Home Blog Page 6174

ஸ்ரீராமநவமி சிறப்புக் கட்டுரை: சரணாகதியின் பொருள் உரைத்தவன்!

lord shri rama - 2026

அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே” என்று வருந்தினவாம். அதற்கு இறைவன் “உங்களுக்கு ஏற்றம் தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம். பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.

ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே பிறந்தாரென்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதத்தில் அவதரித்தார். ஸ்ரீராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுதான் ஸ்ரீராம ஜன்மோத்ஸவம் – ஸ்ரீராமநவமி என்று நாட்டு மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள். ஸ்ரீராமர் பிறந்ததே அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில்.

அவர் பால பருவத்தில் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றதும், வனவாசத்திற்காகப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் அலைந்ததும் நல்ல வெய்யிலில் தான். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் பிறந்ததை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். “மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது. இராமரைப் பற்றி எத்தனையோ பக்தகவிகள் பாடி இருக்கிறார்கள். புரந்தரதாஸர், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் என்ற மும்மூர்த்திகளைப் போல பல்வேறு புகழ்பெற்ற கீர்த்தனைகளைக் கொடுத்தவர் திருவாங்கூர் மகாராஜா. அவர் பிறந்தது கி.பி.1813 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – ஆம் தேதி. 18 ஆண்டுகள் அவர் சமஸ்தானத்தைப் பரிபாலித்தார்.

ஸம்ஸ்க்ருதம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 300 -க்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியுள்ளார். அவரது பட்டாபிஷேக கீர்த்தனையான “பாவயமி ரகுராமம் பவ்ய ஸுகுணா ராமம்” என்ற கீர்த்தனை. இன்றும் இந்தக் கீர்த்தனையைக் கேட்டு அதில் லயிக்காதவர் யாருளர்? ஸ்ரீராமர் என்று சொன்னாலே சரணாகதித் தத்துவம் தான் அனைவர் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமபிரான்.

பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான். ஆரண்ய காண்டத்தில் தண்டகவனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர்.

கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராமபிரானைச் சரணடைந்தான். சுந்தரகாண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறையிருந்தபோது, ஸ்ரீராமபிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன். அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்” என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.

சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  இராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி. ஸக்ருதவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம் பகைவனுக்கும் அருளும் பண்பாளன் அல்லவா ஸ்ரீராமபிரான். அதை சரணாகதியின் உச்சத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தில் அறிந்து கொள்ளலாம். விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான் கூறுகிறார்…

“நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த இராவணனாகவேதான் இருக்கட்டும்… இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது” என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் ஸ்ரீராமபிரான். இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு. மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர். வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப் படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்பது ஒரு வகை. ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு.

இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும் புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து. ஸ்ரீராமபிரானை எண்ணும்போது நம் நினைவில் உடனே வருபவர் குலசேகராழ்வார். சேரமான் பெருமாளாக மன்னர் குலத்தில் ஸ்ரீராமபிரான் பிறந்த அதே புனர்பூச நட்சத்திரத்தில் உதித்தார் குலசேகராழ்வார். மன்னராயினும் ஸ்ரீராமபிரானிடம் அளவற்ற பக்தி அவருக்கு. இராமாயணத்தைக் கேட்பதில் தனி ஆனந்தம். ஒரு முறை வைணவப் பெரியார் ஒருவர், குலசேகரருக்கு வால்மீகி ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்.

இவரும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பொங்கும் வண்ணம் மனம் லயித்துக் கேட்டு வந்தார். ஒருநாள் இராமபிரான் அரக்கர்களோடு போர்புரிந்த நிகழ்ச்சியை விவரித்தார் அந்த வைணவப் பெரியார். இலக்குமணன் வில்லேந்திக் கவசம் தரித்து இராமனிடம் வந்து, அரக்கர்களுடன் போர் புரிய விடை கேட்டான். ஸ்ரீராமரோ, நீ சீதையைக் காத்துக் கொண்டிரு, நான் போய் அரக்கர்களை அழித்து வருகிறேன் என்று கூறிப் பர்ண சாலையினின்றும் வெளிக் கிளம்பி விட்டார்.

