Home Blog Page 6231

உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்து- ஊழல்கள் தொடர வழி வகுக்கும்: ராமதாஸ்

உடன்குடி மின்திட்ட ஒப்பந்தம் ரத்து செய்ய முடிவு எடுத்திருப்பது ஊழல்கள் தொடர வழி வகுக்கும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக இரு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை ரத்து செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவு மிகவும் தவறானது; கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்தட்டுப்பாட்டை போக்கும் நோக்குடன் கடந்த 2007 ஆம் ஆண்டில் உடன்குடி மின்திட்டம் அறிவிக்கப்பட்டது. 1600 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டத்தை தமிழ்நாடு மின்சார வாரியமும், பாரத மிகுமின் நிறுவனமும் (பெல்) இணைத்து செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், பெல் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட கூட்டாண்மை ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, ரூ.8000 கோடியில் இத்திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தும் என்று 24.02.2012 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்பின் இந்த மின் நிலையத்தின் உற்பத்தித்திறன் 1320 மெகாவாட் ஆக குறைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு 2013 ஆம் ஆண்டில் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் சுமார் 18 மாத தாமதத்திற்குப் பிறகு 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திறக்கப்பட்டன. வழக்கமாக ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்ட ஓரிரு வாரங்களில் ஒப்பந்தம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் மீது 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, இப்போது ஒப்பந்த நடைமுறையையே தமிழக அரசு ரத்து செய்திருக்கிறது.
ஒப்பந்தப்புள்ளிகள் முறையாக இல்லை என்பதால் தான் அவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. இது ஏற்க முடியாத வாதம் ஆகும். இத்திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிகள் 2 ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறக்கப்பட்டன. இந்த நடைமுறையின் போது சீன&இந்திய கூட்டாண்மை நிறுவனங்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 2 ஒப்பந்தப்புள்ளிகள் நிராகரிக்கப்பட்டன. இப்போது நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில் குறை இருந்திருந்தால் அவற்றை அப்போதே ரத்து செய்திருக்க முடியும். ஆனால், கடந்த 6 மாதங்களாக சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுடனும் தமிழ்நாடு மின்சார வாரியம் பேச்சு நடத்தி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் நடைபெற்ற மின்சார வாரியத்தின் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்ட போது ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில், அடுத்த ஒரு மாதத்தில் அவசர அவசரமாக மின்வாரிய இயக்குனர்கள் கூட்டத்தை  கூட்டி உடன்குடி மின்திட்டத்திற்கான ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதை தமிழக அரசு மாநில மக்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் மின் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் அனைத்தும், வெளியில் தெரியாத காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கே வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மின்திட்டத்திற்கான ஒப்பந்தத்தையும் அந்த நிறுவனத்திற்கே வழங்க மின்துறை அமைச்சரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர்பதவியில் இருந்து, இப்போது தமிழக நிர்வாகத்தை கவனிக்கும் உயர் பதவிக்கு மாறியுள்ளவர் உள்ளிட்ட சில  அதிகாரிகளும் விரும்பியுள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரியிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்க முடியாத நிலை உருவாகியிருப்பதாகவும், புதிதாக ஒப்பந்தம் கோரப்பட்டால், விதிகளை வளைத்து அந்நிறுவனத்திற்கு சலுகை காட்டலாம் என்பதால் தான் ஒப்பந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டதாகவும் பொதுத்தளத்தில் எழுப்பப்படும் குற்றச்சாற்றுகளை அவ்வளவு எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அமைச்சரும், அதிகாரிகளும் சலுகை காட்டத் துடிக்கும் நிறுவனத்தினால் தான் இந்த மின்திட்டப் பணிகள் தொடக்கத்தில் தடைபட்டன. அதற்குப் பிறகும் அந்த நிறுவனத்திற்கே ஒப்பந்தம் வழங்க  ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் என்றால் அதற்கான காரணங்களை யூகிப்பது கடினமான ஒன்றல்ல.
