Home Blog Page 6080

காங்கிரஸுடன் இணைந்து இனி போராட்டம் இல்லை: மார்க்சிஸ்ட்

விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகளுக்கும், ஹிந்துத்துவா அமைப்புகளின் மதவாதத் திட்டங்களுக்கும் எதிரான போராட்டத்தை வலுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருட்டு விசிடி தயாரித்தவர் கைது: 2500 சிடிக்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில், தலைமறைவாக இருந்த திருட்டு விசிடி விற்றவர் கைது கைது செய்யப்பட்டார். சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் அகமது சுலைமான்((38). இவர், திருட்டு விசிடிக்கள் தயாரித்து விற்று வந்துள்ளார். தகவல் அறிந்து இவரை போலீஸார் தேடினார். தலைமறைவாக இருந்த அகமது சுலைமானை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2,500 திருட்டு சிடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைக்கப்படும்: சீதாராம் யெச்சூரி

seetharam_yechury விசாகப்பட்டினம்: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இணைக்கப்படும், அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன என்று மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார். நேற்று விசாகப் பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி இதனைக் குறிப்பிட்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இரு கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு கால அளவை நிர்ணயிக்கவில்லை. முடிந்த அளவுக்கு விரைவில் இரு கட்சிகளையும் ஒன்றாக இணைக்க முயற்சி செய்து வருகிறோம். அது, அடுத்த 2 மாதங்களிலும் நடக்கலாம் அல்லது 6 மாதங்களிலும் நடக்கலாம். ஆனால், இரு கட்சிகளும் ஒன்றாக இணைவது நிச்சயம் என்று குறிப்பிட்டார். முன்னதாக அவர் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கட்சியினரிடையே பேசும்போது, ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி இயக்கத்தையும் வலுப்படுத்த வேண்டியது நமது பணி. உலக அளவில், முதலாளித்துவத்தால் ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு, தீர்வு காண சோஷலிசத்துக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதைத் தவிர வேறு மாற்று எதுவும் கிடையாது. மனித சமுதாயத்தின் எதிர்காலம் சோஷலிசத்தையே சார்ந்துள்ளது என்றார்.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலரானார் சீதாராம் யெச்சூரி

விசாகப்பட்டினம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி (62) ஞாயிற்றுக்கிழமை நேற்று தேர்வு செய்யப்பட்டார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-ஆவது தேசிய மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, அக்கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், மூத்த தலைவர் ராமச்சந்திரன் பிள்ளையும் முன்மொழிந்தனர். மேலும், மத்திய குழுவுக்கு 91 உறுப்பினர்களும், அரசியல் தலைமைக் குழுவுக்கு (பொலீட் பீரோ) 16 உறுப்பினர்களும் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னையில் திருட்டு விசிடி தயாரித்தவர் குண்டர் சட்டத்தில் கைது

Faizal Rahmanசென்னை: சென்னையில் திருட்டு விசிடி தயாரித்து விற்றவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸார் தெரிவித்தது…. சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்த பைசல் ரகுமான் (32) வாடகைக்கு வீடு எடுத்து, ரெகார்ட் செய்யும் தொழில்நுட்ப இயந்திரங்கள் மூலம் புதிய திரைப்படங்களின் விசிடிக்களை தயாரித்து விற்று வந்துள்ளார். தகவல் அறிந்து சென்ற போலீஸார் கடந்த மாதம் 28-ஆம் தேதி பைசல் ரகுமானை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பதிவு இயந்திரங்களும், 10,725 திருட்டு விசிடிக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் பைசல் ரகுமானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல்துறை ஆணையர் எஸ். ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

