மும்பை: ஏமனில் சிக்கியிருந்த மேலும் 452 இந்தியர்கள் நேற்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, அங்கே பணியாற்றி வரும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவ்வாறு அங்கே சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேசன் ரஹத்’ என்ற பெயரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. இதுவரை இந்திய கடற்படை, விமானப் படையினர் சேர்ந்து இருந்து 2,300 இந்தியர்கள் மற்றும் 176 வெளிநாட்டினரை பத்திரமாக மீட்டு வந்துள்ளனர். மேலும் 1,000–க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக இந்தியா வந்து இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏமன் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 225 இந்தியர்கள் ஜிபோட்டியில் இருந்து இரவு 10.40 மணி அளவில் சி–17 குளோப் மாஸ்டர் விமானத்தில் மும்பை வந்தடைந்தனர். மேலும் 227 பேர் நள்ளிரவில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் 452 பேரும் ரயில் மற்றும் விமானம் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றடைந்தனர்.
ஏப்.11 அன்று சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலைவாய்ப்பு முகாம்
சென்னை: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை ஏப்.11 அன்று நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியரின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தலுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11.04.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், சீனிவாசா அவென்யூ சாலையில் அமைந்துள்ள செட்டிநாடு ராஜhமுத்தையா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாம் மூலம் பல தனியார் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், ரிசப்ஷனிஸ்ட், வாய்ஸ் & நான்வாய்ஸ் பிராசசிங் , டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஆப்தமாலிஸ்ட் கண்சல்டன்ட், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 18 முதல் 35 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி ,பி.ஏ. , பி,எஸ்.சி.., பி.காம்., ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் முதுகலை பட்டதாரி கல்வித்தகுதி உடையவர்கள் தகுதியுடையவர் ஆவார். இப்பணிக் காலியிடங்களுக்கு உரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சான்றுகளுடன் உடன் நேரில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்;
ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்த வேண்டுமாம்: ஊடகங்களுக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ஊழல் ஆட்சியை அம்பலப் படுத்த ஊடகங்கள் மவுனம் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்…
கொடுத்த பணத்தைக் கேட்டதால் இளம்பெண் கொலை: உறவினரே கொலை செய்த கொடூரம்
சென்னை: கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால், பெண்ணைக் கொலை செய்து மழை நீர்க்கால்வாயில் தூரத்து உறவினரே போட்டு விட்டுச் சென்றுள்ளார். சென்னை- சேலையூரை அடுத்த தேணுகாம்பாள் நகர் 1 ஆவது பிரதானச் சாலையில் ஞாயிறு அன்று காலை இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் மழைநீர் கால்வாயில் சடலமாகக் கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் சேலையூர் போலீசார் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்தப் பெண் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், அந்தப் பெண் குறித்த விவரங்கள் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண் குறித்து நேற்று அடையாளம் தெரிந்தது. அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரம் என்பவரது மகள் ஜெரினா மரியா (27) என தெரிய வந்தது. சாந்தோம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி செய்து வந்தார் ஜெரினா மரியா. போலீஸார் வெளியிட்ட கொலை செய்யப்பட்ட பெண்ணின் படத்தைப் பார்த்து ஜெரினா மரியாவின் தாயார் அல்போன்சா அடையாளம் காட்டியுள்ளார். பின்னர், ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரது சகோதரர் ஜெரினா மரியாவின் உடலைப் பார்த்து உறுதி செய்தார். கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற ஜெரினா மரியா வீடு திரும்பவில்லை. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசில் அல்போன்சா புகார் செய்தார். இதை அடுத்து, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் சேலையூர் போலீஸ் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் ஜெரினா மரியாவை அவரது நெருங்கிய உறவினர்தான் அழைத்துச் சென்றதாகத் தெரிய வந்தது. இதை அடுத்து, அவரைப் பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தப் பெண் கொலை குறித்து தகவல் தெரியவந்தது. ஜெரினா மரியாவின் உறவினர் ஹென்றி ராபர்ட் (35). திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஜெரினா மரியாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் உறவினர்கள் எனத் தெரிய வந்ததால், இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவந்த ஹென்றி ராபர்ட் அவ்வப்போது செலவுக்கு ஜெரினா மரியாவிடம் பணம் பெற்றுள்ளார். தான் சொந்தமாகத் தொழில் செய்வதாகக் கூறி ஜெரினா மரியாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வாங்கியிருந்தாராம். இந்தப் பணத்தைக் கேட்டு ஜெரினா மரியா அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு ராபர்ட் கென்னடி, ஜெரினாவிடம் கூறியதன் பேரில், ஜெரினா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, வாய்த் தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில், ஜெரினாமரியாவை ஷு லேசால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்புள்ள 1 செயின், நெக்லஸ், கம்மல் மற்றும் மோதிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, பின்னர் பிரேதத்தை நள்ளிரவு தன்னுடைய காரில் எடுத்துக் கொண்டு மாடம்பாக்கத்தில் வீசிச் சென்றுவிட்டதை ஒப்புக் கொண்டார். அதன்பேரில், சந்தேக மரணமாகப் பதிவான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அந்தப் பெண்ணைக் கொலை செய்த ராபர்ட் கென்னடி (35), கைது செய்யப்பட்டு, அவர் ஜெரினாவிடமிருந்து அபகரித்த 10 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.1,80,000/- மற்றும் லான்சர் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கொலை தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தூரத்து உறவினர் ஒருவரே இவ்வாறு பெண்ணைக் கொலை செய்தது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது.
