Home Blog Page 6103

தேர்தல் நிதி ரூ.2 கோடி குவிந்தது: கருணாநிதி மகிழ்ச்சி

சென்னை: நிதி தாரீர் என்று தேர்தல் நிதி சேர்க்க அறிவிப்பு வெளியிட்ட ஒரே மாதத்தில் ரூ. 2 கோடிக்கும் மேல் தேர்தல் நிதி குவிந்ததற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘கொள்கை காத்திட குவியட்டும் தேர்தல் நிதி என்று நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இன்றோடு ஒரு மாதமே முடியும் நிலையில், 2 கோடியே 24 லட்சத்து 80 ஆயிரத்து 275 ரூபாய் சேர்ந்திருக்கிறது. 2 கோடி ரூபாய்க்கும் மேல் தேர்தல் நிதி சேர்ந்திருக்கிறது என்கிற போது, நமது மகிழ்ச்சி எல்லை கடந்துள்ளது,’ என்று கூறியுள்ளார்.

அப்பாடா ? ஒரே ஒரு மாதத்தில் திமுக தேர்தல் நிதி ரூ.2 கோடி : கருணாநிதி மட்டற்ற மகிழ்ச்சி

04-04-15 Dmk Karunathi Leter photo 01நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையடுத்து தி.மு.க கட்சி நிதி சேகரித்து வருகிறது. இதை தொடர்ந்து திமுக சார்பில் ஒரே மாதத்தில் ரூ.2 கோடிக்கு மேலாக தேர்தல் நிதி திரட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், திமுக சார்பில் ஒரே மாதத்தில் ரூ.2 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 12 ஆம் தேதி, கொள்கை காத்திடக் குவியட்டும் தேர்தல் நிதி என்று தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, சேர்ந்திருக்கின்ற தேர்தல் நிதி ரூ.2 கோடியே 24 இலட்சத்து 80 ஆயிரத்து 275 என அறிவித்தார். தி.மு.க. பெறவிருக்கின்ற மகத்தான வெற்றிக்கு, நிதி வழித் துணையாய் அமையும் என்று துள்ளிக் குதிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள் என்றும் அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.  

எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு: இன்று முதல் அமல்

சென்னை : நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வீட்டுக் கடன் வட்டியை 0.25 % குறைத்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருவதாக வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடனுக்கான அடிப்படை வட்டியை கடந்த 10ம் தேதி பாரத ஸ்டேட் வங்கி 0.15 சதவீதம் குறைத்தது. இப்போதைய வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு மூலம் பெண்கள் பெறும் வீட்டுக் கடனின் வட்டி 10.1% லிருந்து 9.85% ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வட்டி விகிதம் 9.9 % ஆக இருக்கும் என்றும் எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. இதற்கு முன் HDFC வங்கி வீட்டுக் கடன் வட்டியை கால் சதவிகிதம் குறைத்தது.

பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபர் மர்ம சாவு: உடலை மீட்க ஆட்சியரிடம் குடும்பத்தார் மனு

00172001பிழைப்பிற்காக துபாய் சென்ற வாலிபன் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தி சடலத்தை கொண்டு வர வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த இளைஞரின் குடும்பத்தார் கண்ணீர் மல்க மனு அளித்தனர். கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த தோகைமலை ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது வேங்கடத்தான் பட்டி கிராமம். இங்கு வசிக்கும் அம்மாக்கண்ணு இந்த பெண்மணியின் 5 வது மகன் பி.வெங்கடாசலம் , கடந்த பிப்ரவரி மாதம் 3 ம் தேதி பிழைப்பிற்காக துபாய் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 11 ம் தேதி சாமி என்பவரிடம் இருந்து வேங்கடத்தான் பட்டியில் வசிக்கும் வெங்கடாசலத்தின் அக்கா கணவர் வரதராஜனிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். சாலை விபத்தில் தங்களுடைய மைத்துனர் கவலைக்கிடமாக உள்ளார் எனவும், பின்பு அன்றே மாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாக கூறி உள்ளார். 00177001இதை அடுத்து கரூர் மாவட்ட ஆட்சியரிடம் வெங்கடாசலத்தின் தாயார் அம்மாக்கண்ணு கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார். அந்த மனுவில் துபாய்க்கு வேலைக்கு சென்ற எனது மகன் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவனது உடலை மீட்டு என்னிடம் ஒப்படைக்குமாறு மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது00168001..

இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல்: ஜெர்மனியில் மோடி

gandhi-statue-modi இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ‘சிட்டி ஹால்’லில் மோடி தேசப்பிதா மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை திறந்து வைத்து பேசினார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரதமர் மோடியை கவுரவித்து, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரவு விருந்து அளித்தார். இதில் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனும், இந்திய உயர் மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டினரின் முதலீடுகளை கவரவும், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் பங்கேற்கச்செய்யவும் 3 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக கடந்த 9-ந் தேதி பிரான்ஸ் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நாட்டுடன் ராணுவம், சிவில் அணுசக்தி, விண்வெளி, ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் 20 உடன்பாடுகள் ஏற்பட்டன. பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு, இரண்டாவது கட்ட பயணமாக பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி சென்றார். அங்குள்ள ஹனோவர் லாங்கன்ஹேகன் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 11.25 மணிக்கு (இந்திய நேரப்படி பகல் 3.30 மணி) ஏர் இந்தியா விமானத்தில் போய் இறங்கினார். அங்கு அவருக்கு இந்தியாவுக்கான ஜெர்மனியின் தூதர் மைக்கேல் ஸ்டெயின், ஜெர்மனிக்கான இந்தியாவின் தூதர் விஜய் கோகலே, துணைத் தூதர் விது நாயர் மற்றும் உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் மோடி நேராக காரில் மரிடிம் கிராண்ட் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் செல்லும் வழியெங்கும் ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) என்று எழுதப்பட்ட போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடியை வரவேற்க ஓட்டலுக்கு வெளியே ஏராளமான ஜெர்மனி வாழ் இந்தியர்கள், மூவர்ணக்கொடியுடனும், வரவேற்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளுடனும் குவிந்திருந்தனர். அவர்கள் மோடியைப் பார்த்ததும் ‘மோடி… மோடி… என்றும், பாரத் மாதா கி ஜே’ (பாரத மாதா நீடூழி வாழ்க) என்றும் முழக்கமிட்டனர். மோடி அங்கு சில விநாடிகள் நின்று, இந்தியர்களின் உற்சாக வரவேற்பை புன்னகை தவழ ஏற்றுக்கொண்டார். ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல்லுடன் இணைந்து, ஹனோவரில் ஞாயிற்றுக்கிழமை வர்த்தகக் கண்காட்சியை மோடி தொடக்கி வைத்தார். அதில், மோடி பேசியபோது… அடிக்கடி விதிகள் மாற்றமடையாத, நிலையான சூழலை இந்தியாவில் ஏற்படுத்தி வருகிறோம். முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் வெளிப்படையான சூழலை உருவாக்கியுள்ளோம். “இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது கோஷமோ அல்லது குறியீடோ அல்ல. அது புதிய தேசிய இயக்கமாகும். ஜெர்மனி எங்களின் மதிக்கத்தக்க கூட்டாளியாகும். ஆழமாகவும், விரிவாகவும் வளரக்கூடிய நெருக்கமான உறவை இரு நாடுகளும் கொண்டுள்ளன. இந்தியாவுடனான வர்த்தகம், முதலீட்டு ரீதியான உறவுகளை மேம்படுத்த உலக நாடுகளிடையே புது உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உலகத்தையும் வரவேற்க இந்தியா தயாராக உள்ளது. நட்புறவுச் செய்தியும், ஒத்துழைப்பு உறுதியும் கொண்ட புதிய இந்தியாவின் சின்னமாக “இந்தியாவில் தயாரிப்போம்’ குறியீட்டில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் திகழ்கின்றன என்றார் மோடி. மோடியை வரவேற்று மெர்கெல் பேசுகையில், “இந்தியாவுடனான உறவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்த ஜெர்மனி தயாராக உள்ளது’ என்றார். முன்னதாக, ஜெர்மனியின் ஹனோவர் விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு முக்கியப் பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர், ஹனோவர் நகரில், ஜெர்மனியின் 20 முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை மோடி சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் எளிமையான முறையில் தொழில் செய்வதற்காக, மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார். பின்னர், அவர்களை தனித்தனியாகவும் மோடி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார். முன்னதாக, பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி முடித்துக் கொள்வதற்கு முன்பாக, மாணவர்களுக்கு சலுகை அளிப்பது தொடர்பான முக்கிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. இதன்படி, பிரான்ஸில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்களது படிப்பு முடிந்த பிறகும் 24 மாதங்களுக்கு அந்நாட்டில் தங்கியிருக்கலாம். இந்தியாவில் தங்கிப் படிக்கும் பிரான்ஸ் மாணவர்களும் இதேபோன்ற சலுகையை நம் நாட்டில் பெறலாம். ஜெர்மனியில் முதல் நிகழ்ச்சியாக அவர் அந்த நாட்டைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களின் அதிபர்களை சந்தித்து பேசினார். இதில் மத்திய தொழில், வர்த்தகத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் மற்றும் இந்திய உயர் மட்டக்குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை பற்றி எடுத்துக்கூறினார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதை விளக்கினார். இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்: ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