அதுகண்ட சூர்ப்பணகை, இவனே அரக்கர் குலத்தின் பகைவன் என்று கத்தினாள். அம்மொழிகேட்ட அரக்கர்கள் நாலாத்திசைகளிலிருந்தும் இராமபிரானைத் தாக்கினார்கள். அவர்களின் படைக்கலன்கள் இராமபிரானின் மீது பட்டு விழுந்தன” என்று கதை கூறிக் கொண்டிருந்தார் அவர். இதைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரரோ அந்தக் கட்டத்தில் மனம் லயித்து, “ஆ! அரக்கர்கள் மாயப் போர் புரிவதில் வல்லவர்களாயிற்றே. கரன், தூஷணன், திரிசரன் போன்ற அரக்கர்கள் மாயத்தந்திரங்களால் தனியராய் இருக்கும் ஸ்ரீராமபிரானைத் தாக்குகிறார்களே! இப்பெரும் படையை தனி ஆளாய் இருக்கும் ஸ்ரீராமபிரான் எப்படி சமாளிக்கப் போகிறாரோ!” என்று எண்ணி, தம் படையைப் போருக்கு ஆயத்தமாகுமாறு படைத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டார்.

படைத்தளபதிகளோ, ஆச்சர்யம் அடைந்தனர். நம்மை எதிர்த்த சோழ, பாண்டியர்கள் மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள். எதிரிகளே நமக்கில்லையே. பின் யார் மீது போர்? என்று குழம்பித் தவித்தனர். ஆனால் அரச கட்டளையாயிற்றே! அவர்கள் பெரும் படையத் திரட்டித் தயாராயினர். குலசேகரரும் போர்க்கோலம் பூண்டு நிற்கையில், காரணம் அறிந்த அமைச்சர் இராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பெரியாரை அழைத்து, இச்சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டினர்.

அப்பெரியவரும், “ஸ்ரீராபிரான் தனியொருவராக நின்று, மாயங்கள் புரிந்த அரக்கர்களை அழித்து வெற்றி வாகைசூடி, பர்ணசாலையடைந்தார். சீதாதேவி எம்பெருமானின் மார்பில் பட்ட புண்களுக்கெல்லாம் மருந்தாக அவரைத் தழுவி மகிழ்ந்தாள்” என்று கதையைச் சொல்லி ஸ்ரீராம பட்டாபிஷேகம் வரை, சொல்லி முடித்த பிறகே குலசேகரர் தெளிவு பெற்றார். தம் படையை மீண்டும் தத்தம் இடம் திரும்புமாறு கட்டளையிட்டு அரண்மனை திரும்பினார்.

ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பது பெரியோர் வாக்கு. வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில் (பாணம்). ஒரே சொல். ஒரே இல். (மனைவி) என்று வாழ்ந்துகாட்டிய ஸ்ரீராமபிரானின் வழியில் சிந்தித்து சுகம் பெறுவோமே!