பாலசந்தர் புகழ் என்றும் மெய்
அருள் என்றால், வெறும் தூறல் இல்லை,
அருள் என்றால், வெறும் தூறல் இல்லை, கன (பண) மழைதான்!. சொன்னவர்-வி.கிருஷ்ணமூர்த்தி தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) ஒருவர் பெரியவாளிடம் சுமார் பன்னிரண்டாயிரம் ரூபாய் சமர்ப்பித்தார். மஹாபெரியவாள், “எனக்கு ஏதுக்கடா பணம்?” என்று சொல்லிவிட்டு,அப்பொழுது சந்தர்ப்பணை சமையற்கட்டில் பணிபுரிந்து வந்த ஒருவரைக் கூப்பிட்டனுப்பி, “உன் பெண்ணுக்குக் கல்யாணம் என்றாய். பணம் வேண்டாமா? இதோ இருக்கு எடுத்துக்கோ!” என்றார்கள். பணம் கொடுத்த அடியாரின் கண் எதிரிலேயே. “மடத்தில் எத்தனையோ சிப்பந்திகள் ..குறைந்த சம்பளத்தில் மனப்பூர்வமாக ..உழைக்கிறார்கள்.அவர்கள் வீட்டில் ..கல்யாணம் கார்த்தி என்றால் பணத்துக்கு ..எங்கே போவார்கள்?” என்றார். அருள் என்றால், வெறும் தூறல் இல்லை, கன (பண) மழைதான்!.
ராஞ்சி தெருக்களில் ஹாய்யாக புல்லட் பைக் ஓட்டிய தோனி
ராஞ்சி: பைக் பிரியரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திர சிங் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியின் தெருக்களில் தன் ஆசை புல்லட்டில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வலம் வந்தார். பைக் பிரியரான தோனியிடம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புல்லட் பைக்குகள் உள்ளன. தற்போது ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும் 16 பைக்குகள் உள்ளனவாம். இவை தவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக சுற்றுவதற்காக, அந்த நகரங்களிலும் தலா இரண்டு பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தன்னிடம் விலையுயர்ந்த பல பைக்குகள் இருந்தாலும், முதல் முதலாக வாங்கிய புல்லட் பைக் மீதுதான் அவருக்கு ஆசை அதிகம். அதை அவ்வப்போது ஓட்டி மகிழ்வாராம். ஏப். 8 ஆம் தேதி முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணப்பட உள்ள தோனி அதற்கு முன் ஆசையாக தனது சொந்த ஊரில் புல்லட்டில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.
தங்கம் சவரனுக்கு ரூ.248 உயர்வு
சென்னை: தங்கம் சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. கடந்த ஏப். 2ஆம் தேதி ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 152 ஆக இருந்தது. பின்னர் விலை குறைந்து நேற்று ரூ.20 ஆயிரத்து 104 ஆக விற்றது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 352 ஆக விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.31 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,544–க்கு விற்கப் படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.215 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 315 ஆகவும், ஒரு கிராம் ரூ.41 ஆகவும் உள்ளது.
சுவர் இடைவெளியில் சிக்கிய பூனை: 5 வருடமாக உணவளித்த முதியவர்
5 வருடங்களாக சுவர்களின் இடைவெளிக்குள் சிக்கித் தவித்த பூனைக்கு முதியவர் ஒருவர் உணவளித்து வந்துள்ளார். இந்தச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2010ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த ஆப்டோ என்ற முதியவர், அங்கே இரு சுவர்களின் இடைவெளியில் குட்டிப்பூனை ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டார். அதனை வெளியே எடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. இதனால், தினமும் ரயில் நிலையம் வந்த அவர், பூனைக்கு உணவளித்து வந்தார். துவக்கத்தில் அவரின் இந்தச் செயலை ஏளனமாகப் பார்த்த பலர் பின்னர் அவருக்கு உதவி செய்தனர். சுமார் 5 வருடங்கள் கடந்த நிலையில் அண்மையில் சுவருக்கு வெளியே தெரிந்த பூனையின் வளர்ந்த வாலைப் படமெடுத்து அதனையும் இது குறித்த செய்தியையும் பேஸ்புக்கில் வெளியிட்டார். இதை அறிந்த பிராணிகள் நல ஆர்வலர்கள் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பூனையை மீட்டனர். https://youtu.be/Suk5PNzKnKw

