சந்திப்பில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகிறது. எனவே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க தமிழக மீனவ பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது மீன்படி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இந்தக் காலத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கப்பட்டால் தடைக்காலம் முடிந்ததும் மகிழ்ச்சியுடன் மீன்பிடிக்க செல்லலாம் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் அடிப்படையில் தமிழக பாஜக., நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 27–ஆம் தேதி சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக தமிழக மீனவப் பிரதிநிதிகள் 150 பேர் தில்லிக்குச் செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசு, அல்போன்ஸ், மகத்துவம் உள்பட 26 பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை இன்று இரவு ராமேசுவரத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு சென்னை சென்று, மற்ற மீனவர்கள் குழுவுடன் இணைந்து தில்லி செல்கிறது.

முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் பயன் என்ன? : வைகோ கேள்வி

சென்னை: தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் என்ன பயன்? என்று  தமிழக அரசுக்கு வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சார்பில் மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் வேண்டுகோளை ஏற்று,  மாநாடு நடைபெறும் தேதி, மாற்றப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறி இருக்கிறது. சர்வதேச முதலீட்டாளர்களின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு உண்மையான கhரணம் என்ன என்பதை அ.தி.மு.க.அரசு வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனாலும் மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அரசின் நிலை நன்றாகத் தெரியும்.  அ.தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் தமிழகத் தொழில் வளர்ச்சியின் நிலை என்ன என்பது புலப்படும். 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் மதிப்பு 73,348 கோடி ரூபாய். 2012 இல் 21,253 கோடி ரூபாய் 2013 இல் 27,380 கோடி ரூபாய் 2014 இல் 14,349 கோடி ரூபாய் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துபோய் இருக்கிறது. இதற்கhன அடிப்படைக் கhரணம், தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் இல்லை. கடுமையான மின் தட்டுப்பாடு, அரசு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஊழல்கள் போன்றவற்றால் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் கhட்டுவது இல்லை. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஹூண்டாய் கhர் தொழிற்சாலை விரிவாக்கம் ராஜÞதான், குஜராத் மாநிலத்துக்குச் செல்லத் திட்டமிட்டு இருக்கின்றது. மகேந்திரா நிறுவனத்தின் ரூபாய் 4,000 கோடி மதிப்பிலான மோட்டர் வாகனத் தொழிற்சாலை அனுமதிக்கhகக் கhத்துக் கிடக்கின்றது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த இசுசு நிறுவனம் ஆந்திராவை நோக்கிப் போய்விட்டது. பிரான்சு நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனம் சென்னைக்கு அருகில் கண்ணாடித் தொழிற்சாலை தொடங்கியது. இதன் விரிவாக்க ஆலை 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜÞதான் மாநிலத்துக்குச் சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் இயங்கும் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் சிமெண்ட்  உற்பத்தி செய்யும் தனது சிமெண்ட் தொழிற்சாலையை ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைக்க அனுமதியைப் பெற்றுள்ளது. சென்னையில் இயங்கிவரும் ~போர்டு கhர் தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டங்கள் குஜராத் மாநிலத்துக்குக் கொண்டுபோகப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை அ.தி.மு.க. அரசு ஈர்த்துள்ள லட்சணம் இதிலிருந்து தெளிவாகிறது. கடந்த மூன்று ஆண்டுக் கhலத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 31,706 கோடி ரூபாய்க்கு வந்ததாகவும், இதற்கhகத் தமிழக அரசு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகவும், இதில் 14,305 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் என்பது மைனÞ 1.3 விழுக்கhடு என்று மத்திய திட்டக்குழு உறுப்பினர் அபகிஜித் சென் கடந்த ஆண்டு சுட்டிக்கhட்டினார். கடந்த 4 ஆண்டுகளில் உற்பத்தித் தொழில்துறையும், வேளாண்மைத் துறையும் தமிழ்நாட்டில் பெரும் சரிவை நோக்கிச் சென்றதால், ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2010-11 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்கhடு, 2011-12 இல் 7.42 விழுக்கhடு, 2012-2013 இல் 4.14 விழுக்கhடு 2013-14 இல் 5 விழுக்கhடு. இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள்தான் கhரணம் ஆகும். மின் உற்பத்தித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், அ.தி.மு.க. அரசு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை மே அல்லது செப்டம்பர் மாதம் நடத்தினாலும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவது இல்லை!

பாலிமர் டிவி அதிபர் மீது பொய்வழக்கு: ராமதாஸ் கண்டனம்

சென்னை:
பாலிமர் டிவி அதிபர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குக்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
சேலத்தில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவன அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழையும்படி பாலிமர் தொலைக்காட்சி ஊழியர்களைத் தூண்டியதாக அத்தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட 18 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் இலவசமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை முடக்கிய கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் அடுத்த கட்டமாக மற்ற தொலைக்காட்சி ஒளிபரப்பையும் முடக்க முயல்கிறது.
இதை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்ததுடன், அவர்களைத் தூண்டியதாக கல்யாணசுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்டால் பொய்வழக்குப் போடும் தமிழக அரசின் கலாச்சாரம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. பழிவாங்கும் போக்கை விடுத்து பாலிமர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். – என்று கூறியுள்ளார்.

