Home Blog Page 6240

ரஞ்சி கோப்பையை தக்க வைத்தது கர்நாடகம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. கர்நாடக அணி முதலில் 762 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. பின்னர் தமிழ்நாடு அணி தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய தமிழக அணி, 411 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனால், கர்நாடக அணி ஒரு இன்னிங்ஸ், 217 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுகோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது. 328 ரன் எடுத்த கருண் நாயர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

மொரிஷீயஸில் கங்கா தலாவ் புனித இடத்தில் மோடி வழிபாடு

modi-mauritius போர்ட் லூயிஸ்: மொரீஷியஸ் நாட்டில் ஹிந்துக்களின் புனித இடமாகக் கருதப் படும் கங்கா தலாவ் தலத்தில் மோடி வழிபாடு நடத்தினார். அங்கிருக்கும் சிவன் கோயிலில் தனது பிரார்த்தனையைச் செய்தார் மோடி. முன்னதாக, மொரீஷியஸ் வளர்ச்சிக்கு துணை நிற்போம் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். மேலும் மொரீஷியஸ் , இந்தியாவின் உறவு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தியாவிலும், மொரீஷியஸிலும் சபாநாயகரை மேடம் என்று அழைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். ஜனநாயகத்தின் மாண்பைக் காப்பதில் இரு நாடுகளுக்கும் ஒற்றுமை உண்டு. மொரீஷியஸ் நாட்டு வளர்ச்சியில் இந்தியா எப்போதும் துணையாக இருக்கும் என்று பிரதமர் பேசினார்.

டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்: சீமான் கண்டனம்

2c5c5ae8f6c2cfe812621fa73bad9be3 - 2026புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக வாயிலில் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது…
மகளிர் தினத்தன்று பெண்கள் தாலி அணிவது குறித்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப புதிய தலைமுறை தொலைக்காட்சி முடிவெடுத்திருந்தது. இதையொட்டி முதலில் மிரட்டலும் அடுத்தடுத்து வன்முறையுமாக அந்த தொலைக்காட்சி நிறுவனம் நாளுக்கு நாள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைப் பார்க்கையில் நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என எண்ணத் தோன்றுகிறது.
ஒரு கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டால் மாற்றுக்கருத்து சொல்வதுதான் நாகரிக நெறி. அதைச் செய்ய திராணியற்று ஊடக நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியும், பத்திரிகையாளர்களை அடித்து மிரட்டியும் ஆவேசம் காட்டியிருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
சட்டம் ஒழுங்குக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு இன்று புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள்.
அந்தத் தொலைக்காட்சி நிகழ்வின் மீது வெறுப்புற்று இப்படிச் செய்பவர்கள் தாங்கள் செய்வது எத்தகைய அயோக்கியத்தனம் என்பதை உணர வேண்டாமா?
இந்த வெறிச்செயலுக்குப் பதிலடியாக இத்தகைய குண்டுவீச்சு கொடூரங்கள் அவர்களின் அலுவலகங்கள் மீது நிகழ்த்தப்பட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?
தாங்கள் நியாயம் என நினைப்பவை மட்டுமே ஊடகத்தில் வர வேண்டும் என நினைப்பது எத்தகைய கொடுமையான சர்வாதிகாரம்?
தாலி உள்ளிட்ட சம்பிரதாயங்களில் தனிப்பட்ட உரிமையைத் தடுத்து இந்துத்துவம் என்கிற பெயரில் கலாசாரக் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள், பாகிஸ்தானின் நடவடிக்கைகளை மதவாதம் எனச் சொல்வது எத்தகைய நகைப்புக்குரியது? கருத்தை கருத்தால் வெல்லாமல் ஆயுதங்களைத் தூக்கும் இத்தகைய அரக்கர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மிரட்டல் உருட்டலால் ஊடகங்களைப் பணியவைக்கப் பார்க்கும் இந்த மடத்தன நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. – என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்கா 146 ரன்களில் அபார வெற்றி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பி பிரிவில் இன்று நடைபெற்ற 36வது லீக் சுற்றுப் போட்டியில், யு ஏஇ அணியை தென்னாப்பிரிக்க அணி 146 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய யு ஏ இ அணி, 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 195 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 146 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணியில் டிவில்லியர்ஸ் 1 ரன்னில் சதத்தை கோட்டை விட்டார்.

‘வாலு’ படத்துக்கு ‘யு’: வரிவிலக்கும் கிடைத்ததில் சிம்பு மகிழ்ச்சி

vaalu-simbu சென்னை: பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட சிம்புவின் வாலு படம், இந்த மாத இறுதியில் – 27 ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு சென்சாரில் யு சர்ட்டிபிகேட் கிடைத்ததில், சிம்புவுக்கு பெரும் மகிழ்ச்சி. அதிலும், வரிச்சலுகையும் பெற்றதில், இரட்டிப்பு மகிழ்ச்சியாம் சிம்புவுக்கு. டிவிட்டரில் தனது மகிழ்ச்சியை சிம்பு வெளிப்படுத்தியுள்ளார். வாலு திரைப்படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். ரசிகர்களின் அன்புக்கு சிறப்பு நன்றி என்று சிம்பு ட்விட்டரில் கூறியுள்ளார்.  