புது தில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களின் தாக்குதலில் 7 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவம், டிரக்குகள் எரிக்கப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். தில்லியில் உள்ள ராஜ்நாத் சிங்கின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்கு ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் சத்தீஸ்கர் தாக்குதல், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு, நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதல் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அந்தச் சூழ்நிலையை கையாளுவதற்கு சத்தீஸ்கர் மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு சார்பில் செய்து கொடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பாதுகாப்புப் படையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள மாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ஆவது அமர்வு, வரும் 20-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மத்திய அரசு பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசித்தனர். மேலும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் முன்னெடுப்பது குறித்தும் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: மாநிலங்களை விட்டு வெளியே செல்ல!

புது தில்லி: மாநில ஆளுநர்களுக்கு திடீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. குடியரசுத் தலைவரிடம் தகவல் தெரிவிக்காமல், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று ஆளுநர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில ஆளுநர்கள் குறிப்பிட்ட காலத்தை விட அதிக காலத்துக்கு, தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளிமாநிலங்களில் தங்கியிருப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்தே, ஆளுநர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 18 அம்சங்கள் கொண்ட புதிய விதிகளில்… ஆளுநர்கள், தாங்கள் பதவி வகிக்கும் மாநிலங்களில் ஓர் ஆண்டில் குறைந்தது 292 நாள்களாவது தங்கியிருக்க வேண்டும். குடியரசுத் தலைவரின் முன் அனுமதியில்லாமல் தாங்கள் ஆளுநர்களாகப் பதவி வகிக்கும் மாநிலங்களை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவசரக் காலம் அல்லது அசாதாரண சூழ்நிலையில், மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கருதினால், அதுகுறித்து குடியரசுத் தலைவரின் செயலாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். அவரிடம் தகவல் தெரிவிக்காமல் மாநிலத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. அலுவல் ரீதியிலான பயணம் அல்லது தனிப்பட்ட பயணம், இந்தியாவிற்குள்ளேயே பயணம் அல்லது வெளிநாட்டுப் பயணம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஒரு வாரம் முதல் 6 வாரங்களுக்கு முன்பாகவே குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆளுநர்களின் ஒவ்வொரு கோரிக்கையும், பிரதமரின் தனிச் செயலாளர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்படும். தனிப்பட்ட பயணத்தை அலுவல் ரீதியிலானது என்று ஆளுநர்கள் தெரிவிக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஆளுநரின் ஒவ்வொரு அலுவல் ரீதியிலான பயணம் குறித்தும் ஆளுநர் மாளிகை விரிவாக அறிக்கை அனுப்ப வேண்டும். ஆளுநரின் பயண அளவானது, ஒராண்டில் 20 சதவீத நாள்களுக்கும் கூடுதலாக இருக்கக் கூடாது. வெளிநாடுகளுக்கு ஒருவேளை ஆளுநர் பயணம் செய்ய வேண்டிய நிலை வந்தால், குடியரசுத் தலைவரின் செயலாளருக்கு 6 வாரங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக ஊழியர்க்கு ஊதிய உயர்வு தொடர்பாக இன்று இறுதி அறிவிப்பு

tnstcசென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக திங்கள்கிழமை இன்று நடைபெற உள்ள 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஓய்வூதியம், ஊதிய உயர்வு தொடர்பாக அரசின் இறுதி முடிவை அறிவிக்கப் போவதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முடிவை போக்குவரத்துக் கழகத் தொழிற் சங்கங்கள் ஏற்றுக்கொண்டால், 6-ஆம் கட்டத்தோடு 12-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவடைவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 12-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.10) போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அப்போது அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், 50 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கைகளை தொழிற்சங்க பிரதிநிதிகள் மீண்டும் வலியுறுத்தினர். அதில் ஓய்வூதியத் திட்டம் என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதுதொடர்பாக அரசுடன் மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு தொடர்பாக அடுத்த இரு தினங்களில் அரசுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையில் அரசின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சரும், அரசு அமைத்த 12-ஆவது ஊதிய ஒப்பந்தக் குழுவினரும் அறிவித்தனர். இந்நிலையில், ஊதிய ஒப்பந்தத்துக்கான 6-ஆம் கட்டப் பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. இதில் அறிவிக்கப்படும் அரசின் இறுதி முடிவை தொழிற்சங்க நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்து 12-ஆவது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