2007 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட  இந்த மின் திட்டத்தின் பணிகள் திட்டமிட்டபடி நடந்திருந்தால் 2011 அல்லது 2012 ஆம் ஆண்டில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கும். ஆனால், அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த திட்டம் முழுவட்டம் அடித்து தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வந்திருக்கிறது. இதற்காக இதுவரை ரூ.80 கோடி மக்கள் பணம் வீணாக செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதன்பின் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்தம் வழங்கப்படுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம். திட்டப்பணிகளை முடிக்க மேலும் 5 ஆண்டுகள் ஆகலாம் என்பதால், 2023 ஆம் ஆண்டுக்கு முன்பாக உடன்குடி மின் திட்டம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வாய்ப்பு இல்லை. இடைப்பட்ட காலத்தில் இத்திட்டச்செலவு ரூ.8000 கோடியிலிருந்து 2 மடங்காக உயர்ந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற மின்திட்டங்களை நிறைவேற்றாமல் தடுப்பதன் மூலம் வெளிச்சந்தையில்  ஒரு யூனிட் ரூ.15.10 என்ற விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வதன் மூலம் தாங்கள் பெருமளவில் பயனடையலாம் என்பது தான் ஆட்சியாளர்களின் திட்டம். இதனால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பையெல்லாம் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் அப்பாவி நுகர்வோர்கள் தாங்கிக் கொள்வார்கள் என்பதே அவர்களின் எண்ணம். அடிப்படைத் தேவையான மின்சாரத்தை தங்களின் பணம் ஈட்டும் நோக்கத்திற்கான கருவியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்வதை மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். எனவே, உடன்குடி மின்திட்டத்தின் ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்யும் திட்டத்தை கைவிட்டு, தகுதியான நிறுவனத்திற்கு உடனடியாக ஒப்பந்தம் வழங்கி கட்டுமானப் பணிகளைத் தொடங்க தமிழக அரசும், மின்சார வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீனவர்கள் மீது கொடூரத் தாக்குதல்- இலங்கையை எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: மீனவர்கள் மீது மீண்டும் கொடூரத் தாக்குதல் நடத்தியிருப்பதற்கு, இலங்கையை எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது என்று எச்சரித்த அவர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட ஆயத்தமான வேளையில் ஒரு படகில் ஏறிய சிங்களப்படையினர் அதிலிருந்த 5 மீனவர்களை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். தமிழக மீனவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்துள்ளனர். சிங்களக் கடற்படையினரின் கொலைவெறித் தாக்குதலில் 5 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். 3 மீனவர்கள் முதல் உதவிக்குப் பிறகு வீடு திரும்பி விட்ட நிலையில், கனி, கலைஞானம் ஆகிய மீனவர்கள் கொடிய காயங்களுடன் இராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர். சிங்களக் கடற்படையினரின் இந்த கொடிய தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவியது. ஆனால், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் இந்த நம்பிக்கையை பொய்யாக்கி வருகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன் சிங்களப்படை நடத்திய தாக்குதலில் தமிழக மீனவர்களின் படகு சேதமடைந்தது. அதனால் ஏற்பட்ட பதற்றம் விலகும் முன் மீனவர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளாகவே மீன் பிடித்தாலும், சிங்களப்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். ஒருவேளை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடித்தாலும் அவர்களை எச்சரித்து திருப்பி அனுப்ப வேண்டியது தான் இலங்கைப்படையின் பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து தமிழக மீனவர்களை தாக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவதையும், இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்துவதையும் ஏற்க முடியாது. இது 22.01.2013 அன்று தில்லியில் நடந்த இந்திய & இலங்கை கூட்டு ஆணையத்தின் எட்டாவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மீறிய செயல் ஆகும். கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,‘‘ சர்வதேச எல்லைப்பகுதியில் மீன் பிடிப்பது தொடர்பான சம்பவங்களை குறைத்துக் கொள்ள இரு நாடுகளும் உறுதிபூண்டிருக்கின்றன. எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது எக் காலத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது. அனைத்து மீனவர்களையும் மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இலங்கையின் அழைப்பை ஏற்று அங்குள்ள யாழ்ப்பாணத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கிருந்து சில கி.மீ தொலைவில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை இந்தியா மீதான தாக்குதலாகவே பார்க்க வேண்டும்.. இதற்காக இந்தியாவுக்கான இலங்கை தூதரை இந்திய அரசு அழைத்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, இனியும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இலங்கை தூதர் மூலம் அந்நாட்டு அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும்.