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி

mahalakshmi_godess

ஸ்ரீ லட்சுமி அஷ்டோ த்திரசத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை நம: ஓம் பரமாத்மிகாயை நம: ஓம் வாசே நம: ஓம் பத்மாலயாயை நம: ஓம் பத்மாயை நம: ஓம் சுசயே நம: ஓம் ஸ்வாஹாயை நம: ஓம் ஸ்வதாயை நம: ஓம் ஸுதாயை நம: ஓம் தன்யாயை நம: ஓம் ஹிரண்மய்யை நம: ஓம் லக்ஷ்ம்யை நம: ஓம் நித்யபுஷ்டாயை நம: ஓம் விபாவர்யை நம: ஓம் அதித்யை நம: ஓம் தித்யை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் வஸுதாயை நம: ஓம் வஸுதாரிண்யை நம: ஓம் கமலாயை நம: ஓம் காந்தாயை நம: ஓம் காமாக்ஷ்யை நம: ஓம் க்ரோதஸம்பவாயை நம: ஓம் அனுக்ரஹப்ரதாயை நம: ஓம் புத்தயே நம: ஓம் அநகாயை நம: ஓம் ஹரிவல்லபாயை நம: ஓம் அசோகாயை நம: ஓம் அம்ருதாயை நம: ஓம் தீப்தாயை நம: ஓம் லோகசோக விநாசின்யை நம: ஓம் தர்மநிலயாயை நம: ஓம் கருணாயை நம: ஓம் லோகமாத்ரே நம: ஓம் பத்மப்ரியாயை நம: ஓம் பத்மஹஸ்தாயை நம: ஓம் பத்மாக்ஷ்யை நம: ஓம் பத்மஸுந்தர்யை நம: ஓம் பத்மோத்பவாயை நம: ஓம் பத்மமுக்யை நம: ஓம் பத்மநாபப்ரியாயை நம: ஓம் ரமாயை நம: ஓம் பத்மமாலாதராயை நம: ஓம் தேவ்யை நம: ஓம் பத்மின்யை நம: ஓம் பத்மகந்தின்யை நம: ஓம் புண்யகந்தாயை நம: ஓம் ஸுப்ரஸன்னாயை நம: ஓம் ப்ரஸாதாபிமுக்யை நம: ஓம் ப்ரபாயை நம: ஓம் சந்த்ரவதனாயை நம: ஓம் சந்த்ராயை நம: ஓம் சந்த்ரஸஹோதர்யை நம: ஓம் சதுர்ப்புஜாயை நம: ஓம் சந்த்ரரூபாயை நம: ஓம் இந்திராயை நம: ஓம் இந்துசீதளாயை நம: ஓம் ஆஹ்லாத&ஜனன்யை நம: ஓம் புஷ்ட்யை நம: ஓம் சிவாயை நம: ஓம் சிவகர்யை நம: ஓம் ஸத்யை நம: ஓம் விமலாயை நம: ஓம் விச்வஜனன்யை நம: ஓம் துஷ்ட்யை நம: ஓம் தாரித்ர்ய&நாசின்யை நம: ஓம் ப்ரீதிபுஷ்கரிண்யை நம: ஓம் சாந்தாயை நம: ஓம் சுக்லமால்யாம்பராயை நம: ஓம் ச்ரியை நம: ஓம் பாஸ்கர்யை நம: ஓம் பில்வநிலயாயை நம: ஓம் வராரோஹாயை நம: ஓம் யசஸ்வின்யை நம: ஓம் வஸுந்தராயை நம: ஓம் உதாராங்காயை நம: ஓம் ஹரிண்யை நம: ஓம் ஹேமமாலின்யை நம: ஓம் தனதான்யகர்யை நம: ஓம் ஸித்தயே நம: ஓம் ஸ்த்ரைண ஸௌம்யாயை நம: ஓம் சுபப்ரதாயை நம: ஓம் ந்ருபவேச்ம கதானந்தாயை நம: ஓம் வரலக்ஷ்ம்யை நம: ஓம் வஸுப்ரதாயை நம: ஓம் சுபாயை நம: ஓம் ஹிரண்யப்ராகாராயை நம: ஓம் ஸமுத்ரதனயாயை நம: ஓம் ஜயாயை நம: ஓம் மங்களாதேவ்யை நம: ஓம் விஷ்ணுவக்ஷஸ்தல ஸ்திதாயை நம: ஓம் விஷ்ணுபத்ன்யை நம: ஓம் ப்ரஸன்னாக்ஷ்யை நம: ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம: ஓம் தாரித்ர்ய த்வம்ஸின்யை நம: ஓம் தேவ்யை நம: ஓம் ஸர்வோபத்ரவ&வாரிண்யை நம: ஓம் நவதுர்காயை நம: ஓம் மஹாகால்யை நம: ஓம் ப்ரஹ்மவிஷ்ணு& சிவாத்மிகாயை நம: ஓம் த்ரிகாலஜ்ஞான ஸம்பன்னாயை நம: ஓம் புவனேஸ்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்
(குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக!)

சூரியாஷ்டகம் Sri Suryashtakam

 ஸ்ரீ சூர்யாஷ்டகம்

 


ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||

ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். 
பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்.

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|
ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

வானவில்லின் வண்ணம் போல் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே! வெப்பம் நிறைந்தவரே!
ரிஷி கச்யபரின் குமாரரே! வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே! அனைத்து உலகங்களுக்கும் தந்தையே!
எம் பாவத்தை அறுத்து பாவனம் ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

சத்வ, ரஜோ, தமோ என முக்குணங்களை உடையவரே! பலம் பொருந்திய மஹாசூரரே! ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே!
எம் பாவத்தை அறுத்து தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸாகிய ஒளி கொண்டவரே! வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே!
உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே! மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே!
ஒரே சக்கரத்தைக் கொண்டவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே! தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே!
எம் பாவத்தை அறுத்து என்னைத் தூய்மை ஆக்குபவரே! சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்!