14.5 கிலோ தங்கம் மாயம்: திருச்சி சுங்கத் துறை அலுவலகத்தில் திருட்டு

திருச்சி: திருச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் நள்ளிரவு 14.5 கிலோ தங்க நகைகள் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 14.5 கிலோ தங்கம் மாயமானது சனிக்கிழமை நள்ளிரவு கண்டறியப்பட்டது. இதை அடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப் படும் தங்கம், விலை உயர்ந்த பொருள்கள் அனைத்தும் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள மத்திய கலால்-சுங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் தங்கத்தின் மதிப்பு ரூ. 1 கோடிக்கு மேல் இருந்தால் அதைக் கடத்தி வரும் நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்கு முடியும் வரை அந்த தங்கம் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படும். அவ்வகையில், சில மாதங்களுக்கு முன்னர் முத்துப்பேட்டையில் காரில் ஒருவர் கடத்தி வந்த 22 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதுவரை 75 கிலோ தங்கம் வரை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து டைகர் ஏர்வேஸ் விமானத்தில் வந்த நவாஸ்கான் என்பவர் கொண்டு வந்த 7 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை சுங்கத் துறை ஆணையர் கே.சி. ஜானி சனிக்கிழமை நள்ளிரவு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கச் சென்றார். அப்போது, ஏற்கெனவே அதில் வைக்கப்பட்டிருந்த 75 கிலோ தங்கத்தில் 14.5 கிலோ தங்கம் திருடப்பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. இதையடுத்து அவர், சனிக்கிழமை நள்ளிரவு 12.30க்கு திருச்சி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரை அடுத்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அங்கே சென்று அனைவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், சுங்கத் துறை அலுவலகத்தில் வெளியே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். திருடப்பட்டுள்ள தங்கத்தின் மதிப்பு சுமார் 3.50 கோடி ரூபாய் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்படவில்லை என்பதால், அங்கே பணிபுரியும் அதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே ஆலமரத்தில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

19.04கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை அருகே சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பெண்கள், ஒரு சிறுவன், ஒரு சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதி ஓமக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வில்சன் (50) அங்குள்ள வேளாண் கூட்டுறவு வங்கியில் காசாளராகப் பணிபுரிந்தார். இவரின் மனைவி ரெஜினாமேரி (42) ரெட்டிவலசை அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியிலிருந்தார். இவர்களின் மகன் ஜோயல் (9) நான்காம் வகுப்பும், மகள் ஜெனிதா (6) ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்கள் நால்வருடன், வில்சனின் தாயார் நெட்டில்டா சுசிலாபாய் (70), மூத்த சகோதரி பிரேமகுமாரி (52), இளைய சகோதரி லில்லி ஜாய் மேரி (47) என 7 பேரும் ஓமக்குப்பத்தில் இருந்து திருவண்ணாமலை அருகேயுள்ள கீழ்பெண்ணாத்தூர் சர்ச் ஒன்றில் நடைபெற்ற பெயர் சூட்டு விழாவுக்காக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் சென்றனர். காரை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் திலீப்குமார் (28) ஓட்டிச் சென்றார். அவர்கள் சென்ற கார், சிங்காரப்பேட்டை அருகேயுள்ள நாற்சாம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி சாலையோர ஆலமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் திலிப்குமார் பலத்த காயங்களுடன் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐபிஎல் 8 : மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றி

mumbai-indiansபெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை போராடி வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஞாயிறு இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 16ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதை அடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய மும்பை வீரர்கள் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை அறிந்து, விரைவாக ரன்களைக் குவித்தனர். லென்டில் சிமோன்சும், உன்முக் சந்தும் அதிரடி காட்ட, மும்பை அணி 12ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. சிமோன்ஸ் 59 ரன்னில் ஆட்டம் இழந்த பின் ரோகித் சர்மா தனது அதிரடியைத் துவக்கினார். இதனால் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. உன்முக் சந்த் 58 ரன்களும் ரோகித் சர்மா 42 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவரில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் 76 ரன் சேர்த்தது மும்பை அணி. இதன் பின்னர் 209 ரன் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில் துவக்கம் சரியாக அமையவில்லை. கிறிஸ் கெய்ல் 10 ரன்னிலும் விராட் கோலி 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின் வரிசையில் டிவில்லியர்ஸ் 11 பந்தில் 41 ரன் குவித்தார். இந்த ஐ பி எல் தொடரில் ஒரு மெகா சிக்ஸர் அடித்தார். அந்தப் பந்து 108 மீட்டர் தொலைவுக்குப் பறந்தது. பின்னர் டேவிட் வைஸ் 47 ரன் எடுத்தார். இருந்தாலும், பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.

