Home Blog Page 6082

கோலி ரன் எடுத்தால் அனுஷ்கா ‘மேன் ஆப்ஃத மேட்ச்’: ப்ரீதி ஜிந்தா

preity-zinta யாரெல்லாமோ ஆதரவுக் குரல் கொடுத்தாலும், சக நடிகையும், ஐபிஎல்லில் ஒரு அணியின் உரிமையாளருமான ஒருவரின் குரல் இப்போது அனுஷ்காவின் நெஞ்சைத் தொட்டுவிட்டது. விராட் கோலி நன்றாக விளையாடி ரன் அடித்தால், மேன் ஆஃப் த மேட்ச் அனுஷ்காவுக்குத்தான் என்று குரல் கொடுத்துள்ளார் பாலிவுட் நடைகையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீதி ஜிந்தா. ஏற்கெனவே உலகக்கோப்பை போட்டியில் விளையாட ச் சென்ற கோலிக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுப்பதற்காக உடன் சென்றார் அனுஷ்கா சர்மா. முக்கியமான அரையிறுதிப் போட்டியில் கோலி சொதப்ப, அவருக்கு ரசிகர்களின் கண்டனைக் கணைகள் அனுஷ்காவை வசை பாடும் உருவில் வந்து சேர்ந்தன. இந்த நிலையில், உடனடியாக ஐபி எல் போட்டிகள் தொடங்கி விட்டன. இப்போது விராட் விளையாடுகிறார். எப்படி அவர் மோசமாக விளையாடியபோது, அனுஷ்கா காரணம் என்று எல்லாரும் அவரை விமர்சனம் செய்தார்களோ அப்போது, அவர் நன்றாக அடிக்கும் ஒவ்வொரு செஞ்சுரிக்கும் அனுஷ்கா பாராட்டைப் பெறுவது முறைதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார் ப்ரீதி ஜிந்தா. மேலும், கோலி செஞ்சுரி அடித்தால், அனுஷ்கா மைதானத்தின் நடுவில் சென்று அவர் ரசிகர்களின் பாராட்டைப் பெறவேண்டும். அதற்கு அவர் தகுதியானவர் என்று கூறியுள்ளார் ப்ரீதி ஜிந்தா.

கட்டுப்பாடற்ற இணைய சேவை கிடைக்க அரசு நடவடிக்கை தேவை: வைகோ

19-03-15 Vai.Ko News photo 03ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது., தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள் இணைய சேவைகளை இலவசமாக வழங்குவதால் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன. இணையதளம் என்பது நாட்டின் சொத்து. அலைக்கற்றைகள் மூலமாக இணைய சேவை அளிப்பதற்கு மத்திய அரசு உரிமங்கள் தருகின்றது. இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் சில இணையதள தகவல் தொகுப்புகளை கட்டுப்படுத்த விரும்புகின்றன. இதனால் இணைய சமநிலை (சூநவ சூநரவசயடவைல) பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கணினிகள், கைப்பேசிகள், டேப்லட் போன்றவற்றின் மூலம் இணைய சேவையை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் அதற்கு உரிய கட்டணங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் இக்கட்டணங்களை விருப்பம்போல அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ளும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தற்போது இணையதள பக்கங்களை மக்கள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சி செய்கின்றன. இணையதள நிறுவனங்கள், வாட்ஸப், பேÞபுக், ஹைப், யூடியுப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் தயாரிப்பாளர்கள் கட்டணம் செலுத்தினால்தான் அவர்களின் இணையதளங்களை விரைவான வேகத்தில் அளிக்கப்படும். இல்லையேல் குறைந்த வேகத்தில்தான் செயற்படும் என்று கூறுகின்றன. இதனால் இனி இந்த சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். தொலைத் தொடர்பு நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுகுறித்து வரைவு அறிக்கை ஒன்றை மார்ச் 27 ஆம் தேதி மக்கள் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டு இருக்கிறது. ‘ட்ராய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதளங்கள் கட்டணம் இன்றி பார்க்கும் வசதி தொடர்ந்தால் தனிமனிதர் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த இணையப் பக்கங்களை காண வேண்டும் என்பதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இணையதள நிறுவனங்கள் அளிக்கும் கட்டணத்திற்கு ஏற்பவே ‘இணையத்தின் வேகம்’ இருக்கும் என்பதால் சில இணையதளங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும். இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி இணைய பக்கங்களை பயன்படுத்தும் வாய்ப்பு பறிபோகும். இணையதள சமநிலையை சீர்குலைக்கும் வகையில், தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என்று இதுவரை 8 இலட்சம் வாடிக்கையாளர்கள் ‘ட்ராய்’க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். மக்கள் தேவைகளுக்கு ஏற்ப எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி விருப்பம் போல இணையதள சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அன்புமணியின் மது ஒழிப்பு போராட்டம்: 1 லட்சம் பேர் கலந்து கொள்ள உறுதி