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

உலகின் நாதனே! ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே!
எம் பாவத்தை அறுத்து தூயவன் ஆக்குபவரே! ஹே சூரிய தேவனே! உம்மை வணங்குகிறேன்!

இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்|| 
இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது.

தமிழில்: செங்கோட்டை ஸ்ரீராம்

 
Bhagwan Surya Dev - 2026

ஸ்ரீ ராமன் எங்கள் தோழன்

srirama-sita உள்ளொன்று வைக்காத உத்தமன் – இன்றும் ஊர்போற்றும் மக்களின் காதலன் ! சுள்ளென்று பேசாத சுந்தரன் – தீய    சூழ்ச்சிகள் இல்லாத சோதரன்  ! அள்ளென்று சொல்கின்ற தர்மவான் – பகை அழுக்கினை நீக்குகிற புண்யவான் ! புள்ளினைத் தந்தையாய்ப் போற்றினான்  – குகப் புதையலை நண்பனாய்க் கூட்டினான் !               (8)   தீதினை நன்மையாய்ச் செய்தவன் – வந்த திதியையும் தன்னாலே வென்றவன் மாதினைப் போற்றுகிற மானுடன் – வேறு மாதினைக் கொள்ளாத நெஞ்சினன் ஓதிய வார்த்தைக்காய் வாழ்ந்தவன் – ஊர் ஊதிய வார்த்தைக்கும் தாழ்ந்தவன் வேதியர் சொல்லினையும் கேட்டவன் – ஒரு வேடுவனின் பாடுபொரு ளானவன்   !               (16)     மானுட சாதியில் வந்தவன் – மக்கள் மண்ணிலே உற்றதுய ருற்றவன்                                      மானுடன் மாயையில் ஓடினான் – பெண் மானுடச் சாயையில் வாடினான் ! ஊனுடல் வற்றிடத் தேடினான் – லங்கை ஊரிலே வெற்றியும்  கூடினான் ! வானுயர் மாருதி நட்பினான் – நம் மனதிலே ராமனாய் அப்பினான்  !               (24)             

  • கவிஞர்  மீ.விசுவநாதன்

(28.03.2015 சனிக்கிழமை ஸ்ரீராம நவமி)

சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது

fake-currency-notes-arrested சென்னை. சென்னையில் ரூ மூன்றரை லட்சம் கள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீஸார் தெரிவித்தது…. அமைந்தகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் வணிக வளாகத்தில் அமைந்துள்ள உணவகத்திற்கு நேற்று (26,03,2015) இரவு சுமார் 1,015 மணியளவில் வந்த இரண்டு நபர்கள் டிபன் வா’;கி விட்டு ஆயிரம் ரு்பாய் நோட்டை கொடுத்து மாற்ற முயன்றனர், நோட்டை பரிசோதனை செய்த ஊழியர்கள் அது கள்ள நோட்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் மேற்படி தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியான கைலாசம் வ-45. என்பவரிடம் தெரிவித்தனர். உடனே அவர் அமைந்தகரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அமைந்தகரை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பெரியபாண்டியன் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேற்படி நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர், விசாரணையில் அவர்கள் வைத்திருந்த ரு்பாய் நோட்டுகள் கள்ள நோட்டு என்பது உறுதி செய்யப்பட்டதன்பேரில். கள்ளநோட்டுகளை மாற்ற முயன்ற நபர்களான 1,அருண்குமார் (21). த-பெ,ரவி. எண்,29. இராஜம’;கலம். வில்லிவாக்கம் மற்றும் அவரது உறவினரான 2,கிnக்ஷhர் கோலி (20). த-பெ, பாலு. கள்ளி டவுண். பூனே ஆகியோர் கைது செய்யப்பட்டனர், போலீசார் மேற்படி நபர்களிடம் தீவிர விசாரணை செய்ததில். அவர்களுக்கு கள்ளநோட்டுகளை கொடுத்தனுப்பிய கும்பலைச் சேர்ந்த ஸ்டேன்லிபாபு (30).வில்லிவாக்கம், தோலாராம் (28) முகப்பேர் சுரேஷ் கிஷோர் (27) இராஜஸ்தான் மாநிலம்; பாபுலால் (43). மகாவீர் கார்டன். காவாங்கரை ஆகிய 4 பேர் உட்பட மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு. அவர்களிடமிருந்து ரூ,3 லட்சத்து 11ஆயிரத்து ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது, விசாரணையில் ஸ்டான்லி பாபு என்பவர் சிந்தாமணி அருகில் உள்ள ஒரு மருந்துக் கடையில் வேலை பார்த்து வருவதும். ராஜங்களத்தில் சொந்தமாக வீடு கட்டி வருவதும். வீடு கட்ட பணம் தேவைப்பட்டதால். மேற்படி தோலாராம் என்பவரிடம் ஆவணங்களை வைத்துக் கொண்டு பணம் கேட்டதும். அதற்கு தோலாராம் தான் கொடுக்கும் கள்ள நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால் கணிசமான கமிசன் தொகை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார், அதன்பேரில். தோலாராம் கொடுத்த ஒரு தொகையை மாற்றுவதற்காக ஸ்டான்லி பாபு தனக்கு தெரிந்த நபர்களான பாபுலால் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து முதலில் கொடுத்த கள்ள நோட்டுகளை மாற்றி ஒரு கணிசமான தொகையை கமிசனாகப் பெற்றுள்ளனர், பின்னர் மேலும் கள்ள நோட்டுகளை பெற்று. அதனை மாற்றுவதற்காக தனது மைத்துனரான மேற்படி அருண்குமார் மற்றும் அவரது உறவினர் கிஷோர் கோலி கள்ள நோட்டுகளை கொடுத்தனுப்பியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டது தெரிய வந்தது, கைது செய்யப்பட்ட மேற்படி குற்றவாளிகள் 6 பேரும்; நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர், மேலும் இக்கும்பலை சேர்ந்த மற்ற நபர்களை பிடிக்க தனிப்படை முடுக்கி விடப்பட்டுள்ளது. கள்ள நோட்டுக் கும்பலை கைது செய்து. கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த அமைந்தகரை காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பெரியபாண்டியன் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் ஜார்ஜ் பாராட்டினார்,

இந்த்ரதனுஷ்- தடுப்பூசி முகாம் ஏப்.7 முதல் ஏப்.13 வரை நடைபெறுகிறது

சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 8 மாவட்டங்களில் காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரனஜன்னி, தட்டம்மை, நிம்மோனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் ஏப்ரல் 07 முதல் 13 வரை ஒரு வாரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு தடுப்பூசி போடாமல் விடுபட்ட குழந்தைகள், கர்ப்பினி தாய்மார்கள் இம்முகாமுக்கு தவறாமல் வந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் 07-4-2015 அன்று முதல் 13.04.2015 வரை முதல் கட்டமாக கோயம்புத்தூர், திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, மதுரை, வேலூர், திருவள்ளூர் மற்றும் விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. மாவட்டங்களில் தடுப்பு மருந்து மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பிரத்யோகமாக நிறுவப்பட்டு தடுப்பூசி வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முக்கிய அம்சங்கள்

  1. இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து வழங்கும் மையம் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
  2. அனைத்து 0-2 வயதிற்குட்பட்ட விடுபட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் 07.04.2015 முதல் 13.04.215 வரை தடுப்பூசி வழங்கப்படும்.

  3. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி முகாம் நாட்களில் தடுப்பூசி மருந்து கொடுக்கப்படும்.

  4. 0-2 வயதுள்ள தடுப்பூசி விடுபட்ட குழந்தைகளுக்கு முகாம் நாட்களில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம்.

  5. இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் வசிக்கும் இடத்திலேயே தடுப்பூசி மருந்து வழங்கப்படும்.

