புதுச்சேரி : கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு எதிராக புதுச்சேரியிலும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆம் ஆத்மி தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து பூஷண், யாதவ் நீக்கம்
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரை நீக்குவதாக முடிவு செய்யப்பட்டது. இருவருக்கும் எதிராக 200க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளதால் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் அஜித் ஜா, ஆனந்த் குமார் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மதியம் பூஷணும், யாதவும் செய்தியாளர்களைச் சந்தித்து உண்மை நிலையைச் சொல்வதாக தகவல் அளித்துள்ளனர். இதனிடையே, தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அடிதடி, ரகளை வன்முறைகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதை, அக்கட்சி மறுத்துள்ளது. கூட்டம் சுமுகமாக நடைபெற்றதாகக் கூறியுள்ளது. முன்னதாக, இன்று காலை கூட்டம் தொடங்கும் முன்னர், யோகேந்திர யாதவ் தலைமையில், ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்ஆத்மியின் தேசிய குழு கூட்டம் நடைபெறும் கட்டடத்தின் வாசலில் அமர்ந்து யோகேந்திர யாதவ் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார். கூட்டத்தில் கலந்து கொள்ள முறையான அழைப்பு இருந்தும் உறுப்பினர்கள் சிலர் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி அவர், தனது ஆதரவாளர்கள் சிலருடன் தர்ணாவில் ஈடுபட்டார். கேவலமாகத் திட்டும் கேஜ்ரிவால்! முன்னதாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது எதிர்ப்பாளர்களை மோசமாகத் திட்டும் குரல் பதிவு வெளியானது. கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக கட்சியை நிறுவிய உறுப்பினர்களில் முக்கியமானவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் கட்சியில் வெளிப்படை தன்மை, உள்கட்சி ஜனநாயகம் என்பது உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து கேஜ்ரிவாலுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்த இருவரையும் குறித்து ஒரு வாரத்துக்கு முன் கேஜ்ரிவால் தனது ஆதரவாளரிடம் பேசுவது ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘வேறு கட்சியாக இருந்தால் இந்நேரம் அவர்கள் இருவரையும் கட்சியைவிட்டே துரத்தியிருப்பார்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் அவர் 67 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆம் ஆத்மி கட்சியைவிட்டே வெளியேறிவிடுவேன் என்று அவர் சொல்வதையும் கேட்க முடிகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மூத்த தலைவர் ஒருவர் நாம் கோபப்படும்போது நிதானம் இழந்து இதுமாதிரி பேசிவிடுவது இயல்புதான் என்று கூறியுள்ளார்.
காலாவதியாகும் சட்டம்: கையைப் பிசையும் அரசு: மீண்டும் அவசரச் சட்ட முடிவு
புது தில்லி: நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் 5–ந்தேதியுடன் காலாவதி ஆவதால், மீண்டும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நிலம் கையகப்படுத்த ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதியில், இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, நிலம் கையகப்படுத்தும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், அங்கு இன்னும் நிறைவேறவில்லை. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அக்கட்சிகளை சரிக்கட்டும் பொறுப்பை மூத்த அமைச்சர்களிடம் பா.ஜனதா ஒப்படைத்துள்ளது. எப்படியும், மாநிலங்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நிறைவேற்றி விடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதனிடையே, பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி முடிவடைந்து, கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தொடரின் இரண்டாவது பாதி, ஏப்ரல் 20–ந்தேதி தொடங்குகிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது ஏப்ரல் 5–ந்தேதியுடன், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அவசர சட்டம் காலாவதி ஆகிறது. எனவே, அந்த அவசர சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது என மத்திய அரசு நேற்று அதிகாரபூர்வமாக முடிவு செய்தது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இல்லத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்சபை கமிட்டி கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
வடிவேலு நடிக்கும் நகைச்சுவைப் படம் எலி
முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே அமைக்கப்பட்டு எடுக்கப்படும் படம் “எலி”. வைகைப்புயல்வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகம் இரண்டாவது படம் இது. 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ்குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவுபகலாக இடைவிடாமல்நடைப்பெற்று வருகிறது. பின்னி மில் வளாகத்தில் அமைக்க பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின்உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்ப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள்கோடிகணக்கில் கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனகாட்சிகள் சண்டைக்காட்சிகள்படமாக்கப்பட்டன. மேலும் பல கோடி ருபாய்க்கும் செலவில் நடனவீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாக,புகழ்பெற்ற மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்புகழ் நடன இயக்குனர் தாரா அவர்களின் நடன