19-04-15 Karur pmk News photo 02 கரூர் கோவை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க கட்சியின்  மகளிரணி கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பா.ம.க கரூர் மாவட்ட பொருளாளர் பாக்கியலெட்சுமி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கூறியதாவது.,19-04-15 Karur pmk News photo 04 நமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே மதுவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. நாம் குடியை நிறுத்து, குடிப்பழக்கம் உயிரை கொல்லும் என வலியுறுத்தி பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினால் தமிழக அரசு நாளுக்கு நாள் குடியுங்கள், குடியுங்கள் என டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வருகிறது. இதனால் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அ.தி.மு.க அரசே தாலியை அறுக்கிறது. எனவே மதுவினால் மாண்டவர்கள் அதிகமானோர். ஆதலால் குடியை நிறுத்தவும், குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நமது கட்சி இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அரசு செவிடன் காதில் ஊதும் சங்கு போல தான் உள்ளது. ஆனால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலின் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு மதுவிற்கு எதிரான பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார். எனவே கரூரில் வரும் மே மாதம் நடைபெற உள்ள மதுஒழிப்பு போராட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். 19-04-15 Karur pmk News photo 03ஆகவே இந்த அறப்போராட்டத்தில் பா.ம.க மகளிரணியினரை சார்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மகளிரணியினரின் பலத்தை நிருபிக்க வேண்டும் என சூளுரை விடுத்தார். மேலும் இந்த அறப்போராட்டத்தை தொடர்ந்து மதுவை ஒழிக்க மகளிரணியினர் திண்ணை பிரச்சாரம் மூலம் ஈடுபட வேண்டும். மகளிரணியினர் தங்களது முழு போராட்டத்தை மதுவுக்கு எதிராக அற வழியில் பாடுபட்டு ஐயாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இக்கூட்டத்தில் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ந.மு.விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் தாந்தோன்றி ராஜா, கடவூர் பழனிச்சாமி, க.பரமத்தி சந்திரன், அரவக்குறிச்சி ரமேஷ், கரூர் கிழக்கு முத்துசாமி, கரூர் மேற்கு மூர்த்தி, கிருஷ்ணராயபுரம் பூவேந்திரன், கிருஷ்ணராயபுரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் வாங்கல் சதீஸ், சண்முகம், கண்ணன், அறிவழகன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏராளமான மகளிரணியினரும் கலந்து கொண்டனர். முடிவில் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன் நன்றி கூறினார்.

விபத்தில் சிக்கும் மாணவர்களை காக்க ரத்த பிரிவுடன் பஸ் பாஸ்,ஐ.டி., கார்டு

அரசு பள்ளிகள் மாணவ, மாணவியரின், ‘பஸ் பாஸ்’களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகமாகிறது. வாகன மற்றும் பள்ளி விபத்துகளில் சிக்கும் மாணவர்களுக்கு உடனடி சிகிச்சை தரும் வகையில், இத்திட்டம் அமலாகிறது.

