Home Blog Page 6083

ரசிகர்களை வியக்க வைத்த ஹன்சிகா – ஸ்ருதி ஹாசன்

hansika shruti haasanஇரண்டு நாயகிகள் ஒரே படத்தில் நடிக்க வைத்தால் அதன் படப்பிடிப்பு முடிவதற்குள் எப்படியாவது இருவருக்கும் சண்டை வந்துவிடும்.

விஜய்யின் புலி படத்தில் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் என இரு முன்னணி நாயகிகள் இருக்கின்றனர். அதனால் இருவருக்கும் கண்டிப்பாக பஞ்சாயத்து நடக்கும் என்று ரசிகர்கள் முணுமுணுத்து வந்தனர். ஆனால் இருவரும் கோலிவுட் ரசிகர்களே வியக்கும் அளவுக்கு நட்பு பாராட்டி வருகிறார்களாம்.

ஸ்ருதிஹாசன்-ஹன்சிகா சம்பந்தப்பட்ட காம்பினேசன் காட்சிகள் குறைவுதான் என்றாலும், அவர்கள் இருவரும் ஸ்பாட்டுக்கு வந்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டார்களாம். அதோடு தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் கடலைபோடுகிறார்களாம்.

அதோடு ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவியின் ரசிகை என்பதால் அவர் நடிப்பதை பார்ப்பதற்காக தனக்கு காட்சிகள் இல்லாத நாட்களிலும் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். அப்படி வரும் போதெல்லாம் ஹன்சிகாவுடன் ஜாலியாக ரகளையில் ஈடுபட்டுள்ளாராம் ஸ்ருதி.

கிருஷ்ணகிரி அருகே சாலைவிபத்தில் 7 பேர் பலி

  19.04 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குரங்குக்கல் மேடு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆலமரம் மீது திடீரென மோதி விபத்துக்குள்ளானது. காரில் திருப்பத்தூர் அடுத்துள்ள ஓமகுப்பம் பகுதியை சேர்ந்த திலீப் பலத்த காயமடைந்தார்,வில்லியம்ஸ், ஜெரினிமேரி, ஜொயல், ஜெயந்த், சுசிலா, செல்வி, ஜொன்ஸ்,திலீப் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இவரது தாய் உள்பட ஏழு பேர் பலியாகினர். இவர்கள் அனைவரும் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். இன்று சர்ச்சில் ஞானஸ்நானம் பெறுவதற்காக கீழ்பென்னாத்தூர் சென்ற பொழுது இவர்களது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இளம்பெண் மாயமானார் போலீசார் தீவீர விசாரணை.

  18.04.2015.tenkasi missing womenசெங்கோட்டை அருகே இளம்பெண் மாயமானார் போலீசார் தீவீர விசாரணை. செங்கோட்டை அருகேயுள்ள புளியரை வனத்துறை ஓய்வு இல்லம் பகுதியை சார்ந்தவர் வள்ளிநாயகம் இவரது மகள் லீலாவதி என்ற அனுஷ்கா (19)இவர் 12ஆம் வகுப்புவரை படித்துள்ளார்.நேற்றுமுன் தினம்காலை 7மணிக்கு அருகிலுள்ள தனது சகூதறி வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.மதியம் வரை வீடு திரும்பாததால் அவரது தாய்,தந்தைபல்வேறு பகுதிகளில் தேடியுள்ளனர்.எங்கேயும் அவரைக் காணவில்லை உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை இதனைத்தொடர்ந்து அவரது தந்தை வள்ளிநாயகம் தனது மகளை காணவில்லை என புளியரை போலீசில் நேற்று புகார் செய்தார் புகாரைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடிவருகின்றனர்.

தினசரி தளத்துக்கு வரவேற்கிறோம்!

Dhinasari Home page

அக்கினிப் பிரவேசம் – இதழியல் பிரவேசம்


இது எமது இதழியல் பிரவேசம். தினசரி செய்திகள் இணைய தளத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இதில் பல்வேறு தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், ஆங்கிலக் கட்டுரைகள் என தினசரி அப்டேட் செய்யப்படும்.

நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யமான செய்திக் கட்டுரையாக்கித் தருகிறோம். வாசகர்கள் படித்து பகிர்ந்து ஆதரவளிக்கக் கோருகிறோம்.

செய்தியாளர்கள் தங்கள் பகுதி செய்திகளை இந்த இணையதளத்துக்கு அளிக்க விரும்பினால், dhinasarinews@gmail.com என்ற இமெயில் முகவரிக்கோ, 8838853843 என்ற வாட்ஸப் எண்ணுக்கோ அனுப்பலாம்.

“ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் அருள் லீலை வைத்தியம்.”

20683_671948076266709_3512172854606087227_n“ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் அருள் லீலை வைத்தியம்.” கட்டுரை-ரா கணபதி.. தட்டச்சு-வரகூரான் நாராயணன். வைத்யநாதனாக அவர் செய்துள்ள அருள் லீலைகள் அனந்தம். அதுவும் ஒரே அச்சாக இல்லாமல் பல தினுசுகளில் செய்திருக்கிறார்.கவியுள்ள அருளாளர். ஆயுர்வேத ரீதியிலேயே மருந்து சொலவது; அதிலும் மாறுபட்ட அழகோடு. கபத்தொல்லை என்று முறையிடும் இரு பக்தர்களில் ஒருவருக்குத் தேன் போட்டுத் துளசி கஷாயம். மற்றவர்க்கு அரிசித் திப்பிலியுடன் ஆடா தொடைக் கஷாயம் என்று சொல்வது; ஆபரேஷன் செய்தேயாக வேண்டும் என்னும் ஆபத்துக் கட்டத்திலிருப்பவருக்கு லேசாக ஒரு ‘வேண்டாம்’ சொல்லியே மாயமாய்குணப்படுத்துவது இன்னொருவருக்கு ஏதோ வழிபாடு,ஹோமம் என்று விதிப்பது; மருத்துவ சிகித்சையையே தொடரச் செய்து, அதுநாள் வரை பலிக்காத மருந்துகளே அதற்குப்பின் அதிவிரைவுடன் சொஸ்தப் படுத்துமாறு செய்வது-என்றிப்படிப் பல தினுசு. சில நோயாளிகளிடமோ, “எனக்கும் ஒடம்பு ஸரியாயில்லை”என்று கூறிநிறுத்திக்கொள்வார்.அநேகமாக அவர்கள் அந்தநோயுடனேயே, ஆனாலும் அது முற்றி ஆயுளுக்குக் குந்தகம் விளைவிக்காமல் காலம் தள்ளுமாறு இருக்கும். அகக் கண்னை திறந்து வைப்பவரே குருநாதர். நம் குருநாதன் புறக் கண்ணை குணப்படுத்திய ஒரு நிகழ்ச்சி பார்ப்போம். பாணியம் ஸிமென்ட்ஸைச் சேர்ந்த ப்ரஸாத ராவ் ஒரு நல்ல பக்தர். அவருடைய குழந்தைக்குப் பிறந்த நாள். தொட்டுக் கண்ணிலிருந்து நீர் வந்து கொண்டேயிருந்தது. எத்தனை வைத்தியம் செய்தும் பயனில்லை.குழந்தையை அழைத்து வந்து பெரியவாளிடம் காட்டினார். அருள் நயனம் குழந்தையைப் பார்த்தது. குழந்தையின் கண்களும் பெரியவாளைப் பார்த்தன. ஆம், பார்க்கவே செய்தன, நீர்த்திரையின் இடையீடில்லாமல்.!. வற்றாத ஊற்றாக அன்றுவரை பெருகிக் கொண்டிருந்த தாரைஅநுக்ரஹ தாரையின் அநாயாஸ ஆற்றலில் கையால் பிடித்து நிறுத்தினாற்போல் நின்று விட்டது!. குழந்தையின் ஓயாக் கண்ணீரைக் கண்டு தாங்களும் கண்ணீர்சிந்திக் கொண்டிருந்த பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்

தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம்

TENKASI தென்காசி Sa.ma.ka arppattam  தென்காசியில் ச.ம.க.ஆர்ப்பாட்டம் ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்துவதாக கூறி 20 தமிழர்களை ஆந்திரா போலீசார்சுட்டுக் கொன்றதை கண்டித்து தென்காசியில் ச.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தென்காசி தாலுகா அலுவலகம் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர்அதியமான் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை முன்னிலை வகித்தார் தென்காசி நகர செயலாளர் அருணா வரவேற்றார் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர்கள் கண்ணன், ஜான்ரவி, எட்வின், விசுவாசம் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் . இலஞ்சி அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் ராபார்ட், பெரியசாமி, மாணவரணி கணேசன், பாலகிருஷ்ணன், மேலகரம் தேவி, நயினார், செல்வராஜ், இசக்கிராஜன், நந்து, மாரியப்பன், சிவா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர் ஒன்றிய செயலாளர்வில்சன் நன்றி கூறினார்

ஈரோட்டில் மே 17ல் கோட்சேவுக்கு சிலை: அகில பாரத இந்து மகா சபா

00088001 அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் கரூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது., இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டு இந்துக்களிடமே கொடுக்க வேண்டும், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வருடத்திற்கு ரூ 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. இருப்பினும் அறநிலையாத்துறை அதன் பணியை சரியாக செய்வதில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டு கொடுக்க போராட்டம் நடத்தினோம். மீண்டும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்த உள்ளோம். ஆதலால் தமிழக அரசு எங்களது கோரிக்கையை செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கையில் எடுத்து அக்காரியங்களை செய்வோம் என தெரிவித்தார். மேலும் திராவிட கழகம் இந்து விரோத போக்கினை தொடர்ந்து செய்து வருகிறது. தாலி அறுப்பு போராட்டம், மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் என்னும் மாவட்டம் தோறும் செயல்படுத்தி வருகிறது. திராவிடர் கழகத்தினை தமிழக அரசு கண்டிப்பதோடு, தண்டிக்க வேண்டும். குண்டர் சட்டத்தில் வீரமணியை கைது செய்ய வேண்டும் எனவும், வருகின்ற மே மாதம் 17 ம் தேதி கோட்சே சிலை ஈரோட்டில் வைக்க உள்ளோம். இது எங்களது உரிமை. உயர் நீதிமன்றமே 1966 ல் கூறி இருக்கிறது. கோட்சேவின் சிந்தனைகளையும், சித்தாங்களையும் வெளிக்கொணர்வதில் எந்த தடையும் இல்லை என்று கூறி உள்ளது. ஆதலால் கண்டிப்பாக அவரது சிலையை நிலைநிறுத்துவோம் என அகில பாரத இந்து மகா சபா கட்சியின் தமிழ் மாநில தலைவர் கே.ராஜசேகர் தெரிவித்தார்.

