சென்னை: சிபிசிஐடி போலீஸார் அக்ரி கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தது, அவரை சிபிஐ விசாரணையில் இருந்து தப்ப வைக்கவே என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: திருநெல்வேலி மாவட்ட விவசாய பொறியியல் துறையின் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி தற்கொலை செய்யப்பட்ட சோக நிகழ்வு நடைபெற்ற உடனே இது தற்கொலை அல்ல, இதில் விவசாயத் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சம்மந்தப்பட்டு இருக்கிறார் என்று முதல்முதலாக குரல் எழுப்பினேன். தொடக்கத்தில் ஊடகங்களின் ஆதரவு இல்லாத நிலையில் தொடர்ந்து நீதிக்காக குரல் கொடுத்தேன். முத்துக்குமாரசாமி இறப்பதற்கு முன்பு, அவர் கடந்த 3 மாதங்களில் யார் யாரோடு பேசினார் என்கிற தொலைபேசி, அலைபேசி எண்கள் அடங்கிய பட்டியலை ஆதாரமாக வெளியிட்டேன். இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் பதவி, பிறகு அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. பின்பு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், சிபிசிஐடி விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்தன. நேற்றிரவு சிபிசிஐடி போலீசாரால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணையைத் தவிர்ப்பதற்காக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறாரோ என்கிற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. எனவே, இவ்வழக்கில் தமிழக அமைச்சரே சம்பந்தப் பட்டிருப்பதால் மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும். ஏனெனில் சிபிசிஐடி விசாரணையில் இறுதியாக குற்றவாகளிகள் தப்பித்து விடுவார்கள் என்கிற அச்சம் எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, நான் ஏற்கனவே கோரியிருந்த மத்திய புலனாய்வுத் துறையிடம் வழக்கை ஒப்படைப்பதன் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது- ஒரு கண்துடைப்பு: ராமதாஸ்
85% புகையிலை எச்சரிக்கை படங்களை வெளியிடக் கோரி 10ஆம் தேதி பாமக., போராட்டம்
வைகோ மௌன விரதம்
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனது தந்தையார் வையாபுரியின் நினைவுநாளான இன்று கலிங்கப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். வைகோவின் தந்தையார் வையாபுரி 1973 ஏப்ரல் 5 ஆம் தேதி காலமானார். அதிலிருந்து 41 ஆண்டுகளாக வைகோ மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் யாரிடமும் பேசாமலும், தண்ணீர்கூட பருகாமலும் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். தேர்தல் பிரச்சார காலங்களிலும்கூட அவர் மௌன விரதத்தை கடைபிடித்து வந்துள்ளார்.
மேக் இன் இண்டியா- வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: இந்திரா நூயி
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “மேக் இன் இண்டியா’ திட்டம், உள்நாட்டின் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்று பெப்ஸிகோ தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி கருத்து தெரிவித்தார். கொல்கத்தாவில் சனிக்கிழமை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திரா நூயி, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், நாட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் நல்ல திட்டமாகும். இந்தியாவில் 2020-ஆம் ஆண்டுக்குள் ரூ. 33,000 கோடி மதிப்பிலான முதலீடுகளைச் செய்வோம் என 2013ல் அறிவித்தோம். அதன்படி, ஆந்திரத்தில் பெப்ஸி அமைத்து வரும் புதிய ஆலையின் முதல் தளம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய குளிர்பான ஆலை இது. இந்த ஆலையை அமைக்க முதல் கட்டமாக ரூ. 1,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
யோகா – மத சுதந்திரத்தை மீறவில்லை: அமெரிக்க நீதிமன்றம்
யோகா பயிற்சி மத சுதந்திரத்தை மீறவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அமெரிக்காவில் மிகவும் பிரபலம் அடைந்துவரும் மிகப் பழைமை வாய்ந்த இந்திய யோகக் கலை தற்போது அங்குள்ள பள்ளிகள் பலவற்றில் ஒரு பயிற்சிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் 5,600 மாணவர்கள் படிக்கும் சாண்டியாகோ கவுண்டி என்சினிடாஸ் தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு வாரத்துக்கு 2 முறை 30 நிமிட யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் ‘யோகா பயிற்சி, இந்து மதம் மற்றும் புத்த மதக் கொள்கைகளை ஊக்குவித்து, கிறிஸ்துவ மதத்துக்கு தடையாக அமைந்துள்ளது’ என்று கூறி, ஸ்டீபன், ஜெனீபர் செட்லாக் மற்றும் அவர்களுடைய 2 குழந்தைகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை அந்த நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து கலிபோர்னியாவில் உள்ள 4வது மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதுவும் விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இது குறித்து நீதிமன்றம் தெரிவித்தபோது, விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட யோகா பயிற்சி தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்தபோது அதில் கலிபோர்னியா அரசியலமைப்பு சட்டத்தின்படி எந்த வகையிலும் மத சுதந்திரம் மீறவில்லை என்ற முடிவுக்கு வரமுடிகிறது. இந்தப் பள்ளியில் பாரம்பரிய உடற்பயிற்சிக்கு மாற்று போலத்தான் யோகா பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. சில வழிகளில் யோகா பயிற்சி மதத்துடன் தொடர்பு உடையதாக இருந்தாலும்கூட அமெரிக்கப் பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் யோகா பயிற்சி எந்த விதத்திலும் மதம், கடவுளைக் கண்டறியும் நம்பிக்கை மற்றும் ஆன்மிக சூழ்ச்சிமுறை போன்ற எதனையும் கொண்டிருக்கவில்லை என்று கூறியது
மலேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து; முன்னாள் அமைச்சர் உள்பட 6 பேர் பலி
கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் அமெரிக்காவுக்கான மலேசிய முன்னாள் தூதர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மலேசியாவின் தெற்கு மாகாணமான செமன்யீக் பகுதிக்கு அந்நாட்டு முன்னாள் அமைச்சரும் மலேசிய முன்னாள் தூதருமான் ஜமாலுதீன் ஜர்ஜிஸ், பிரதமரின் உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் ஹெலிகாப்டர் ஒன்றில் பயணித்தனர். வடக்கு கான்தன் நகரிலிருந்து செமினி நகர் அருகே வானில் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென தீப்பற்றி வெடித்துச் சிதறியது. ஹெலிகாப்டர் எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் அடர்ந்த காட்டிற்குள் கீழே விழுந்து தீப்பிடித்து விபத்திற்குள்ளானதாகத் தெரிகிறது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முன்னாள் அமைச்சர் ஜமாலுதீன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியாயினர். பின்னர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டன. விபத்து குறித்து பிரதமர் நஜிப் ரசாக் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மலேசியப் பிரதமர் மகளின் திருமணத்துக்கு சென்று திரும்பியபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்ததாக மலேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது: நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலையில் திடீர் நடவடிக்கை
சென்னை: மாநில முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இன்று கைது செய்யப்பட்டார். நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமாகக் குற்றம் சாட்டப்பட்ட மாநில முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று இரவு விசாரணைக்காக ஆஜரானார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. போலீஸார் அவரிடம் இரவு முழுதும் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 5.00 மணியளவில் அவரைக் கைது செய்த போலீசார் அவரை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றனர். அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன், வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் சென்றனர். இந்த வழக்கில், நெல்லையைச் சேர்ந்த 3 முக்கிய புள்ளிகள் இன்று மாலைக்குள் கைதாகலாம் என்று தகவல் வெளியானது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி நெல்லையில் ரயில் முன்னர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு, வேளாண் துறை அமைச்சகம் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. தமிழக வேளாண் துறையில் ஓட்டுநர் பணி நியமனம் செய்த போது கொடுக்கப்பட்ட நெருக்கடியால் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. இதன் பின்னணியில் துறையைக் கவனித்து வந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் அ.தி.மு.க. பிரமுகர்கள் முத்துக்குமாரசாமியை மிரட்டியதாகக் கூறப்பட்டது. பலவித போராட்டங்களுக்குப் பின்னர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதை அடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் இன்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
“ஒரே இருட்டாய் போயிடுத்தே.
“ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?” சொன்னவர்-டி.வி.சுவாமிநாதன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் புதுப்பெரியவாள் 1971-72 கேரளத்துக்கு விஜயம் செய்தார்கள். அப்போது எர்ணாகுளத்தில் நகர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒரு குட்டி யானை மீது அமர்ந்து முதல்வரிசையில் புதுப்பெரியவாள் ஊர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஏற்பட்ட மின்தடையால் எல்லா விளக்குகளும் அணைந்தன. குட்டி யானை மிரண்டது. நல்ல காலமாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் விளக்குகள் எரியத் தொடங்கி- விட்டன.இடையில் புதுப்பெரியவாளும் யானையிலிருந்து பத்திரமாக இறங்கிவிட்டிருந்தார்கள். வீதிவிளக்குகள் அணைந்ததும் என் (டி.வி சுவாமிநாதன்) இல்லத்திற்கு விரைந்து விளக்குகள் அணைந்ததன் காரணத்தைக் கேட்பதற்காக மின்வாரியத்துடன் தொடர்பு கொண்டேன். அதற்குள் எல்லாம் சரியாயிற்று என்று அறிந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் புறப்படும் சமயத்தில்காஞ்சியிலிருந்து ஒரு மின்னல்வேக டெலிபோன் அழைப்பு. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஏ.நாகராஜ அய்யர் விசாரித்தார்.”ஊர்வலத்தில் ஏதாவது குழப்பம் உண்டாயிற்றா? நடந்ததை விவரித்துவிட்டு, வியப்புடன் நான் வினவினேன். “அந்த சம்பவம் நடந்து ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை, அதற்குள் எப்படி நீங்கள் இதுபற்றி விசாரிக்கிறீர்கள்?” ஸ்ரீ பெரியவாள் சிவாஸ்தானத்தில் சொல்லிக் கொண்டிருந்தாராம். “நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன் நான் மலையாள ராஜ்யத்தில் யாத்திரை செய்த போது இருந்ததைவிட விமரிசையாக,புது சுவாமிகள் ஊர்வலத்திற்கு இன்று தடபுடலான ஏற்பாடுகள்…” இவ்விதம் அருளிக்கொண்டே இருந்த பெரியவர், திடீரென்று, “ஒரே இருட்டாய் போயிடுத்தே. யானை மிரண்டுடுத்தே?” என்று முன்பின் சம்பந்தமில்லாமல் கவலையோடு சொன்னார்களாம். உடனே எர்ணாகுளத்திலிருந்த என்னைக் கூப்பிட்டு, ‘என்ன நடந்தது என்று அறியப் பணித்தார் என்று கூறினார். பெரியவாளுக்கு,சிவாஸ்தானம் தான் நேத்ரஸ்தானமா?