பள்ளி வாகனங்களில் விபத்து, சுவர் இடிந்து விபத்து, மாணவர்களிடையே பஸ்களில் மோதல், பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் விபத்து ஏற்பட்டு பலி மற்றும் காயம் என, எதிர்பாராத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. விபத்துகளில் மாணவ,மாணவியர் காயமடையும்போது, ரத்தப் பிரிவு தெரியாமல், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தாமதமாகிறது.
இதனால், பல நேரங்களில் மாணவ, மாணவியரின் உயிரிழப்பைத் தடுக்க முடியவில்லை என, கல்வித் துறை அதிகாரிகளிடம், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த சில வாரங்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுவர் இடிந்து, மாணவர்கள் பலியாகும் விபத்துகளும் அதிகரித்து உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு கல்வித்துறை அதிகாரிகள், மருத்துவத் துறையினருடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, புதிய திட்டங்கள் கொண்டு வர உள்ளனர்.
முதற்கட்டமாக, அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, மாணவ, மாணவியரின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதை, பள்ளியின் ஆவணங்கள், ‘ஐ.டி., கார்டு, பஸ் பாஸ்’ போன்றவற்றில் குறிப்பிட, முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
பள்ளி ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் பிளஸ்-2 முடித்தவுடன் நேரடியாக இந்தப் படிப்புகளில் சேர்ந்து ஆசிரியர் பணிக்கான தகுதியைப் பெற முடியும்.
இந்தப் படிப்புகள் (தென் மண்டல பகுதியினருக்கு) கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள மத்திய அரசின் மண்டல கல்வி நிறுவனத்தில் (ஆர்.ஐ.இ.) மட்டுமே வழங்கப்படுகின்றன.
பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 2015-16 கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு www.rieajmer.raj.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய மே 11 கடைசித் தேதியாகும். தேர்வறை அனுமதிச் சீட்டை மே 14-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். நுழைவுத் தேர்வு ஜூன் 7-ஆம் தேதி நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு படித்தாயிற்று…. அடுத்து?

 

எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., பி.ஏ., என பாரம்பரிய படிப்புகளை மட்டுமே இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்கிற பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் எதைப் பெற வேண்டும், அதை எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதோடு மட்டுமல்லாது, பற்று கொண்டால் நாம் எதையும் அடையலாம்.
நமது வாழ்க்கையின் விடலை பருவத்தில் அதாவது பள்ளி படிப்பை முடித்த காலகட்டத்தில் கண்ணில் பார்த்தது எல்லாம் மனசுக்கு நல்லதாகவே தெரியும். ஆனால் நீண்ட காலத்தில் தவறாக இருப்பதற்கு சாத்திய கூர்கள் அதிகம். இது ஒருவருடையே வாழ்கையில் முக்கிய முக்கியமான காலகட்டம். இந்த காலகட்டத்தில் நாம் எடுக்கும் முடிவு சரியான மற்றும் உறுதியான முடிவாக இருக்க வேண்டும். அதாவது திருமணத்திற்கு நாம் எடுக்கும் முடிவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு முக்கியமானதாகும்.
முடிவுகள் எடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்:
1. தன் மீதான நம்பிக்கை
2. நாம் செய்யப்போவதை பற்றிய சரியான தகவல்கள்
3. தனது குடும்பத்தின் பொருளாதார பின்னணி
4. நாம் எடுக்க போகும் பாடத்தில் நமக்கு உள்ள நாட்டம்
5. சாதிக்க வேண்டும் என்ற வெறி
6. வரையறுக்கப்பட்ட குறிக்கோள்
7. காலத்தின் மதிப்பை உணர்தல்
நம்பிக்கை என்னும் ஆயுதத்தையும் நாம் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தையும் அடிப்படை குறிக்கோளாக கொள்ள வேண்டும். ஈடுபாடு உடைய உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். அதுமட்டுமல்லாது தெளிவான குறிக்கோள் மட்டுமே இலக்காக கொள்ள வேண்டும். இவ்வாறு முயற்சி செய்து அது முடியாமல் போனால் அல்லது தாமதமானால் வேறு வழியில் பயிற்சி செய்து நமது குறிக்கோளை அடைய வேண்டும்.
நமது முடிவு செய்த குறிக்கோளை அடைய நாம் செலவழிக்கும் நேரத்தை பணத்தின் அடிப்படையில் உணர பழக வேண்டும். அதாவது நாம் சினிமா பார்ப்பதற்கு ஆகும் செலவு மற்றும் நேரத்தை ஒரு நூலகத்தில் நாம் படிப்பதற்காக செலவு செய்தால் அந்த பணத்தின் மதிப்பு எப்படி இருக்கிறது என்று நாம் உணர வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சினையும் நமது முன்னேற்றதிற்காக நாம் கற்றுகொள்ளும் அனுபவம் ஆகும். ஒவ்வொருஅனுபவமும் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதே என்றும் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தையும், மற்றவர்களுடன் நல்ல கருத்துக்களைக் கொண்டு விவாதிப்பதையும் வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இத்தகைய பழக்கம் கல்விக்கும், எதிர்காலத்துக்கும் பயனுள்ளதாக அமையும்