தொலைதூர பகுதி வாழ் குழந்தைகளுக்கு சிறப்பு ஏற்பாடு: 116 நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை துhரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கப்பட உள்ளது. தடுப்பூசி மருந்து முகாமில் ஈடுபடும் பணியாளர்கள் 07.04.2015 – 13.04.2015 அன்று இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாமில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள். மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள். தமிழ் நாட்டில் போலியோ, தொண்டை அடைப்பான், இரனஜன்னி போன்ற நோய்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை நோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். அனைத்து தாய்மார்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “இந்த பூமியிலிருந்து காசநோய், போலியோ, மஞ்சள் காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரனஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம்” மேற்கண்ட தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்கள். உடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், இஆப., தேசிய நலவாழ்வு இயக்க திட்ட இயக்குநர் டாக்டர்.சி.என்.மகேஷ்வரன், இஆப., மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர்.சந்திரநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர்.க.குழந்தைசாமி, உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகள் டாக்டர்.ஆசிஷ்குமார் சட்டபதி, டாக்டர்.சுரேந்திரன், யுனிசெப் பிரதிநிதி அருண்டோபால், பொது சுகாதார துறை இணை இயக்குநர் (தடுப்பூசி) டாக்டர்.சி.சேகர் மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பாரத ரத்னா வாஜ்பாய் !

