கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவுக்கு அடுத்த 3 மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் இன்று தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மன்றக் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மீனாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமம் போட்டுக் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீரை ஊற்றி நாமத்தை அழிக்க அதிமுக உறுப்பினர்கள் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். அன்னம்மாள் என்ற அதிமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவைத் தாக்கினாராம். இதில் மீனா லோகுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அதிமுக கவுன்சிலர்களின் தாக்குதலைக் கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதனிடையே, அடுத்த 3 மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள மீனா லோகுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்மோகனை விசாரணைக்கு அழைத்தது மிக மோசம்: ராம் ஜேத்மலானி
புதுதில்லி: நிலக்கரி ஊழல் வழக்கில், அப்போது தொடர்பான அமைச்சகப் பொறுப்பில் இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விசாரணைக்கு சிபிஐ அழைத்தது மிக மோசமான ஒன்று என்று கருத்து தெரிவித்துள்ளார் ராம் ஜேத்மலானி. பாஜக முன்னாள் தலைவரான ராம் ஜேத்மலானி, இது குறித்து கருத்து தெரிவித்த போது, ஒரு முன்னாள் பிரதமரை இவ்வாறு விசாரணைக்கு வருமாறு அழைப்பது மிக மோசமான ஒன்று. யாருமே இப்படி ஒரு முன்னாள் பிரதமர் அழைக்கப்படுவதை விரும்பமாட்டார்கள். அவர் தனது குற்றமின்மையை நிரூபிப்பார் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராம் ஜேத்மலானி.
சுனந்தா கொலை வழக்கு: மெஹ்ர் தராரை விசாரிக்க முடிவு
புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரீன் மனைவி சுனந்த புஷ்கர் மரணம் தொடர்பாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் மெஹர் தராரும் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார் என்று தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, மெஹர் தராரையும் விசாரிக்கலாம் என்று கூறப்படுகிறது. சுனந்தா மர்மமான முறையில் மரணம் அடைவதற்கு முன்பாக, மெஹர் குறித்து சசி தரூரிடம் சண்டையிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு: இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னை: சென்னையில் தனியார் டிவி அலுவலகம் மீதான குண்டுவீச்சு தொடர்பாக கண்டனத்தை தெரிவித்துள்ள இடதுசாரிக் கட்சிகள், வரும் மார்ச் 18ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்றும், கருத்துரிமைக்கு எதிரான செயலைக் கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை: பெங்களூருவில் பரிதாபம்
பெங்களூரு: 3 மகள் ஒரு மகன் உள்பட பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரபாவி எம்.பி.எம். லே அவுட் பகுதியில் வசித்தவர் தொலைபேசி ஊழியரான கங்கா ஹனுமய்யா (57) . இவரது மனைவி ஜெயலக்ஷ்மா (54 ). இத்தம்பதிக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன். மூத்த மகள் ஹேமலதா (30) பொறியாளராகவும், இரண்டாவது மகள் விமலா (28) ரயில்வேயிலும் பணி புரிந்து வருகின்றனர். மகன் யாதிஷ் (26) வேலை தேடிக் கொண்டிருக்கிறார். கடைசி மகள் நேத்ராவதி (24) பொறியியல் கல்லூரி மாணவி. இந்நிலையில், இன்று அவர்களது வீட்டில் ஆள் நடமாட்டம் இன்றி அமைதியாக இருந்ததை அருகில் இருந்தவர்கள் கவனித்துள்ளனர். வீட்டில் திறந்திருந்த ஜன்னல் வழியே பார்த்த போது, ஒருவர் தூக்கில் தொங்குவது தெரிந்தது. உடனே போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவைத் திறந்து பார்த்த போது, வீட்டில் உள்ள அனைவருமே தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நஜ்மா, ஹேம மாலினி பாஜக உயர் பொறுப்பில் இருந்து நீக்கம்
புது தில்லி பாரதிய ஜனதாக் கட்சியின் உயர் பொறுப்பான தேசிய செயற்குழுவில் இருந்து நஜ்மா ஹெப்துல்லா, ஹேமமாலினி ஆகியோர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர். மேலும், ஷெய்னாவும் நீக்கப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிர பாஜக பொருளாளராகவும், செய்தித் தொடர்பாளராகவும் இருப்பவர். இவரும் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விசாரணை இன்றி என்னை தூக்கில் போடலாம்: எம்.பி.க்களுக்கு கட்ஜூ கிண்டல்
புது தில்லி: மாநிலங்களவையில் எனக்கு எதிராக தீர்மானம் நிறவேற்றினால் மட்டும் போதாது; விசாரணையே இன்றி என்னை தூக்கில் போட எம்.பி.க்கள் முன்வரலாம் என்று மார்கண்டேய கட்ஜூ கேலியாகக் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜூ தனது வலைப்பக்கத்தில் காந்தி பிரிட்டிஷ் ஏஜென்ட் என்றும், பசுவதையும் காந்தியும் என்பது குறித்தும் கட்டுரைகளை எழுதியிருந்தார். கட்ஜுவின் இந்தக் கருத்து, மாநிலங்களவையில் பெரும் அமளியைக் கிளப்பியது. கட்ஜூவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனர். இதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்துள்ள கட்ஜு, விசாரணை இன்றி தன்னை தூக்கில் போடலாம் என்று கூறினார். “இது அற்புதமான ஒரு செய்தி. மாநிலங்களவை எனக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது! சரிதான்… ஆனால் அது மட்டும் போதாது. நான் போலியாக தேசத்தந்தை என்று அழைக்கப்படும் ஒருவரைப் பற்றியும், ஜப்பானிய பாசிச சக்திகளின் ஏஜெண்ட் பற்றியும் கருத்து தெரிவித்ததற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வெறூம் கண்டனம் தண்டனை ஆகாது. நான் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றவன் என்பதால், எனது சலுகைகளைப் பறிக்க வேண்டும் என்று சிலர் கூறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு விதிகளைத் திருத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டி இருக்கும். நான் வேண்டுமானால், எளிமையாக ஒன்றைச் செய்யலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு யோசனை கூறுகிறேன். நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன், என்னைக் கைது செய்து, விசாரணையே இன்றி தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள்” என்று கேலியாகக் கூறியுள்ளார்.