+2 படித்தப்பிறகு எதை தேர்வு செய்யலாம்:படிப்புகளின் பட்டியல்

1 விஞ்ஞானம்-Natural Sciences
2 புவி அறிவியல் – Earth Sciences
3 கணிதம்-Mathematics
4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology
5 சமூக விஞ்ஞானம்-Social Sciences
6 கலைத்துறை -Humanities
7 வணிகவியல்-Business
8 கலைகள்-Arts and Crafts

இயற்பியல்/பூதியல் – Physics
அணுவியல் – Atomic/Particle Physics
ஒளியியல் – Optics
ஒலிவியல் – Acoustics
இயக்க விசையியல் – Kinetics
இயக்கவியல் – Mechanics
பாய்ம இயக்கவியல் – Fluid Mechanics
வெப்பஇயக்கவியல்/தெறுமத்தினவியல் – Thermodynamics
மின்காந்தவியல் – Electromagnetics
அணுக் கரு இயல்பியல் – Nuclear Physics
புவி இயல்பியல் – Geophysics
குவாண்டம்/துணுக்கம்/சத்திச் சொட்டு இயல்பியல்- Quantum Physics
வானியல் – Astronomy
அண்டவியல் – Cosmology
விண்வெளி அறிவியல் – Space Science
ஒலிப்பிறப்பியல்
மின்னியல்
உயிரியல்-Biology
உடற்செயலியல்-Physiology
விலங்கியல்-Zoology
விலங்கின நடத்தையியல்
தாவரவியல்-Botany
தொல்லுயிரியல், புதைப்படிமவியல், பழவூற்றியல்-Paleontology
நுண்ணுயிரியல்-Microbiology
உயிர்வேதியியல்/உயிர் இரசாயனவியல் (இ.வ)-Biochemistry
மூலக்கூறு உயிரியல்-Molecular Biology
மரபியல்-Genetics
வேதியியல், இரசாயனவியல்(இ.வ) – Chemistry
கரிம வேதியியல் – Organic Chemistry
கனிம வேதியியல் – Inorganic Chemistry
விகிதவியல் – Stoichimometry
மின்னிரசானவியல் – Electrochemistry
நிறமாலைகாட்டியல் – Spectroscopy
நச்சியல் – Toxicology
பொருளறிவியல் – Material Science
உலோகவியல் – Metallurgy
Reaction Kinetics
Chemical Processes
மருத்துவவியல்-Medical Sciences
உள்ளமைப்பியல், உள்ளுறுப்பியல், உறுப்பமைப்பியல் – Anatomy
செவியியல் – Otology
கண்ணியல் – Ophthalmology
பல்லியல் – Dentistry
தோலியல் – Dermatology
திசுவியல் – Histology
ஏதுவியல், காரண காரிய ஆய்வியல் – Etiology
மிடற்றியல் – Laryngolog
பல் மருத்துவம் – Dentistry
உணர்வகற்றியல் – Anesthesiology
நெவிநாசிமிடற்றியல் – Otorhinolaryngology
அறுவை மருத்துவம் – Surgery
மருந்தியல் – Pharmacology
உணவியல் – Nutrition
நலமீட்பு பணி – Nursing
பிறப்பு இயல், ஈன் இயல், பேறு இயல், பேற்றியல் – Obsterics
நரம்பியல் – Neurology
எலும்பியல்
இரத்தவியல்
தடுப்பாற்றலியல், தடுப்புத்திறனியல் – Immunology
நோய் காரணவியல்-Etiology
நோய் விபரவியல்-Epidemiology
நோய்க்குறியியல் Pathology
பெண் நோயியல்
குழந்தை மருத்துவம்
புறத்தோற்ற உடலளவையியல்
உயர்பாலூட்டியியல்
உடற்றொழிலியல்-Physiology
மனநோயியல் – Psychiatry
நரம்பு வழி உளப்பிணி மருத்துவம் – Neuropsychiatry
உடனலவியல்-Hygiene
குழியவியல்-Cytology
பிறப்புரிமையியல்-Genetics
உயிரிரசாயனவியல்/உயிர் வேதியியல் (த.வ)-Biochemistry
கால்நடை மருத்துவம்-Veterinary Science
இனமுறை மருத்துவம்-Homeopathy
மூலிகை மருத்துவம்-Herbal Medicine
சித்த மருத்துவம்
அளவியல் – Measurement Science
[தொகு]புவி அறிவியல் – Earth Sciences
நிலவியல், புவிச்சரிதவியல், புவிப்பொதியியல்-Geology
பனியாற்றியியல்-Glaciology
நில உருவாக்கவியல்-Geomorphology
தொல்லுயிராய்வியல்-Palaeontology
பூதத்துவ இயல்-Geography
புவியமைப்பியல்-Geophysical
சூழலியல், சூழியல் – Enviornmental Studies
வாழ்சூழ்நிலைவியல் – Ecology
தட்டவெட்பவியல் – Climatology
வானிலைவியல் – Meteorology
காட்டியல் – Forestry
மீன்வள அறிவியல் – Fishery
கனிப்பொருளியல் – Minerology