வேளாண் அதிகாரி தற்கொலை: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை:agri-krishnamurthy நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்ட வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கு வேளாண் துறை அதிகாரிகளும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கொடுத்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. வேளாண் துறையில் தாற்காலிக ஓட்டுநர்கள் பணி நியமனத்துக்கு, மேலிடத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கடும் நெருக்கடியே காரணம் என்று வேளாண் அலுவலர்கள் கூறினர். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அடுத்து, வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை காவல் கண்காணிப்பாளர் அன்பு தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையா என்பவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். நேற்று இவரை சென்னையில் வைத்து விசாரணை நடத்திய போலீஸார்,. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில முக்கியக் குறிப்புகளைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்தனர். ப்படுகிறது.

71 வயது கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: சிசிடிவி கேமரா உதவியில் 4 பேரைப் பிடித்து விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 71 வயது மூதாட்டியான கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கான்வெண்ட் பள்ளிக்கு வெளியேயும் உள்ளேயும் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளின் உருவங்களை போலீஸார் கண்டறிந்தனர். அவர்களை அடையாளும் காணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கருதப் படும் 4 பேர் காவல் துரையினரால் பிடிக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட போலீசார், குற்றவாளிகள் குறித்த நம்பத்தகுந்த தகவல்களைத் தருவோருக்கு ரூபாய் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். crime முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தின் கங்க்னாபூர் பகுதியில் கான்வென்ட் பள்ளியுடன் கூடிய ஆசிரமத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 12.30 மணியளவில் ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல், புகுந்தது. அங்கிருந்த ஓர் ஆசிரியையை கட்டிப் போட்டு உள்ளே சென்று, தூங்கிக் கொண்டிருந்த 71 வயது மதிக்கத்தக்க கன்னியாஸ்திரியை அந்த ஆசிரியையின் கண் முன்பே தாக்கியது. அவரது கழுத்தை நெரித்து அவரை கொடூரமான நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது. அந்த கன்னியாஸ்திரி மயங்கிய நிலையில் கிடந்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ. 10 லட்சத்தைக் கொள்ளயடித்து ஓடிவிட்டது. பின்னர் அந்த கன்னியாஸ்திரி நாடியா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். கோல்கத்தாவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த இடம். காலையில் கான்வென்டுக்கு வந்த மற்றவர்கள் மூலம் இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, இது குறித்து சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கூறினார்.

குறைகளைக் கேட்டறிந்த நரேந்திர மோடி: யாழ். தமிழர்கள் நெகிழ்ச்சி

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நரேந்திரமோடி, யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அப்போது, ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கிருந்த தமிழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் குறைகளை மோடியிடம் கூறினர். இதனை மோடி கவனமாகக் கேட்டதுடன், உங்கள் கோரிக்கைகள் நிறைவேற ஏற்பாடு செய்யப்படும் என்றார். மேலும் அங்கிருந்த குழந்தைகளின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளிய மோடி, அவர்களிடம் கைகுலுக்கினார். யாழ்ப்பாணம் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த தமிழர்களிடம் சகஜமாக பேசியதோடு, குழந்தைகளையும் அரவணைத்தது தமிழர்களை நெகிழ வைத்தது. https://www.youtube.com/watch?v=usPDK8tvB8s [su_quote]ஒரு சிறுமியிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் தான் வளர்ந்ததும் ஒரு ஆசிரியையாக விரும்புவதாகக் கூறினாள் . இது எனது கண்களில் நீரை வரவழைக்கிறது. அவள் வருங்காலத்தில் ஆசிரியை ஆகி, இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சேவை செய்ய வேண்டும்…[/su_quote] modi-lanka1 யாழ்ப்பாணம் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்ப் பாரம்பரியப்படி அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு  யாழ்ப்பாணம்: இலங்கையில் அனைத்து மக்களும் சம வாய்ப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி கூறினார். கொழும்புவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று யாழ்ப்பாணம் வந்தார். அப்போது, முன்னர் சிங்களர்களால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாணம் நூலகத்துக்கு வந்து பார்வையிட்ட மோடி, யாழ். நூலகம் மீண்டும் சிறப்பைப் பெற தேவையான நூல்கள் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். முன்னதாக, காணாமல் போன தமிழர்களின் உறவினர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தினர்.  