டி.வி. அலுவலகத்தில் குண்டு வீசியவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்: ராம.கோபாலன்
சென்னை: சென்னையில் தனியார் செய்தி டிவி., சேனல் அலுவலகத்தின் வாயிலில் குண்டுகளை வீசிச் சென்ற நபர்களை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது இன்று சில விஷமிகள் வெடிகுண்டு வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு யார் காரணமாக இருந்தாலும், அந்தக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மத்திய புலானாய்வு துறை முழுமையான விசாரணைக்கு உத்திரவிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இத்தகைய சமூக விரோத செயலுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசையும், காவல்துறையையும் இந்து முன்னணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இதற்கு முன்பு தினத்தந்தி அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய, தினமலர் அலுவலகத்திற்கும் மிரட்டல் விடுத்த குற்றவாளிகளையும் காவல்துறை கண்டுபிடித்துத் தண்டிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்க எல்லா வழக்குகளிலும் குற்றவாளிகள் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாமம் போட்டு மன்றக் கூட்டத்துக்கு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்
கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மன்றக் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மீனாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமம் போட்டுக் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீரை ஊற்றி நாமத்தை அழிக்க அதிமுக உறுப்பினர்கள் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். அன்னம்மாள் என்ற அதிமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவைத் தாக்கினாராம். இதில் மீனா லோகுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அடுத்து, அதிமுக கவுன்சிலர்களின் தாக்குதலைக் கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
காந்தி தங்கிய இடத்துக்கு மோடி பார்வையிட வரவேண்டும்: யாழ். தமிழர்கள் விருப்பம்
கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப் பயணம் செல்லவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, யாழ்ப்பாணத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது, மோடி, 1927ல் மகாத்மா காந்தி வடக்கு இலங்கையின் தமிழ் பேசும் மக்களிடம் வந்து தங்கிய இடத்துக்கு பார்வையிட வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். புகழ்பெற்ற மிகவும் பழைமையான நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் கோயில் சாலையில் 199ஆம் எண் இல்லம் இந்த வரலாற்றுச் சிறப்பைப் பெற்ற ஒன்று. இந்த இல்லத்தை மிகவும் சிறப்பாக பராமரித்து வரும் பொறியாளர் சூரியசேகரம், இந்த இல்லத்துக்கு குறைந்தது 3 நிமிடங்களாவது வந்து தனது கையெழுத்தை இங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் மோடி இட்டால் அது மிகப் பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமையும் என்று கூறியுள்ளார். இந்த இடம் பழங்கால யாழ். மற்றும் தமிழ்நாட்டு வரலாற்றுப் பிணைப்பை எடுத்துக் காட்டும் ஒன்றாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். 1927 ஆம் ஆண்டு நவம்பர் 27ல் மகாத்மா காந்தி அவரது மனைவி கஸ்தூர்பா காந்தியுடன் இந்த இடத்துக்கு வந்தார். அவரது செயலாளர்கள் மகாதேவ் தேசாய், ப்யாரிலால், ராஜாஜி, அவரது மகள் லக்ஷ்மி என அப்போது இங்கே வந்தனர். அவர்களை யாழ். இளைஞர் காங்கிரஸ் நிறுவனர் கண்டி பேரின்பநாயகம் வரவேற்றார். அப்போது இந்தியா இலங்கை இருநாடுகளிலும் முழு சுயராஜ்யம் வேண்டி இந்தப் போராட்டங்கள் நடந்தன. அங்கே அரசியல் தவிர்த்து, சமூக சீர்திருத்த விஷயங்களை அவர் பேசினார். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, தொண்டைமன்னார், பாய்ன்ட் பெற்றோ, மனிப்பே, சாவகச்சேரி ஆகிய இடங்களில் அவர் உரையாற்றினார்.