ராகுல் நாடு திரும்பியதற்கான எழுச்சிப் பேரணி; காங்கிரஸ் ‘மெகா’ ஏற்பாடு

rahul-gandhi புது தில்லி: இதோ வருகிறார், இப்போது வருகிறார், இதோ வந்துவிட்டார் என்றெல்லாம் போக்குக் காட்டி, ஒருவழியாக வந்தே விட்டார் ராகுல் காந்தி. எங்கே? தில்லிக்குத்தான்! அவரை வரவேற்க காங்கிரஸின் சார்பில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எல்லோரும் காத்திருக்க, வருவது தெரியாமல் அமைதியாக தன் வீட்டுக்குள் நுழைந்த ராகுலை அவரது தாயார் சோனியாவும், சகோதரி பிரியங்கா காந்தியும்தான் வரவேற்றனர். அவர்கள் இருவரைத் தவிர அவர் வேறு யாரையும் சந்திக்கவுமில்லை. ராகுல் வருவதற்கு சில மணித்துளிகள் முன்னர் ராகுல் வீட்டுக்கு வந்த சோனியாவும், பிரியங்காவும், வெகுநேரம் தனியறையில் ரகசியமாகப் பல விஷயங்களைப் பேசிக் கொண்டனர். இந்நிலையில், சனிக்கிழமை இன்று அவர் விவசாயிகளைச் சந்திப்பதற்கும், நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிராக ஞாயிறு நாளை நடைபெற இருக்கும் பேரணியில் கலந்து கொண்டு பேசவும் ஏற்பாடுகளை காங்கிரஸார் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையேசெய்து வந்தனர். அவர்களுக்கு நாளை இந்தப் பேரணி மற்றும் பொதுக்கூட்டமானது, நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிரானதாக இருப்பதைவிட, ராகுல் காந்தி நீண்ட இடைவெளியில் மீண்டும் அரசியலுக்குள் திரும்பி வந்து கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டமாகவும், அதைப்பறைசாற்றும் பேரணியாகவும் காட்டிக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம். இதர்காகவே லட்சக்கணக்கில் விவசாயிகளைத் திரட்டி, ராம் லீலா மைதானத்தை ஆட்டம்காணச் செய்ய வேண்டும் என்று பல்வேறு ஏற்பாடுகளை காங்கிரஸார் செய்துவருகின்றனர். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், இதற்காக, கிஸான் எக்ஸ்பிரஸ் என 17 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலையே புக் செய்துள்ளார். அது ஜெய்ப்பூரில் இருந்து தில்லி வரும் விவசாயிகள் எக்ஸ்பிரஸாக இருக்குமாம். ஹரியானாவில் இரு வேறு போட்டிப் பிரிவுகளாகப் பிரிந்து போயுள்ள காங்கிரஸார், தங்கள் தங்கள் கோஷ்டிகளின் வலிமையைக்காட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள். முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா ஒரு புறம், தனது ஆதரவாளர்களை பிங்க் வண்ணத்தில் டர்பன் கட்டிக் கொண்டு வர ஆணையிட்டிருக்கிறார் என்றால், மாநில கட்சித் தலைவர் அசோக் தன்வார் தனது ஆதரவாளர்களை காந்தி குல்லாய் அணிந்து வருமாறு கட்டளையிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வரும் ஆதர்வாளர்கள் தங்கள் அடையாளத்தைக் காட்ட ஒரு வண்ணத்தைக் கையாண்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் காவி வண்ண தலைப்பாகை அணிந்து வரவுள்ளனர். அவருடைய எதிர் கோஷ்டியான மாநில காங்கிரஸ் தலைவர் ப்ரதாப் சிங் பாஜ்வா, அதைத் தவிர மற்ற வண்ணங்களை பயன்படுத்தி வருபவர்கள் எல்லாம் என் ஆதரவாளர்கள் என்று கூறியிருக்கிறார். இந்தப் பேரணிக்காக சுமார் 500 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தில்லியில் இருந்து சுமார் 25 ஆயிரம் விவசாயிகளும் ஆதரவாளர்களும் திரண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், எல்லோருமே போன வருடம் நிகழ்ந்த தவறை மீண்டும் செய்துவிடாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றனர். ராகுல் காந்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த வேளையில், பாதியிலேயே பெரும்பாலானவர்கள் எழுந்து சென்று, ராகுல் பேச்சைப் புறக்கணித்த அதே செயல் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்று உன்னிப்பாக உள்ளனர். அதற்காகவே காங்கிரஸில் கில்லாடியான பிரம்ம யாதவ், இந்த முறை 14 எல்.ஈ.டி. திரைகள் கொண்ட பிரம்மாண்ட ஒளிபரப்பு ஏற்பாடும், கலாசார நிகழ்ச்சிகள் நடத்த மேடைகளும் அமைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆனால், நேற்று இந்த ஏற்பாடுகள் குறித்து கட்சித் தலைவர்கள் எல்லாரும் கூடி விவாதித்த போது, அந்த விவாதக் கூட்டத்தை புறக்கணித்து ராகுல் காந்தி அங்கே வரவேயில்லை. இது அவர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாகத் தான் இருந்தது. இருப்பினும் வழக்கம்போல் சப்பை கட்டு கட்டும் திக்விஜய் சிங், நாங்கள் அனைவரும் காலாட்படை வீரர்களைப் போன்றவர்கள். ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், தலைமைக்கு கட்டுப்பட்டு, அவர்கள் இடும் கட்டளைப்படி பணியாற்றுவோம் என்று கூறினார். அவரிடம் செய்தியாளர்கள் சிலர், மிகவும் முக்கியமான ஒரு பேரணி குறித்த திட்டமிடல் கூட்டத்துக்கு ராகுல் காந்தி வராமல் புறக்கணித்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள், அவர் உண்மையிலேயே இந்த மிகப் பெரும் அரசியல் பிரபலத் தன்மையை தொலைத்து விட்டார் என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது இவ்வாறு பதிலளித்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தி தில்லியில் சனிக்கிழமை இன்று 4 மாநில விவசாயிகளுடன் திடீரென ஆலோசனை நடத்தினார். மேலும் நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிராக தில்லியில் நாளை நடைபெற உள்ள விவசாயிகள் பேரணி குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டம் குறித்து விவசாயிகளின் கருத்துகளை அவர் கேட்டறிந்தார். தில்லி பேரணியில் நாளை பங்கேற்ற பின்னர் அடுத்த சில நாட்களுக்குள் தனது தொகுதியான அமேதிக்குச் சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறியவும் ராகுல் திட்டமிட்டுள்ளார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் நாடு திரும்பியதற்கான எழுச்சிப் பேரணியாக நாளைய பேரணியை காங்கிரஸ் கையில் எடுக்கும் பட்சத்தில், கிர்க்கெட்டில் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு மூலையில் இருந்து கொண்டு, ஆல் அவுட் ஆகும் போக்கையே காங்கிரஸ் வெளிப்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே.15க்கு ஒத்திவைப்பு