vajpayee-pranab

அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது  வழங்கப் பட்டுள்ளது.  தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.  இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, அவர் இல்லத்திலே இந்த விருதினை வழங்கி திரு.வாஜ்பாய் அவர்களைப் பெருமைப்  படுத்தியுள்ளார்.
உலக அளவில் பார்த்தால் இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய சில அரசியலில் மூத்த தலைவர்களே  நம்மிடையே வாழ்கின்றார்கள்.  இந்தியாவில் பிரதமராக இருந்த வாஜ்பாய், தலைவர் கலைஞர், அமெரிக்காவின் சீனியர் புஷ், க்யூபாவின் பிடல் காஸ்ட்ரோ  போன்றோர் உள்ளனர். பாரத ரத்னா விருது பெற்ற  வாஜ்பாய் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, மென்மையானவர்,  அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர்.  இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும். அயோத்தி பிரச்சனையும், குஜராத்தில் நடந்த கோத்ரா பிரச்சனையும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தது. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்றவர்கள் கூட வாஜ்பாய் அவர்களை மனம்திறந்து பாராட்டுவார்கள்.  ரைட் மேன் இன் ராங் ப்லேஸ் (Right Man in Wrong Place)  என்று பலர் இவரைச் சொல்வதுண்டு. தன் இளமைக்காலத்தில் இவரும் எல்.கே அத்வானியும் டெல்லியில் ஒரு சிறு அறையில் தங்கி, இவர்களே சமைத்து உண்டு , அரசியல் பணிகளை மேற்கொண்டாகள். தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் வாஜ்பாய். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி காலத்தில், வெளியுறவுத்துறை  அமைச்சராக வாஜ்பாய் இருந்தார்.  அப்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த இருநாட்டு உறவுகளை சமச்சீராக அமைத்துக் கொண்டவர். 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதைத் தீவிரமாக  எதிர்த்தவர். வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி  “எங்கள் துர்கா தேவியே” என்றும் அழைத்தவர். இப்படி இவருடைய சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1986லிருந்து 2000 வரைக்கும் இவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அமைந்தன. டெல்லியில்  வை.கோ அவர்களை கேபினட் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன்,   எந்தத் துறை வேண்டும் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் வாஜ்பாய். ஆனால், .வை.கோ   “வெறும் நான்கு எம்.பிக்களைக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். தமிழ்நாட்டில் என்னுடைய கட்சியை வளர்க்கவேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த வாஜ்பாய் அவர்கள், “ ராமகிருஷ்ண ஹெக்டே மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு வணிக  அமைச்சராக இல்லையா… என்றபோது வை.கோ வேண்டவே வேண்டாம் என்று தலையசைத்துவிட்டார். அப்போது ஒரு கூட்டணிக் கட்சியை  ஒரு பிரதமர்  எப்படி மதித்தார் என்று கண்கூடாகப் பார்த்திருந்தேன். இன்றைக்கும் அது நினைவில் உள்ளது. vajpayee-ksr
வாஜ்பாய் அவர்களது ஆட்சியில் அரசியல் அமைப்புச் சட்டம் மாறுதல் குறித்து நீதிபதி வெங்கடாச்சலைய்யா குழுவில் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள காதி கிராம வளர்ச்சி வாரியத்தில் தலைவராக என்னை நியமிக்க தன் கைப்பட எழுதிய கடிதத்தை வை.கோ அவர்களின் பரிந்துரையில் கையொப்பமிட்டு “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி அவருடைய காலை உணவை உண்டுவிட்டு, பப்பாளி பழத்தினை சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்த நிமிடங்களை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்க்கிறேன். (பின் 1998 இறுதியில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால்,  பொதுத்தேர்தல் வந்தது.  இதற்கிடையில் இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது வேறுவிஷயம்) கடந்த 1998 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாள் என்று சென்னைக் கடற்கரையில் வை.கோ அவர்கள் நடத்தினார். அந்த நிகழ்வை முன்னின்று நடத்தியது அடியேன். அன்றைக்கு பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வருகை தந்திருந்த பொழுது, விமான நிலையத்தில், 1993ல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய வை.கோ மீண்டும் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்க அன்றைக்குத் தான் வாய்ப்பு ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அன்றைய பிரதமர் வாஜ்பாய் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரான போது என்னிடமிருந்த சேது சமுத்திர திட்டம் சம்பந்தமாக வைகோ எழுதியிருந்த கடிதத்தை வாங்கி பிரதமரிடம் “சேது சமுத்திர கேனால்….” என்று சொல்லி கொடுக்கும்போதே தன் கைகளைக் காட்டி……  “கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே…  இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்” என வை.கோவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார். திட்டமிட்டவாறு அன்று மாலை  எழுச்சியான கூட்டம் நடைபெற்றது . கூட்ட மேடைக்குப் பின்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தது. மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பாய் இதைப்பார்த்தவுடன் வை.கோவிடம் “சாப்பிடலாமா” என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின்,  சமையல்காரரைப் பார்த்து “நன்றாக இருந்தது” என்று சந்தோசத்தோடு  பாராட்டவும் செய்தார்.  இதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே.அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாசிப் பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் “நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சொன்னதையெல்லாம் மறக்க முடியாது. ஒருமுறை   தீப்பட்டித்தொழில் பிரச்சனைகள் குறித்து சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற அவ்வட்டார  தீப்பட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, டெல்லியில் உள்ள  பிரதமர் அலுவலகத்தில் சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை.கோ அவர்கள் சென்றிருந்தார். அவர்களை  வாஜ்பாயைச் சந்திக்க வைக்கும்போது பிரதிநிதிகள்  அனைவரோடும் தேனீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவர் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு இரண்டு நிமிடத்தில் மனுவை வாங்கிவிட்டு அனுப்பவேண்டிய பிரச்சனையை, ஒரு நாட்டின் பிரதமராக இருபத்து ஐந்து நிமிடங்கள் எங்களோடு செலவிட்டார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர் . சாதாரணமான என்னைப் போன்ற எளியவர்களையே ஈர்த்த மாமனிதர் தான் அடல்பிகாரி வாஜ்பாய். விவசாயிகள் பிரச்சனை, சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீர் இணைப்புக்கு ஆய்வுக்குழு அமைத்தது,  நாட்டில் இன்றைக்கு எளிதில் பயணிக்க முடிகின்ற நாற்கரச் சாலைகள் போன்ற பல அரிய சாதனைகளை நாட்டுக்கு அர்பணித்த அற்புத மனிதர். 1986ம் ஆண்டு  மே மாதம் மதுரை பந்தயத்  திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திரு வாஜ்பாயும் கலந்துகொண்டார். அப்போது அவரையும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என் பகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பும் போது, வாஜ்பாய் “இட்லி தோசா சாப்பிடலாம்” என்றார். உடன் வந்திருந்த பகுணாவும் இந்தியில் “சாப்பிடலாமே” என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும்அழைத்துச் சென்றேன். காலை 9.00மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும்,  “அமைதியாக எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி” என்றார் வாஜ்பாய் அவர்கள்.   மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பிய போது வாஜ்பாயிடமும் பகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த  தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், வை.கோ, தமிழக மற்றும் ஈழத்தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்கின்ற என்னுடைய திருமணவிழா அழைப்பிதழைக் கொடுத்தேன். உடனே இருவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