முன்னதாக, இலங்கையில் அனுராதபுரத்தில், அசோக மன்னரின் மகளால் நடப்பட்ட போதி மரத்தின் அடியில் மோடி பிரார்த்தனை செய்தார். புத்தர் ஞானமடைந்த போதி மர கிளையை அசோக சக்கரவர்த்தியின் மகள் சங்கமித்திரை 2500 ஆண்டுகளுக்கு முன்பு அனுராதபுரத்தில் நட்டார். இந்தப் புகழ்பெற்ற மகா போதி மரத்தடிக்கு பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் சென்றனர்.அங்கு இருவரும் வழிபாடுகளில் ஈடுபட்டனர். காவி வண்ண ஆடையை மரத்தின் மீது போர்த்தினர். அப்போது ஏராளமான புத்த பிட்சுகள் மோடியை வரவேற்றனர். பின்னர் கி.பி.140-ம் ஆண்டில் ருவான் வெலிசேயா என்ற இடத்தில் நிறுவப்பட்ட ஸ்தூபியையும் அவர் பார்வையிட்டார்.  

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் அனுராதபுரம் போகிறேன். அத்துடன் தலைமன்னார், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்கிறேன். இன்றைய நாள் எனக்கு மிக சிறப்பான நாள்’ என்று கூறினார். அனுராதபுரத்திலிருந்து தலைமன்னார் சென்ற மோடி, அங்கே மதவாச்சி-தலைமன்னார் இடையிலான புதிய ரயில் பாதையைத் துவக்கிவைத்தார். இந்த ரயில் பாதையை இந்தியன் ரயில்வே அமைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீனவர் பிரச்சினைகள், அரசியல் தீர்வு குறித்த ஆகியவற்றை விளக்கி, பிரதமர் மோடியிடம் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலத்துக்குப் பின்னர் இந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர், யாழ்ப்பாணம் வந்த மோடிக்கு, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கே யாழ். பொது நூலகம் அருகே அமையவுள்ள கலாச்சார நிலைய தலைமையகத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. modi-house-pongal யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் பொங்கப்பட்ட பொங்கல் பானையில் என்னவெல்லாம் போட்டீர்கள் என்று கேட்டபடி…. பின்னர் இந்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகட்டும் திட்டத்தை பார்வையிட்டு, வீடிழந்தவர்கள், ஏழைகளுக்கு வீடுகளை வழங்கினார். இந்திய அரசின் சார்பில் யாழ்பாணத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 27,000 வீடுகளை வழங்கிய மோடி, “இது மிகவும் அருமையான திட்டம். இது போன்ற திட்டம் குஜராத்தில் 2001ம் ஆண்டு பூகம்பத்திற்கு பிறகு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 27,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 27,000 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சி. modi-girl-wish வீடு வழங்கும் திட்டத்தில், வீட்டினை ஒப்படைத்தபோது, பயனாளியின் சிறுமி தான் ஆசிரியை ஆக விருப்பம் தெரிவித்ததைக் கேட்டு மகிழும் மோடி…modi-srilanka வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில், பயனாளி ஒருவரின் குழந்தையின் கன்னத்தை கிள்ளி மகிழும் மோடி! இங்கே கட்டிக் கொடுக்கப்பட்ட வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள் தான் வளர்ந்ததும் ஒரு ஆசிரியையாக விரும்புவதாகக் கூறினாள் . இது எனது கண்களில் நீரை வரவழைக்கிறது. அவள் வருங்காலத்தில் ஆசிரியை ஆகி, இந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் சேவை செய்ய வேண்டும்… என்றார் மோடி. முன்னதாக, தனது பேச்சின் துவக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று கூறி பேச்சைத் துவக்கினார். அது அங்கிருந்த தமிழர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே பேசிய மோடி, இன்னும் அதிக அளவில் இந்திய அரசின் சார்பில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்திய அரசின் உறுதியையும் எடுத்துரைத்தார்.

கொழும்பு திரும்பும் முன்னர், தமிழர் பிரதிநிதிகள், முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள், இந்திய வம்சாவளி தலைவர்கள் என பலரை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக்கேட்டறிந்தார். இது குறித்து தங்களது மகிழ்ச்சியை பிரேமசந்திரன் வெளிப்படுத்தினார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தம்முடன் பேசிய மோடி, தங்களின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பொறுமையாகக் கேட்டதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தம்மிடம் கூறியாதாகத் தெரிவித்தார். மோடியின் பயணம் தங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பீடி தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பென்சன்: சிஐடியு வலியுறுத்தல்