உ.பி., நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரால் வழக்குரைஞர் சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவர் தனது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போலீஸார் மீதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதி கலவர பூமியானது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வழக்கறிஞர் ரோஷன் அகமது என்றும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் பெரோஸ் நபி என்றும் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அதையடுத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் 5 கி.மீ. தொலைவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற பகுதியிலும் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கட்டடங்களை சேதப்படுத்தி தீவைத்தனர். போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அலகாபாத்-கான்பூர் நெடுஞ்சாலையில் மறியல் நடத்தி போக்குவரத்தை தடுத்தனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களுக்கும் தீவைத்தனர். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நேரில் வந்து சமாதானம் செய்தனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, நிலைமையை நேரில் கண்டறிவதாக வழக்குரைஞர்களிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்தனர். பிறகுதான் உயர் நீதிமன்றத்தில் போராட்டம் தணிந்தது.

தில்லியில் விமான டயர் வெடித்து விபத்து: 150 பயணிகள் பத்திரம்

தில்லியில் தரையிறங்கிய ஓமன் நாட்டு விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர். ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து நள்ளிரவு 1.43க்கு கிளம்பிய டபிள்யூ. ஐ. 241 என்ற அந்த விமானம், இன்று காலை 6.10க்கு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தை அதன் விமானி பாதுகாப்பாக தரையிறக்கிய போது, அதன் முன் டயர்கள் இரண்டும் திடீரென வெடித்தன. அந்த விமானம் தரையில் பாதுகாப்பாக லேண்டிங் ஆனதும் இந்த விபத்து ஏற்பட்டதால், அதில் பயணம் செய்த 150 பயணிகளும் எவ்வித ஆபத்துமின்றி தப்பினர். விமான டயர் வெடித்ததற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

நாகாலாந்து கொலைச் சம்பவம்: அறிக்கையில் கைதி குறித்து முரண்பட்ட தகவல்

GRAPHIC CONTENTnA crowd of Indian men su திமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் நாகா பழங்குடியின மக்களால் சிறைச்சாலையில் இருந்து கைதி இழுத்து வரப்பட்டு, சாலையில் வைத்து தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதி குறித்த அறிக்கையில் தரப்பட்டுள்ள முரண்பட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகாலாந்தில் உள்ள திமாபுர் சிறையில் பாலியல் பலாத்காரக் குற்றப் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷெரிப் கான் என்ற நபரை பழங்குடியின மக்கள் அடித்துக் கொன்றனர். இச்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை கேட்டுக் கொண்டதை அடுத்து, உள்துறை அமைச்சகத்துக்கு நாகாலாந்து மாநில அரசு ஓர் அறிக்கை அனுப்பி வைத்தது. அந்த அறிக்கையில், ஷெரிப் கான் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், புகார் கொடுத்த பெண்ணுடன் அவரது விருப்பத்தின் பேரிலேயே இருமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அதற்காக ரூ.5 ஆயிரம் கொடுத்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார். அந்தப் பெண் கூடுதலாகப் பணம் கேட்டு, தான் தர மறுத்ததால், பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த முரண்பட்ட தகவல், இந்தச் சம்பவத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச்16ல் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 33 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்றுக்கு மட்டும், வரும் 16ம் தேதி, பணிநியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. அன்று காலை 10:00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நல இயக்குனர் அலுவலகத்தில், கலந்தாய்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும்படி, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டவர்கள், அன்றைய தினம், உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, சிவசண்முகராஜா தெரிவித்து உள்ளார்.

 

ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பு வளையத்துக்குள் இந்திய தூதரக அதிகாரிகள்: சுஷ்மா ஸ்வராஜ்

புதுதில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நேற்று எழுப்பப் பட்ட ஒரு கேள்விக்கு சுஷ்மா ஸ்வராஜ் பதில் அளித்தார். அப்போது…. கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் உட்பட வெளிநாடுகளில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை உடனடியாக அந்தந்த நாட்டு அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பாகிஸ்தானைத் தவிர மற்ற நாடுகளில் மீண்டும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. ‘ பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அங்குள்ள உளவு அமைப்பால் ரகசியமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். ரகசியமாக பின்தொடர்வது, அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பது ஆகிய செயல்களில் அந்நாட்டு உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாகிஸ்தான் அரசின் பல்வேறு நிலைகளில் கொண்டு செல்லப்பட்டும், கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. அமெரிக்காவில் தூதரக அதிகாரி தேவயானி கோபரகடே அவமதிக்கப்பட்டது தொடர்பாக அந்நாட்டு அரசு வருத்தம் தெரிவித்தது. தேவயானி மீதான வழக்குகளை அமெரிக்கா ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று கூறிய சுஷ்மா ஸ்வரஜ், கடந்த சில ஆண்டுகளில் சால்வேனியா, ருமேனியா, அல்பேனியா, பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் அவமதிக்கப்பட சம்பவங்களை தனது பேச்சில் குறிப்பிட்டார்.