ksradhakrishnan
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
ஆனாலும்  வாஜ்பாய் அவர்கள்  டெல்லிக்கு சென்ற பின்,   திருமண நாளான 12-05-1986  அன்று நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பி இருந்தார். இந்தப்  பதிவை எனக்கு உதவியாக இருக்கும் படைப்பாளி கார்த்திக் புகழேந்தி தட்டச்சு செய்யும் பொழுது, என் தாயறிய இதய சுத்தியோடு சொல்கிறேன் என் கண்களிரண்டிலும் கண்ணீர் திரண்டு நிற்கின்றது. என்னுடைய 42வருட பொது வாழ்க்கைக்கு  இதைவிட வேறு என்ன பெரிய பெருமை வேண்டும். எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும்  ஆகவில்லையென்று என்னுடைய நண்பர்களும், நெருங்கியவர்களும், என் நலம்விரும்பிகளும் ஆதங்கப்பட்டாலும்  இந்த பேறுகள் எல்லாம் யாருக்குக் கிடைக்கும்… இத்தகைய அன்பான மனிதருக்கு தாமதமாக பாரத ரத்னா வழங்கப்பட்டாலும், பொறுத்தமான மனிதருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பாரத ரத்னாவுக்குத்தான் பெருமை.
கட்டுரையாளர்:
வழக்கறிஞர்  கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
( திமுக., செய்தித் தொடர்பாளர்)

சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் பட்டம் வழங்கியது மதுரை கல்லூரி

seenu-ramasamy மதுரை: 125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (The Madura College, [Autonomous]) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு மக்கள் இயக்குனர் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது மார்ச் 26 வியாழன் அன்று மாலை 5.00 மணி அளவில் மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. முரளி மற்றும் பேராசிரியர் முனைவர் ந.ரத்தினக்குமார் ஒருங்கிணைப்பாளர் அவர்களால் பட்டயச்சான்றிதழும் விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது. சாதாரணர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர். கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரை உலகிற்கு மதிப்பு கூட்டிய திரு. சீனு ராமசாமி அவர்களுக்கு மக்கள் இயக்குனர் என்னும் விருதை வழங்குவதில் மதுரைக்கல்லூரி பண்பாட்டுக்கழகம் பெருமை கொள்கிறது என்ற விருது பட்டயம் வாசித்து மேடையில் இயக்குனருக்கு வழங்கப்பட்டது. ஏற்புரையில் இயக்குனர் சீனு ராமசாமி…”வாழும் காலத்தில் பட்டப்பெயர்களை அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விததில் மக்கள் தரும் பட்டப்பெயர்களே நிரந்தரமானவை. ஆயினும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக்குழுமம் வழங்கும் இவ்விருதினை ஏற்றுக்கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்பத்தில் பொறுப்புணர்சியும் கூடுகிறது” என்று கூறினார்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நாளை தமிழ்நாட்டில் கடையடைப்புக்கு அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டசபை கூட்டம் மார்ச் 30, 31, ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பாப்கட்டிங்’கா? தலைமுடிக்காக பட வாய்ப்பை மறுத்த ஆண்ட்ரியா!

andriya கமலுடன் உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்திலும் நடித்துள்ளார். இவர் நடித்த வலியவன் படம் தற்போது ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இதனிடையே மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. டைரக்டர் சொன்ன கதை ஆண்ட்ரியாவிற்கு மிகவும் பிடித்துப் போனதாம். இதனால் அந்தப் படத்தில் நடிக்க சம்மதமும் சொல்லியிருக்கிறார். ஆனால் படத்தில் தலைமுடியை வெட்டி பாப்கட்டிங்கில் வர வேண்டும் என்று இயக்குனர் நிபந்தனை விதித்திருக்கிறார். இதைக் கேட்டதும் ஆண்ட்ரியா அதிர்ச்சி அடைந்திருக்கிறார். தலைமுடி தான் எனக்கு அழகு. ஒரு போதும் என் தலைமுடியை வெட்ட மாட்டேன் என்று கூறி தலைமுடிக்காக அந்தப் படத்தை உதறி விட்டுள்ளாராம்…!