பெருங்கடல் ஆய்வியல் – Ocenography
வாயு மண்டல அறிவியல் – Atomospheric Sciences
நிலவுலக நீர் ஆய்வியல் – Hydrology
வேளாண்மையியல், விவசாயம்-Agriculture
மண்ணியல்-Soil Science
புல்லியல்- Agrostology
உழவியல், பயிராக்கவியல் – Agronomy
வேளாண் பயரியல் – Agricultural Botany
வேளாண் வேதியியல், விவசாயவிரசாயனவியல்-Agricultural Chemistry
வேளாண் உயிர்வதியியல் – Agricultural Biochemistry
வேளாண் விரிவாக்க இயல்-Agricultural Extension
[தொகு]கணிதம்-Mathematics
கணிப்பியல்-Calculas
தொகையிடல்-Integration
வகைக்கெழு காணல்-Differentiation
வகைப்பு இடவியல் – Differential Topology
வகைப்பு வடிவியல் – Differential Geometry
கேத்திர கணிதம்/வடிவியல்-Geometry
பகுப்புக் கேத்திர கணிதம்-Analytical Geometry
எண் கணிதம்-Arithmetic
அட்சர கணிதம்/குறுக்கணக்கியல்-Algebra
புள்ளியியல்-Statistics
நிகழ்தகவுக் கோட்பாடு-Probability Theory
கணவியல் கோட்பாடு-Set Theory
பகுவியல்-Fractals
தருக்கவியல்-Logic
இடத்தியல்-பரப்புரு-Topology
மடக்கை-Logarithms
உருமாற்றம்-Transforms
வலையமைப்பியல்-Network Analysis
எண்சார்ந்த பகுப்பியல்-Numerical Analysis
இயங்கவியல்-Dynamics
கோணவியல்-Trignometry
[தொகு]பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology
நுட்பியல்
கணினியியல்-Computing
மின் எந்திர மனிதவியல் தொழில்நுட்பம்-robotics
இயற்கை மொழி கணிணியியல்-Natural Language Processing
இயந்திரவியல், சுயம் பொறி இயல்-Robotics
இலத்திரணியல், மின்னணுவியல்-Electronics
நுண் – மின்னுணுவியல்-Micro Electronics
இயந்திர மின் நுட்பவியல்-Mechatronics
நுண் ஒளித்துகளியல்-Microphotonics
நுண் நீர்மவியல்-Microfulidics
ஒப்புமையியல்-Analog Technology
இலக்கமுறை தொழிநுட்பம் / எண்முறைத் தொழிநுட்பம்/இலக்கமியல்-Digital Technology
பதிகணனியியல்-Embedded
மின் திறனியல்-
வானலையியல்-Radio Frequency
தகவல் தொழில்நுட்பவியல்-Information Technology
ஒளித்துகளியல், ஒளியணுவியல்-Photonics
உந்துமவியல் தொழில்நுட்பம்-Propulsion Technology
அமைப்புப் பொறியியல்-Systems Engineering
மரபான தளப் பொறியியல்-Surface Engineering
மின் பொறியியல்-Electrical Engineering
எந்திரவியல்-Mechanical Engineering
கட்டடப் பொறியியல்,குடிசார் பொறியியல்-Civil Engineering
வேதிப்பொறியியல்-Chemical Engineering
துகிலியல்-Textile Engineering
கட்டட கட்டுமானயியல்-Building Construction
அமைப்புப் பொறியியல்
உலோகயியல்-Metallurgy
உருபனியல்
நரம்பணு வலையமைப்பியல்-Neural Networks
மங்கல் ஏரணம்-Fuzzy Logic
உயிரித்தொழில்நுட்பங்கள்-Biotechnology
விமானவியல்-Aeronautics
செயற்கை அறிவாண்மை, நகல் ஞானம்-Artitificial Intelligence
பயண மின்நுட்பவியல்-Avionics
கட்டுபாட்டுவியல்-Control Theory
தானியங்கியல் கட்டுப்பாடு – Automatic Control
தொடர்பியல்- Communications
கப்பல் மற்றும் கடல் பொறியியல் – Ship and Ocean Engineering
அளவுப்பொறியமைப்பு – Instrumentation
[தொகு]சமூக விஞ்ஞானம்-Social Sciences
உளவியல்-Psychology
உடல்கூறு உளவியல் – Physiological Psychology
நடத்தையியல் உளவியல் – Behaviour Psychology
புலணுர்வு உளவியல் – Cognitive Psychology
வளர்ச்சி உளவியல் – Developmental Psychology
சமூக உளவியல் – Social Psychology
பரிணாம உளவியல் – Evolutionary Psychology
ஒப்பீட்டு உளவியல் – Comparative Psychology
ஆளுமை உளவியல் – Personality Psychology
? உளவியல் – Clinical Psychology
? உளவியல் – Cross-Cultural Psychology
எதிர்காலவியல் – Futurology
பொருளியல்-Economics
மூலதனவாதம்-முதலாளித்துவம்/திறந்த சந்தை-Capitalism
பொதுவுடமை-Communism
சம உடமை-சமூகவுடமை-Socialism
நிலபிரபுத்துவம்-Feudalism
பாசிசம்-Fascism
தாராண்மைவாதம்-இடைநிலை/எழுவரல்-Liberalism
சொற்பொருளியல்
சூழ்பொருளியல்
தொல்பொருளியல்-Archaeology
கல்வெட்டியல்-Epigraphy
மானுடவியல்-Anthropology
தொன்மவியல் – Mythology
நூலகவியல்-Library Sciences
சட்டவியல்-Law
தண்டனைவியல்-Penology
குற்றவியல்-Criminology
மொழியியல்-Linguistics
ஒலிப்பியல்-phonetics
ஒலியியல்-phonology
சொல்லியல்-lexicology
சொற்பிறப்பியல்-etymology
சொற்பொருளியல்-semantics
சூழ்பொருளியல்-pragmatics
தொடரமைப்பு-syntax
மொழியியற் குறியீட்டியல்-linguistic typology
குறியியல் (semiotics).
பன் மொழியியல்
இரட்டை மொழியியல்
கிளை மொழியியல்
சொற்றொடரியல்
தொடர்பியல்-Communication Sciences
இனக்குழு அறிவியல்
இனஒப்பாய்வியல்
இனமொழியியல்
இனவரைவியல்
குடியியல்
நகரத் திட்டமிடல்
நகரியல் – Urban Studies
புவியியல்
புவிச்சரிதவியல்
சமூக அறிவியல்
சமூக உயிரியல்
சமூக மொழியியல்
குறியியல்
அரசறிவியல் – Political Science
அரசியல் – Politics
அமைச்சியல்
அரணியல்
கூழியல்
படையியல்
மனையியல்-Home Science
சமுதாயவியல்-Sociology
கல்வியல்-Education
நாட்டாரியல்-Folk
ஊடகவியல்-Media Studies
பெண்ணியம் – Feminism
பெண்ணியல் – Women Studies குடித்தொகையியல் – Demography
இனவரைவியல் – Ethnography
[தொகு]கலைத்துறை -Humanities
இந்திய-ஐரோப்பியம் – Indo – European Studies
தமிழியம் – Tamilogy
மொழிகள்
தமிழ்
ஆங்கிலம்
தமிழ் இலக்கணம்-Tamil Grammer
எழுத்ததிகாரம்
எழுத்தியல்
பதவியல்
புணரியல்
சொல்லதிகாரம்
பெயரியல்
வினையியல்
இடையியல்
உரியியல்
இலக்கியம்
தமிழியல் – Tamilology
இதழியல்
கவிதையியல்
ஒப்பியல்- Comparative Literature
தத்துவம் – Philosophy
மெய்யியல் – Ontology
அறிவாராய்ச்சியியல் – Epistemology
அழகியல் – Asthetics
ஒழுக்கவியல் – Ethics
இருத்தலியல் – Existentialism
இயற்கையியல் – Naturalism
உண்மையியல் – Realism
அனுபவ உண்மையியல் – Empiricism
இன்ப நலக் கோட்பாட்டியல் – Hedonism
இறைமறுப்பியல்-நாத்திகம் – Atheism
கருத்துமுதலியல் – Idealism
உள்ளுணர்வியல் – Intrition
ஐயுறவியல் – Skepticism
நேர்க்காட்சி வாதம் (Positivism)
சமயம்-Religion
Taoism
இறையியல்-Theology
கிறீஸ்தவம்-Christianity
இஸ்லாம்-Islam
இந்து சமயம்-Hinduism
சைவம்-Shaivism
வைணவம்-Vaisnavam
சாக்தம்-Shaktham
ஆசிவகம்
புத்தம்-Buddhism
சமணம்-Jainism
யுடேஸ்சம்-Judaism
சான்ரு-Shinto
ரொவ்-Taoism
கொங்fயூசியஸ்-Confuciaism
சீக்கிசம்-Sikhism
சுரோஅஸ்றியனிசம்-Zoroastrianism
அனிமிசம்-Animism-மிருக வழிபாடு
வரலாறு-History
வரலாறெழுதியல்-Historiography
உடல்சார் மானிடவியல்
பண்பாட்டு மானிடவியல்
தொல்லுயிரியல்சார் மானிடவியல்
[தொகு]வணிகவியல்-Business
நிர்வாகவியல்-Management
மானகை இயல்-Management Science
கணக்கு பதிவியல்-Accountancy
சந்தைப்படுத்தல்-Marketing
வங்கியல்-Banking
நிதியியல்-Finance
[தொகு]கலைகள்-Arts and Crafts
கைப்பணிக்கலை: பெட்டி, பாய், மாலை, தும்பு தடி
தச்சுக்கலை, மரவேலை
மண்பாண்ட கலை
கொல்லர்கலை
தையற்கலை
நெசவுக்கலை, கைத்தறி
சிற்பக்கலை
பின்னல்கலை
கட்டக்கலை
ஓவியக்கலை
இசைக்கலை
நடனக்கலை
தோட்டக்கலை,
விவசாயம்
நாடகக்கலை
மருத்துவக்கலை
போர்கலை
எழுத்துக்களையே
சமயற்கலை
திரைப்படக்கலை
புகைப்படக்கலை
அலங்காரக்கலை
பத்திரிகைக்கலை
மனவளக்கலை.
நன்றி். துரைராஜ்.

மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ?

இந்த ஆண்டிலே ஆசிரியர்களுக்கு மே மாதம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. . அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் நடப்பாண்டில் காலியாக இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம்

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

ரசிகர்களை வியக்க வைத்த ஹன்சிகா – ஸ்ருதி ஹாசன்

hansika shruti haasanஇரண்டு நாயகிகள் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அதன் படப்பிடிப்பு முடிவதற்குள் எப்படியாவது இருவருக்கும் சண்டை வந்துவிடும்.

விஜய்யின் புலி படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரு முன்னணி நாயகிகள் இருக்கின்றனர். அதனால் இருவருக்கும் கண்டிப்பாக பஞ்சாயத்து நடக்கும் என்று ரசிகர்கள் முணுமுணுத்து வந்தனர். ஆனால் இருவரும் கோலிவுட் ரசிகர்களே வியக்கும் அளவுக்கு நட்பு பாராட்டி வருகிறார்களாம்.

ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா சம்பந்தப்பட்ட காம்பினேசன் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவர்கள் இருவரும் ஸ்பாட்டுக்கு வந்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். அதோடு தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் கடலைபோடுகிறார்களாம்.

அதோடு ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவியின் ரசிகை என்பதால் அவர் நடிப்பதை பார்ப்பதற்காக தனக்கு காட்சிகள் இல்லாத நாட்களிலும் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். அப்படி வரும் போதெல்லாம் ஹன்சிகாவுடன் ஜாலியாக ரகளையில் ஈடுபட்டுள்ளாராம் ஸ்ருதி.