“நீங்கள் தான் ஜகத்குரு”

“நீங்கள் தான் ஜகத்குரு” (மூக்கறுபட்ட வடநாட்டுப் பண்டிதர்கள்) சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். 1933ம் வருஷம் காசி யாத்திரையின் போது நடந்த நிகழ்ச்சி. பனாரஸ் ஹிந்து யூனிவர்ஸிடிக்கு, ஒரு மாலைப்போதில் ஸ்ரீ பெரியவாள் ‘விசிட்’. பெரியவாள் போனபோது, மண்டக்குளத்தூர் பிரம்மஸ்ரீ சின்னசாமி சாஸ்திரிகள், பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பைய தீட்சிதர் எழுதிய ‘விதிரஸாயனம்’ என்ற மீமாம்ஸாசாஸ்திரம். ஸ்ரீ தீட்சிதரின் நடையழகில் ஸ்ரீ பெரியவாள்சொக்கிப் போனார்.உடன் வந்திருந்த ‘ஆத்ம வித்யா பூஷணம்’இஞ்சிக்கொல்லை பிரும்மஸ்ரீ ஜகதீஸ்வர சாஸ்திரிகளிடம்சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டார். (பின்னர்தான்,அப்பைய தீட்சிதரின் எல்லாக் கிரந்தங்களையும் ஸ்ரீ பெரியவாள் படித்தார்.) காசி மன்னர் அரண்மனையில், பெரியவாளுக்கு வரவேற்பு. நகரத்தின் முக்கியப்பிரமுகர்கள்வந்திருந்தார்கள்.ஏராளமான பண்டிதர்கள். அவர்கள் மனத்தில் ஓர் இளக்காரம்; இனம் புரியாத அசூயை. ‘இவர் என்ன ஜகத்குரு என்று பட்டம் போட்டுக்கொள்வது?… ரெண்டு கேள்வி கேட்டு, மடக்கி விடலாம் !…’ பெரியவாள் வந்து அமர்ந்ததும், ஒரு பண்டிதர், ஆவேசமாகக் கேட்டார், “அது யார், ஜகத்குரு?” “நான் தான் !…” என்றார், பெரியவாள். “ஓஹோ?..நீங்க ஜகத்துக்கே குருவோ?” “இல்லை. ஜகதாம் குரு: ந (நான் ஜகத்துக்கெல்லாம் குரு- என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை) ஜகதிபத்யமானா: ஸர்வே மம குரவ:” (உலகில் உள்ள எல்லாப் பிராணிகளும், எனக்குக் குருக்கள்- என்ற பொருளில், நான் ஜகத்குரு) வடநாட்டுப் பண்டிதர்கள் திகைத்துப் போனார்கள். இவ்வளவு அருமையான, எளிமையான விளக்கத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பெரியவாள், அந்தப் பெரிய அறையின் சுவர்களின் மேற்பகுதியில், புறாக்களுக்காக அமைக்கப்பட்டிரூந்த சிறு சிறு பொந்துகளில் கட்டப்பட்டிருந்த குருவிக் கூடுகளைப் பார்த்தார். பண்டதர்களிடம் காட்டி, “கிமிதம்”? (இது என்ன?) என்று கேட்டார். “நீட:” (கூடு) “கேன நிர்மிதம்?” (யாரால் கட்டப்பட்டது?) “சடகே..” (குருவிகள்) “கை-கால் இல்லாத குருவிகள் கூடு கட்டுகின்றன. நமக்குக் கை-கால் உண்டு. என்றாலும்,பறவைகள் மாதிரி கூடு கட்ட முடியவில்லை. குருவிகளிடம் ஒரு கிரியா சக்தி இருக்கிறது. அது,என்னிடம் இல்லை. அதனால், குருவி, என்னுடைய குரு…” என்று சொல்லி, கன்னத்தில் போட்டுக் கொண்டு கைகூப்பி வணங்கினார். 11137137_1394313034224849_5348987748870523199_n இதை நேரில் கண்ட வடநாட்டுப் பண்டிதர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள். “நீங்கள் தான் ஜகத்குரு” என்று மனமாரப் போற்றிப் பணிந்தார்கள். பெரியவாள் காசியில் இருந்த கடைசி நாள் வரை, அவர்கள் எல்லாரும் தினமும் முகாமுக்கு வந்து நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார்கள்