பீடி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும் என சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருநெல்வேலி அடுத்த முக்கூட லில் சிஐடியு பீடித்தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது. பாப்பாக்குடி ஒன் றிய தலைவர் சூசை அருள்சேவியர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுசெயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆயிரம் பீடிக்கு சுற்றுக் கூலி ரூ.300 வழங்க வேண் டும். பஞ்சப்படி புள்ளி 1க்கு 10பைசா வழங்க வேண்டும். தரமான பீடி இலை வழங்க வேண்டும். போடு வண்டல் எடுப்பதை நிறுத்த வேண் டும். ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்க வேண்டும். அனைத்து வங்கிகளிலும் கல்வி கடன் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச்24ல் முக்கூடலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி,தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாய பணிகள் பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் தாக்கம். கடுமையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் திடீரென மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன்,  பாளையங்கோட்டைபேட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் பெய்த பலத்த மழையால் மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்தது. திருநெல்வேலி சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை, நாற்று நடும்பணி மும்முரமாக நடந்து வருகிறது. திடீர் மழையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், தட்டார்மடம், உடன்குடி, குலசேகரன்பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர், ஏரல், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்தது.

ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் !

ராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும்,  லக்கினத்தில் அமர்ந்தால் 100  சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கனத்தில் அமர்ந்தால், கேது களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார் .  கேது லக்கினத்தில் அமர்ந்தால், ராகு களத்திர பாவம் எனும் ஏழாம் வீட்டில் அமருவார்.
இந்த  அமைப்பில் இரு  கிரகங்களும் அமர்ந்தால் லக்கினம் மற்றும் களத்திரம் பாவம் இருவீடுகளும் 100  சதவிகித நன்மையை பெரும் ராசிகள் பின்வருபவன :
ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது இரு கிரகங்களும் லக்கினம் முறையே களத்திற வீடுகளில் அமரும், இப்படி அமரும் ராகு கேது லக்கினம் மற்றும் களத்திரம் என இரு பாவங்களுக்கும் அந்த வீட்டுக்கதிபதியின் பலனை தாம் எடுத்துக்கொண்டு 100  சதவிகித நன்மையை மட்டுமே செயல்படுத்துவார்கள்.
   ரிஷப லக்கினம் , கடக லக்கினம் சிம்ம லக்கினம் , துலா லக்கினம் , கும்ப லக்கினம் , ஆகிய இலக்கின அமைப்பை பெற்றவர்களுக்கு ராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் மிகவும் நன்மையே, இவர்களுக்கு எவ்வித தோஷமும்  ஏற்ப்பட மற்றும் செயல் பட வாய்ப்பு 100  சதவிகிதம் இல்லவே இல்லை . இது இவர்களது முன்னேற்றத்தை பார்த்தாலே தெரிந்து விடும் .
வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696   

https://jothidadeepam.blogspot.in/2012/02/blog-post_4202.html

ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன?

ஸ்வாமிக்கு அர்த்தம் என்ன? ஒரு பழைய கல்கி (அருள்வாக்கு)

eb58c35a59517740499851087228cc56 - 2026

வைகுண்டத்தில் ஸ்வாமி இருக்கிறார், ஹ்ருதயத்தில் இருக்கிறார், கோயிலிலிருக்கிறார் – என்றெல்லாம் நமது பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். கோயிலில் இருக்கிறார் என்பதால் அங்கு நமஸ்காரம் செய்கிறோம். ஹ்ருதயத்தில் இருக்கிறார் என்பதால், சிவபூஜை செய்கிறவர்கள் முதலில் தங்கள் ஹ்ருதயத்தில் ஈச்வரனுக்கு உபசாரம் செய்துவிட்டு, அங்கிருந்து அவரை மூர்த்தியில் ஆவாஹனம் செய்து, பிறகு மூர்த்தி பூஜை செய்வது வழக்கம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்பதுபோல் கைலாஸத்தில் இருக்கிறார் என்றும், பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். வைகுண்டம் என்பது பரமபதம். தத் விஷ்ணோ; பரமம் பதம் என்று, வேதம் சொல்லியிருக்கிறது. யாராவது காலமாகி விட்டால் ‘பரமபதத்திற்கு ஏறிவிட்டார்’ என்று வைஷ்ணவர்கள் சொல்வார்கள். அதற்கு வைகுண்டத்துக்கு எழுந்தருளி விட்டார் என்று அர்த்தம். வைகுண்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் ஸ்வாமியைப் ‘புருஷோத்தமன்’ என்று சொல்வதுண்டு. ‘புருஷோத்தமன்’ என்ற வார்த்தைக்குப் ‘பெரும் ஆள்’ என்று அர்த்தம். ஆகையால் ‘பெருமாள்’ என்கிறார்கள். புருஷோத்தமன் என்ற சொல்லில் ‘உத்’ என்பதற்குப் ‘பெரியவர்’ என்பது அர்த்தம். ‘உத்தமர்’ என்றால் ‘மிகப் பெரியவர்’ என்பது பொருள்; புருஷ உத்தமன் அல்லது உத்தமபுருஷன் பெருமாள். வைஷ்ணவர்கள்தான் ஸ்வாமியைப் பெருமாள் என்கிறார்கள். மற்றவர்கள் ஸ்வாமி என்றே சொல்லுகிறார்கள்; ஸ்வாமி என்ற வார்த்தையில் ‘ஸ்வம்’ என்பதற்கு ‘ஸொத்து’ என்பது அர்த்தம், உடைமை என்று இலக்கணமாகச் சொல்லலாம். ஸ்வம் உடையவர் ஸ்வாமி. அதாவது ஸொத்தை உடையவர். ஸொத்து எது? நாம்தான். ‘என் ஸ்வாமி’ என்றால், ‘என்னை ஸொத்தாக உடையவர்’ என்று அர்த்தம். – ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.+சிதம்பரத்து ஆட்டக்காரன்!

“கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்” கல்கியில் வந்த அருள்வாக்கு.10482143_599228513527816_46027082804070919_n

eb58c35a59517740499851087228cc56 - 2026

நிஜமாக இல்லாததை ஒன்று, கனா என்று சொல்வோம்; அல்லது விளையாட்டு என்போம்.
எதுவோ ஒன்று நிஜமாக நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்கிறோம். அது ஏமாற்றிவிட்டு ஓடிப்போய் விடுகிறது. ‘எல்லாம் கனவாப் போச்சு’ என்கிறோம். அந்தக் கனவான பொய் மாயமாகவே ஜகத்தைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன்.
விளையாட்டு என்பது நிஜமில்லாததுதான். ஏதோ சின்ன சோப்பை, பொம்மையை பெரிய அண்டான் குண்டான் மாதிரி வேஷம் கொடுத்து வைத்து, பாலப்பிராயத்துக் குழந்தைகள் அம்மா – அப்பா, தாத்தா – பாட்டி என்று தங்களுக்கு வேஷம் கொடுத்துக் கொண்டு பண்ணுவதுதான் விளையாட்டு. பெரியவர்கள் ‘ஸ்போர்ட்ஸ்’ என்று பண்ணும் விளையாட்டுகளும் வாழ்க்கையின் நிஜமான ப்ரச்னைகளுக்கு ஸம்பந்தப்படாமல், ஏதோ ஒரு பந்தை ஏதோ ஒரு goal-க்கு அடிக்க வேண்டும் என்று, காரணம் சொல்ல முடியாததான, வாழ்க்கைக்கு அவசியம் என்று சொல்ல முடியாததான காரியங்களாக இருக்கிறவை தானே? ‘எதற்காக மண்டையை உடைத்துக் கொண்டு ‘செஸ்’ காய்களைத் தள்ள வேண்டும்?’ என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
விளையாட்டுக்குச் சொன்னேன்: நிஜம்னு நினைச்சுட்டியா?” என்று கேட்கிறோமே, அங்கே நன்றாகவே தெரிகிற தோல்வியோ, விளையாட்டு என்கிறது நிஜமில்லை என்று! ‘விளையாட்டே வினையாச்சு’ என்றும் சொல்கிறோம். வினைதான் நிஜமாகவே நடப்பது. அப்படியானால், விளையாட்டு நிஜமில்லை என்றும், எதனாலோ அப்படிப்பட்டதுகூட நிஜமாகிவிட்டது என்றும்தானே அர்த்தமாகிறது?
‘மாயக்கனா’ என்கிறாற் போலவே ‘மாய விளையாட்டு’ என்று சொல்கிறதையும் கவனிக்க வேண்டும்.
இரண்டும் ஒன்றுதான் என்று ஆகிவிட்ட தோல்லியோ?
அதிலே கனாவைக் காட்டுகிறான் ஸ்ரீரங்கத்துத் தூக்கக்காரன். விளையாட்டைக் காட்டுகிறான் சிதம்பரத்து ஆட்டக்காரன்.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்