அமைப்பில்பாடல் படமாக்கப்பட்டது. இந்தபடத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்தார் நடிகை சதா. கவர்ச்சியிலும் காமெடியிலும் விருந்து படைக்கிறார். சதாவின் நகைச்சுவை காட்சிகள் புது அனுபவம் தரும். தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் எலி ஏப்ரல் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மே மாதம்திரைக்கு வருகிறது. குழந்தைகள், பெண்கள் என அனைவரையும் பார்க்கும்வண்ணம் நகைச்சுவைக்கும் மட்டும் முதலிடம் தந்துஎடுக்கப்படும் இந்த படம் 2015ம் ஆண்டின் கோடைக்கால குதுகலம். இந்தப்படத்தில் புகழ்பெற்ற சிறப்பம்சம் ஒன்றும் உண்டு. பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாலிக்குமோ, அதேபோன்று சூப்பர் சுப்பராயன் சண்டைப்பயிற்சியில், வைகைபுயல் வடிவேலு எலியாக தனது நடிப்பில்பிரம்மாண்டமான சண்டைக்காட்சியில் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறார். உலகில் யாரும் இதுவரை செய்திராத வடிவேலுவின் “எலி” நடிப்பு – குழந்தைகளுக்கு சம்மர் டிரிட். நடிகர்கள்: “வைகை புயல்” வடிவேலு சதா “கஜினி வில்லன்” பிரதிப் ராவத் பெசன்ட் ரவி மகாநதி சங்கர் சந்தானபாரதி பாவா லட்சுமணன் போஸ் வெங்கட் பூச்சி முருகன் ராஜ்கபூர் வெங்கல் ராவ் கிருஷணமூர்த்தி தொழில்நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – யுவராஜ் தயாளன் இசை – வித்யாசாகர் ஓளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன் படத்தொகுப்பு – VT விஜயன் கலை – தோட்டாதரணி பாடல்கள் – புலமைப்பித்தன். விவேகா நடனம் – தாரா, சிவசங்கர் சண்டை – சூப்பர் சுப்புராயன் மேக்கப் – நேரு, பாபு உடைகள் – முருகன் தயாரிப்பு மேற்பார்வை – பன்னீர் செல்வம் தயாரிப்பு நிர்வாகம் – சிவராஜ், வெங்கடேஷ் டிசைன்ஸ் – மித்ராமீடியா மக்கள் தொடர்பு – நிகில் தயாரிப்பு – G சதிஷ் குமார், S அமர்நாத்
இன்று ராமநவமி கொண்டாட்டம்: பிரணாப், மோடி வாழ்த்து
புது தில்லி : நாடு முழுவதும் இன்று ராமநவமி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது டிவிட்டர் பதிவுகளில் வாழ்த்தினைத் தெரிவித்துள்ளனர்.
राम नवमी के पावन पर्व पर सभी को हार्दिक शुभकामनायें ! pic.twitter.com/EWJkxrnxGe — Narendra Modi (@narendramodi) March 28, 2015
Greetings and good wishes to all fellow citizens on the joyous occasion of Ram Navami #PresidentMukherjee — President of India (@RashtrapatiBhvn) March 28, 2015
May the example of Rama as Maryada Purushottam inspire us to achieve nobility in thought, word and deed #PresidentMukherjee — President of India (@RashtrapatiBhvn) March 28, 2015
May the venerable Lord instill in our people just and righteous conduct in the face of trials and tribulations #PresidentMukherjee — President of India (@RashtrapatiBhvn) March 28, 2015
திருவாரூரில் சாலை மறியல் போராட்டம்
திருவாரூர் பேருந்து நிலையம் முன்னர் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக., காங்கிரஸ், மதிமுக., வினர் என 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. களக்காடு, பாவூர் சத்திரம், செங்கோட்டை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுதும் அடைக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் நகைக்கடைகள் முழுதும் அடைக்கப்பட்டுள்ளன.
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 150 பேர் கைது
நாகப்பட்டினம்: மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுதும் முழு அடைப்பு நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை நாகையில் காரைக்கால்-வேளாங்கண்ணி ரயிலை மறிக்க முயன்ற திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மறியலில் ஈடுபட முயன்ற 7 பெண்கள் உள்ளிட்ட 150 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் அதிபரைக் கடத்தி சரமாரி தாக்குதல்: முன்னாள் துணை மேயர் உட்பட 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபரைக் காரில் கடத்தி சரமாரியாக அடித்து உதைத்தது தொடர்பாக திருநெல்வேலி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கோபாலபுரம் பத்மாவதித் தாயார் தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 4 பேர் காரில் வந்துள்ளனர். தன்ராஜிடம் பேசிக் கொண்டிருந்த அவர்கள், சற்று நேரத்தில் தன்ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து உதைத்து அவரை காரில் தூக்கிப் போட்டு சென்றுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே அன்று நள்ளிரவு ரத்தக் காயங்களுடன் தன்ராஜ் வீட்டுக்கு வந்தார். போலீஸார் தன்ராஜை அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், நிலம் வாங்குவது தொடர்பாக தன்ராஜை அணுகியுள்ளார். இதையடுத்து நிலம் வாங் கித் தருவதாகக் கூறி முத்துராமலிங்கத்திடம் இருந்து ரூ.12 லட்சத்தை தன்ராஜ் வாங்கியுள்ளார். ஆனால் ஒப்புக்கொண்டபடி நிலம் வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் தன்ராஜ் இழுத்தடித்துள்ளார். இதனால் பிரகாஷ் உள்ளிட்டோர் தன்ராஜை காரில் கடத்தி, தி.நகரில் உள்ள முத்துராமலிங்கம் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அங்கும் தன்ராஜை அடித்து உதைத்து முத்துராமலிங்கத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர். பின்னர் தன்ராஜை வெளியே விட்டுள்ளனர் என்பது தெரிந்தது. பின்னர், தன்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருநெல்வேலி மாநகராட்சி திமுக முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம்(45), அயனாவரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