“காணாமல் போன அடையும்,தோசையும்”

20683_671948076266709_3512172854606087227_n“காணாமல் போன அடையும்,தோசையும்” (பெரியவாளின் திருவிளையாடல்) 2011 நவம்பர் போஸ்ட்-மறு பதிவு ஏகாதசியன்று பெரியவா நிர்ஜல உபவாசம். ஆனால் தொண்டு செய்யும் சிஷ்யர்களார் அவ்வளவு கட்டுப்பாடாக இருக்க முடியுமா? “கொலை பட்டினியாக” இல்லாமல், பலகாரம் சாப்பிடுவார்கள் [முழு பட்டினியாக ஓரிரு சிஷ்யர்கள் இருப்பார்கள்] ஸ்ரீ மடத்தில் பலகாரம் என்றால், அரிசி உப்புமாதான் [இது ரொம்ப பிரசித்தம்] இட்லி, தோசை, அடை,பூரி என்று எதுவும் செய்வது கிடையாது. ஒரு ஏகாதசி, சிஷ்யர்களுக்கு அடை சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை. தேவையான சாமான்களை சேகரித்து, மாவு அரைத்து தயாராக வைத்து விட்டார்கள். பிற்பகல் ஒரு மணி, அடுப்படியில் சுமார் 50 அடைகளை வார்த்து வைத்து விட்டார். எல்லாருக்கும் பசி. நாக்கை சப்பு கொட்டிக்கொண்டு அடை பலகாரத்துக்கு உட்கார்ந்தார்கள். ஒருவர் இலையை எடுத்து போட்டுக்கொண்டிருந்தபோது, உத்தரவு வந்தது…”பெரியவா எல்லாரையும் வர சொல்றா” அடுத்த நிமிஷம் அத்தனை பெரும் பெரியவா எதிரில். “விஷ்ணு சஹஸ்ரநாமம் எல்லோரும் ரெண்டு தடவை சொல்லுங்கோ” ஒரு வழியாக சஹஸ்ரநாம பாராயணத்தை முடித்து கொண்டு, அடை த்யானத்துடன், சமையல்கட்டுக்கு ஓடினார்கள்.ஆனால் ……அந்தோ! பரிதாபம்! ஒரு அடை கூட காணப்படவில்லை. “என்னடா ஆச்சு?” “என்ன ஆச்சா? இன்னான் [பெயர் இல்லை] வந்து சாப்பிட்டானாம்! மீதியை ராத்ரிக்காக கட்டிண்டு போயிட்டானாம்!!!” காட்டு இரைச்சல். ஆனால் என்ன செய்ய? அடை நடை பயணமாக எங்கேயோ போய்டுத்து ஏகாதசியன்று நிஜமான உபவாசம் சிஷ்யர்களுக்கும்! இன்னொருமுறை சின்ன கிராமத்தில் முகாம். ஏகாதசி. தோசை பலகாரத்துக்கு பக்காவாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மத்யான்னம், டூரிஸ்ட் பஸ்ஸில் பக்தர்கள் தரிசனத்துக்காக வந்தார்கள். பெரியவா, சமையல்கட்டில் சேவை செய்த வேதபுரியை கூப்பிட்டு, எல்லாருக்கும் பலகாரம் பண்ண சொன்னார். வேதபுரி வார்த்து வைத்திருந்த தோசைகளை போட்டு, பஸ் கும்பலை திருப்தி பண்ணி விட்டார். [தனியா உப்புமா செய்து போட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு வரலியாம்!!] பசியோடிருந்த பணியாளர்கள் காச்மூச்சென்று கத்தினார்கள். என்ன பலன்? தோசை வரப்போறதா என்ன? உஷ்ணத்தை தணிக்கவே எல்லாருக்கும் நிறைய மோர் கடைந்து குடுத்தார் வேதபுரி………உப்பு போடாமல்! ஏகாதசி உபவாசம், த்வாதசி பாரணை செய்தால் மகத்தான புண்ணியம்! சிஷ்யர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைத்தது! தெய்வ சங்கல்பம்!