பவானி ஆற்றில் குளித்த 3 பேர் மாயம்

கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் என்ன பயன்? தமிழக அரசுக்கு வைகோ கேள்வி

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., தமிழக அரசின் சார்பில் மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் வேண்டுகோளை ஏற்று, மாநாடு நடைபெறும் தேதி, மாற்றப்பட்டு உள்ளதாக தமிழக அரசு கூறி இருக்கிறது. சர்வதேச முதலீட்டாளர்களின் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு உண்மையான கhரணம் என்ன என்பதை அ.தி.மு.க.அரசு வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ஆனாலும் மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அரசின் நிலை நன்றாகத் தெரியும். அ.தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்ற 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை ஆராய்ந்தால் தமிழகத் தொழில் வளர்ச்சியின் நிலை என்ன என்பது புலப்படும். 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் மதிப்பு 73,348 கோடி ரூபாய். 2012 இல் 21,253 கோடி ரூபாய் 2013 இல் 27,380 கோடி ரூபாய் 2014 இல் 14,349 கோடி ரூபாய் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துபோய் இருக்கிறது. இதற்கhன அடிப்படைக் கhரணம், தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் இல்லை. கடுமையான மின் தட்டுப்பாடு, அரசு நிர்வாகத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஊழல்கள் போன்றவற்றால் எந்த நிறுவனமும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வம் கhட்டுவது இல்லை. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஹூண்டாய் கhர் தொழிற்சாலை விரிவாக்கம் ராஜÞதான், குஜராத் மாநிலத்துக்குச் செல்லத் திட்டமிட்டு இருக்கின்றது. மகேந்திரா நிறுவனத்தின் ரூபாய் 4,000 கோடி மதிப்பிலான மோட்டர் வாகனத் தொழிற்சாலை அனுமதிக்கhகக் கhத்துக் கிடக்கின்றது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்த இசுசு நிறுவனம் ஆந்திராவை நோக்கிப் போய்விட்டது. பிரான்சு நாட்டின் செயிண்ட் கோபைன் நிறுவனம் சென்னைக்கு அருகில் கண்ணாடித் தொழிற்சாலை தொடங்கியது. இதன் விரிவாக்க ஆலை 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ராஜÞதான் மாநிலத்துக்குச் சென்றுவிட்டது. தமிழ்நாட்டில் இயங்கும் ராம்கோ சிமெண்ட் நிறுவனம் ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தனது சிமெண்ட் தொழிற்சாலையை ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைக்க அனுமதியைப் பெற்றுள்ளது. சென்னையில் இயங்கிவரும் ~போர்டு கhர் தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டங்கள் குஜராத் மாநிலத்துக்குக் கொண்டுபோகப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளை அ.தி.மு.க. அரசு ஈர்த்துள்ள லட்சணம் இதிலிருந்து தெளிவாகிறது. கடந்த மூன்று ஆண்டுக் கhலத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 31,706 கோடி ரூபாய்க்கு வந்ததாகவும், இதற்கhகத் தமிழக அரசு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகவும், இதில் 14,305 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் என்பது மைனÞ 1.3 விழுக்கhடு என்று மத்திய திட்டக்குழு உறுப்பினர் அபகிஜித் சென் கடந்த ஆண்டு சுட்டிக்கhட்டினார். கடந்த 4 ஆண்டுகளில் உற்பத்தித் தொழில்துறையும், வேளாண்மைத் துறையும் தமிழ்நாட்டில் பெரும் சரிவை நோக்கிச் சென்றதால், ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2010-11 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 13.12 விழுக்கhடு, 2011-12 இல் 7.42 விழுக்கhடு, 2012-2013 இல் 4.14 விழுக்கhடு 2013-14 இல் 5 விழுக்கhடு. இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு அ.தி.மு.க. அரசின் செயல்பாடுகள்தான் கhரணம் ஆகும். மின் உற்பத்தித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றி, அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், அ.தி.மு.க. அரசு தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை மே அல்லது செப்டம்பர் மாதம் நடத்தினாலும் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப்போவது இல்லை! என அவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.24-04-15 Vai.ko News photo 02 24-04-15 Vai.ko News photo 01  

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம்

மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே 11 ஆம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் மே 28. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் மே 29.

மருந்து விலைக் கட்டுப்பாடு தளர்த்தக் கூடாது: ஜி.கே.மணி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசியபோது…. மத்தியஅரசு மருந்துக்கான விலை கட்டுப்பாட்டைத் தளர்த்தப் போவதாக தகவல் உள்ளது. இதனால் அதிக தேவையுள்ள மருந்துகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே விலைகட்டுப்பாட்டை தளர்த்தக்கூடாது. மாணவர்களுக்கு கல்விக்கடன் எளிமையாக கிடைக்க வழிசெய்ய வேண்டும். விவசாயிகள் வாழ்க்கையை மேம்படுத்த அரசு வட்டியில்லா கடன் வழங்கவேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி வறட்சி மாவட்டமாக உள்ளது. தாமிரபரணி ஆற்றிக் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் தேவையற்றது. மத்திய அரசு இதை கைவிட வேண்டும். என்றார்.

செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு!

சித்தூர்: செம்மரக் கடத்தல் கும்பலுக்கும் ஆந்திர உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்ட தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திர மாநில உயர் போலீஸ் அதிகாரிகளுடன் செம்மரக் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநில வனப் பகுதிகளில் இருந்து செம்மரக் கட்டைகள் வெட்டப்பட்டு, வெளி நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. செம்மரக் கட்டைகள் அவ்வப்போது பிடிபடுவதும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும், அவர்கள் பின்னர் ஜாமீனில் வெளிவருவதும் தொடர்கதையாகத்தான் உள்ளது. இந்நிலையில் ஏப்..7ஆம் தேதி திருப்பதி வனப்பகுதியில் தமிழக கூலித்தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தி சுட்டுக் கொன்றனர். இதை அடுத்து, செம்மரக் கடத்தலில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளைப் பிடிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், தில்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும், வங்கதேசம், மியான்மர் நாடுகளிலும் இந்த செம்மரக் கடத்தலில் பலருக்கு தொடர்புள்ளது தெரியவந்தது. இதனிடையே ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள லட்சுமணன், சினிமா தயாரிப்பாளர் மஸ்தான் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் மொரீஷியஸ் நாட்டில் பதுங்கியிருந்த கெங்கிரெட்டி கைது செய்யப்பட்டார். இந்தக் கடத்தலில் தமிழக முன்னாள் எம்பி சவுந்தரராஜன், சரவணன், குமார் உட்பட பலரது தொடர்பு குறித்தும் தெரிய வந்ததையடுத்து ஆந்திர போலீசார் பூடானில் சீன எல்லையில் பச்சிமாபெங்கா என்ற இடத்தில் இருந்த முன்னாள் எம்பி சவுந்தரராஜனைக் கைது செய்து, அங்கு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர். அடுத்து, சென்னை செங்குன்றத்தில் பதுங்கியிருந்த சரவணன், குமார் ஆகிய 2 பேரைக் கைது செய்து, சவுந்தரராஜனின் குடோனில் இருந்து 5 டன் செம்மரங்களையும் கைப்பற்றினர். பூடானில் பிடிபட்ட சவுந்தரராஜன் பின்னர் சித்தூர் கொண்டு வரப்பட்டார். அதை அடுத்து, சவுந்தரராஜன் உட்பட சரவணன், குமார் ஆகிய 3 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் இந்த விவகாரத்தில் ஆந்திர போலீஸ் உயர்அதிகாரிகளின் தொடர்பு குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கைது செய்யப்பட்ட சவுந்தரராஜனை மட்டும் சித்தூர் 3ஆவது கூடுதல் மாவட்ட முன்சீப் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதை அடுத்து, அவரை மே.7ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விவசாயி தற்கொலை எனத் தெரிந்தும் நான் பேசியிருக்கக் கூடாது: கேஜ்ரிவால் கேட்டார் மன்னிப்பு

புது தில்லி: ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிந்தும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டும் நான் என் பேச்சைத் தொடர்ந்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவார். மேலும், விவசாயி தற்கொலை தொடர்பாகத் தாம் பேசியதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்… ஆம் ஆத்மி கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதும் நான் உடனே பேரணியை ரத்து செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நான் செய்த தவறு. விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று என்னிடம் தகவல் கூறப்பட்டும் நான் என் பேச்சைத் தொடர்ந்திருக்கக் கூடாது. அப்படி நான் நடந்து கொண்டது யார் மனதையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விவசாயி தற்கொலை குறித்து தில்லி போலீசார் நடத்தி வரும் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராகவுள்ளேன். இந்த விஷயத்தில் ஆம் ஆத்மி தொண்டர்களை குறை கூறுவது தவறு. தில்லி போலீசார் என்னை அழைத்தால், தேவைப்பட்டால் அவர்கள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிப்பேன். தில்லி போலீசார் இந்த விஷயத்தில் நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும். விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட வேண்டும். அவர்கள் போலீஸ்காரர்களாக இருந்தாலும் சரி, ஆம்ஆத்மி தொண்டர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். தில்லியில் மாநில அரசும் மாஜிஸ்திரேட் மூலம் தனி விசாரணை நடத்துகிறது. கஜேந்திரசிங் தற்கொலையை அரசியலாக்குவதை விட்டுவிட்டு, விவசாயிகளுக்கு பயிர் சேதத்துக்கு எத்தகைய கூடுதல் இழப்பீடு கொடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என்றார்.

விவசாயி தற்கொலைக்கு ஆம் ஆத்மியே காரணம்: தில்லி போலீஸ்

புது தில்லி: தில்லியில் ஆம் ஆத்மி பேரணியின் போது, விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆம்ஆத்மியே காரணம் என்று போலீசார் கொடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். விவசாயி கஜேந்திரசிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள ஆம்ஆத்மி தொண்டர்கள் தான் கை தட்டி தூண்டி விட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.