புதுதில்லி : மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பாக பாமக.,வின் அன்புமணி மீதான வழக்கு விசாரணை மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்து கோயிலை மீட்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் அண்மையில் கட்டப்பட்ட இந்துக் கோவிலை மீட்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் குமார் வங்க்வானி, அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அதில், கைபர் மாகாணத்தில் காரக் மாவட்டத்தில் உள்ள டெரி கிராமத்தில் பரம்ஹன்ஸ்ஜி மகராஜ் சமாதி கோவில் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டபோது, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ், இந்துவாக இருந்து இஸ்லாத்துக்கு மாறி விட்டதாக மாகாண தலைமைச் செயலர், ஐஜி, கமிஷனர் ஆகியோர் பதிலளித்தனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தக் கோவிலை மீட்பதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நசிர் உல் முல்க் தலைமையிலான 2 பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர் வகார் அகமது, இந்த விவகாரத்தை சுமுகமாக முடித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். அவரது வாதங்களைக் கேட்ட அமர்வு, பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் கோவிலை மீட்குமாறு, கைபர் மாகாண அரசுக்கு உத்தரவிட்டது. பரம்ஹன்ஸ் ஜி மகராஜ் என்ற இந்து மதத் துறவி, 1919ல் பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். அவரது உடல் டெரி கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருடைய நினைவாக, அவரது பக்தர்கள் கோவில் ஒன்றை டெரி கிராமத்தில் எழுப்பி, வழிபட்டு வந்தனர். 199ஆ7ம் ஆண்டுக்கு பின்னர், அப்பகுதியை சேர்ந்த சிலரால், அந்த கோவில் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனை மீட்கும்படிதான், பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது