Home Blog Page 6338

இந்துக்களின் தினசரிக் கடமைகள்:

  1. தினமும் சூரியன் உதிப்பதற்கு முன் படுக்கையிலிருந்து எழ வேண்டும்.

  2. காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்தனை செய்ய வேண்டும்.

  3. நெற்றியில் இந்து சமயச் சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திருநாமம் – ஏதேனும்) அணிய வேண்டும். நீறில்லா நெற்றி பாழ் என்பதற்கேற்ப எதையும் அணிந்து கொள்ளாமல் வெறும் நெற்றியுடன் இருக்கக் கூடாது.

  4. இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவேண்டும். காலை – மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.

  5. சமய நூல்களைப் படித்தல் வேண்டும்.

  6. படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும்.

எந்த நாள்களில் குறிப்பிட்ட நல்ல செயல்களைச் செய்யலாம்?

நாள் நட்சத்திரம் பார்த்துச் செய்தால் நல்லதே நடக்கும் என்பார்கள். அந்த அந்த நட்சத்திர நாளில் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்தால் நன்மையே கிட்டும். அந்த விவரம்:   ஏர் உழ: அனுஷம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, ரோகிணி, அவிட்டம், மகம், அசுவனி, உத்திரம், உத்திராடம், உத்திராட்டாதி, ரேவதி, மூலம், ஆகிய நட்சத்திரங்கள். ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் பூமியில் ஏர் உழுவதற்கு ஆரம்பம் செய்ய உத்தமம். திங்கள் மத்யமம். ப்ரதமை, அமாவாஸ்யை, வைத்ருதி, வ்யாகாதம், வ்யதீவாதம் ஆகிய யோகங்கள், பத்ர கரணம் ஆகியவற்றைத் தவிர்த்து மற்றைய சுபதினங்களில் ஏர் உழ ஆரம்பித்தல் நலம்.   பயிர் செய்ய: விசாகம், ஹஸ்தம், ம்ருகசீர்ஷம், மகம், புனர்வசு, ரோஹிணி, அசுவனி, திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, மூலம், ரேவதி, சுவாதி, அனுஷம், பூரம் ஆகிய 18 நட்சத்திரங்களில் – செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் ரிஷபம், மீனம், மிதுனம்.   குழந்தையைத் தொட்டிலில் விடுதல்: உடல் வளர்ச்சிக்கு ஓய்வு அவசியம். குழந்தைகளுக்கு இறைவனாலேயே ஏற்படுத்தப்பட்ட உடற்பயிற்சிதான் கை-கால்களை அசைத்துக் கொள்ளுவது. அவ்வுடற்பயிற்சிக்குப் பின்னர் ஓய்வு கொள்ள கண் வளர வேண்டும். குழந்தைப் பிறந்த 10, 12, 16 மற்றும் 22-ம் நாளில் தொட்டிலில் இடுவது வழக்கம். இதற்கு ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி சுபகோள்கள் பார்த்த லக்னமும் எட்டாமிடம் சுத்தியும் ஏற்றது.   அரைஞாண் அணிவிப்பது: வெள்ளி அல்லது பொன் அரை ஞாண் – புண்ணியாஹ வசனம் செய்யும் நாளன்று அல்லது ஐந்தாவது மாதத்தில் கட்டலாம். அவ்வரைஞாணுடன் கருகமணி, செப்புக்காசு, (தொப்புள் கொடி விழுந்ததும் அதனை தாயத்து போன்றும் ஒரு சிலர் அணிவிக்கின்றனர்.) கட்டினால் தோஷங்கள் நீங்கும் எனப் பெரியவர்கள் கூறுவார்கள். சுபதிதிகள், சுபநட்சத்திரங்கள், அஷ்டம் சுத்தியுள்ள சுபலக்னத்தில் அரைஞாண் அணிவித்தால் குழந்தை ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடன் இருக்கும். எருக்கங்செடியின் நாரினால் அரைஞாண் கட்டினால் குழந்தை அடிக்கடிப் பாலைக்கக்குவது நிற்கும் என பாட்டி வைத்தியமும் கூறுகிறது.   அன்னப்ராஸனம் – அமுதூட்டல் தாயமுதால் வளரும் குழந்தைக்கு சிறந்த உணவுப் பழக்கத்தை ஏற்படுத்தச் சிறந்த நாளைத் தேர்ந்தெடுப்பது மரபு. இது 6, 8, 9 அல்லது 12-வது மாதத்தில் அஸ்வினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திராடம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் த்விதியை, திருதியை பஞ்சமி, ஸப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகளில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகர, கும்பமாகிய லக்னங்களில் செய்வது உத்தமம். இதற்கும் எட்டாமிடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னம் பலம் வாய்ந்ததாக இருந்தல் அவசியம்.   கேச கண்டமென்னும் முடியிறக்குதல்: நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ, இச்சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. 3 அல்லது 5-ம் ஆண்டு செய்வது வழக்கம். வளர்பிறை மிகவும் ஏற்றது. த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள் அஸ்வினி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள். திங்கள், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகள். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருத்தல் அவசியம். எழில் சூரியன், செவ்வாய் இருக்கக் கூடாது.   கர்ண பூஷணம் – காது குத்துதல்: ஆக்யூபங்க்சர் என்னும் முறை இன்று மிகவும் பிரபலமாகியுள்ளது. உடல் நலத்துக்கும், வளர்ச்சிக்கும், நோய் நிவாரணத்துக்கும் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. எல்லாவற்றிலும் மிகவும் உயர்ந்த நிலையை எட்டிய நமது முன்னோர்கள் இதனைக் கருத்தில் கொண்டே காது குத்தும் நிகழ்ச்சியைக் குழந்தைப் பருவத்திலேயே செய்வித்தனர். 6, 7 அல்லது 8-வது மாதத்தில் பகலில் செய்ய வேண்டும். இரண்டு திதிகள், இரண்டு நட்சத்திரங்கள் கொண்ட நாட்களைத் தவிர்க்க வேண்டும். மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் த்விதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி ஆகிய திதிகள். ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் ஏற்றது. எட்டாமிடம் சுத்தமாக இருந்தல் அவசியம்.   அட்சராப்யாஸம் – கல்வி புகட்டுதல்: கல்வியின் சிறப்பைக் கூறுமிடத்து எண்ணும் எழுத்தும் கன்ணெனத் தகும் என்பார். ஐந்தாவது வருடத்தில் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் செய்வது உத்தமம் எனப் பெரியோர்கள் கூறுவார்கள். அஸ்வினி, ரோகினி, திருவாதிரை-புனர்வசு, பூசம் உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியனவும். துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, மிதுனம், கடகம், மகரம், மீனம் ஆகியனவும் ஏற்றது. நான்கு, எட்டு ஆகிய இடங்களில் கிரகங்கள் இருக்கக் கூடாது. லக்னத்தையும் நான்காமிடத்தையும் சுபகோள்கள் பார்த்தல் உத்தமம்.   நிஸ்சயதார்த்தம் அல்லது நிச்சயதாம்பூலம்: த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி. ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி, அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியன ஏற்றாது. கேந்திரகோணங்களில் பாவக்கோள்கள் இல்லாத லக்னமாக அமைய வேண்டும்.   திருமாங்கல்யம் செய்ய: அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், மகம், உத்திராடம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி, த்விதியை, திருதியை. பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி மற்றும் திரயோதசி, ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம், இரண்டாமிடம் சுத்தமான லக்னமும் ஏற்றது.   கர்ப்பமான பெண்ணை தாய் வீட்டுக்கு அழைத்து வரல்: த்விதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, திரயோதசி, திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளிலும் பொதுவான சுப நட்சத்திரங்களில் பெண்ணுக்கு தாராபலமுள்ள நாளில், பிரயாணத்துக்கு உகந்த நாட்களில் வாரசூலை, சுக்கிரன், எதிரில் இல்லாத நாளில் அழைத்து வரல் வேண்டும். ஏழாவது அல்லது எட்டாவது மாதத்தில் அழைத்து வர வேண்டும்.   குழந்தை பெற்ற பின்னர் மாமியார் வீட்டுக்கு அனுப்புதல்: குழந்தைக்கு 3, 5, 7, 9, அல்லது 11-வது மாதத்தில் அனுப்பலாம். மூன்றாவது அல்லது ஐந்தாவது மாதம் அனுப்புதல் சிறந்தது. துவிதியை, திருதியை, சதுர்த்தி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி, திதிகள், அஸ்வினி, ரோகினி, மிருகசீர்ஷம், புனர்வசு, பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி, குழந்தை-தாய் இருவருக்கும் தாராபலமுள்ள நாட்கள் ஏற்றன. ஆனந்தாதி யோகப்படி நல்ல நாள் ஆகியவற்றை பார்க்க வேண்டும்.   கிணறு வெட்டும் திசையின் பலன்: வீடுக்கு கிழக்கு – விபத்து, தென்கிழக்கு – புத்திர நாசம், தெற்கு – மனைவிக்குப் பீடை, கெண்டம். தென்மேற்கு – எஜமானனுக்கு ஆபத்து, மேற்கு – உடல் ஆரோக்கியம், வடமேற்கு – ஆயுத பயம், வடக்கு – செல்வம் சேரும். வடகிழக்கு – சுபீட்சமான வாழ்வு. நல்ல நாட்கள்

குளிகை நேரத்தை எளிதில் தெரிந்துகொள்ள!

குளிகை

கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில் ஞாயிறு = 03.00 – 04.30 திங்கள் = 01.30 – 03.00 செவ்வாய் = 12.00 – 01.30 புதன் = 10.30 – 12.00 வியாழன் = 09.00 – 10.30 வெள்ளி = 07.30 – 09.00 சனி = 06.00 – 07.30


  கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில் ஞாயிறு = 09.00 – 10.30 திங்கள் = 07.30 – 09.00 செவ்வாய் = 06.00 – 07.30 புதன் = 03.00 – 04.30 வியாழன் = 01.30 – 03.00 வெள்ளி = 12.00 – 01.30 சனி = 10.30 – 12.00

ராகுகாலத்தை எளிதில் நினைவில் கொள்ள!

ராகு காலம்

ஒவ்வொரு கிழமையிலும் இராகு காலம் எப்போது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள ஒரு வரிப்பாட்டு ஒன்று சொல்லுவார்கள். அதனை மனதில் கொண்டு கணக்கிட்டுச் சொல்லலாம். திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா? கிழமை = இராகு காலம் ஞாயிறு = 04.30 – 06.00 திங்கள் = 7.30 – 9.00 செவ்வாய் = 03.00 – 04.30 புதன் = 12.00 – 01.30 வியாழன் = 01.30 – 03.00 வெள்ளி = 10.30 – 12.00 சனி = 09.00 – 10.30

எமகண்ட நேரத்தை எளிதில் நினைவில் கொள்ள ஒரு பாட்டு

எமகண்டம் எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு. விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில் ஞாயிறு : 12.00 – 01.30 திங்கள் : 10.30 – 12.00 செவ்வாய் : 09.00 – 10.30 புதன் : 07.30 – 09.00 வியாழன் : 06.00 – 07.30 வெள்ளி : 03.00 – 04.30 சனி : 01.30 – 03.00


  கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில் ஞாயிறு : 06.00 – 07.30 திங்கள் : 03.00 – 04.30 செவ்வாய் : 1.30 – 03.00 புதன் : 12.00 – 01.30 வியாழன் : 10.30 – 12.00 வெள்ளி : 09.00 – 10.30 சனி : 07.30 – 09.00 இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

யோகம் மற்றும் கரணங்கள்!

யோகங்கள் – 27

  1. விஷ்கம்பம் 2. ப்ரீதி 3.ஆயுமான்,
  2. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம்

  3. சுகர்மம் 8. த்ருதி 9. சூலம்

  4. கண்டம் 11. வ்ருத்தி 12. துருவம்

  5. வியாகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம்

  6. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான்

  7. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம்

  8. ஸாத்தியம் 23. சுபம் 24. சுப்ரம்

  9. பராம்யம் 26. மாஹேந்த்ரம் 27. வைத்ருதி

 


 

கரணங்கள் – 11

  1. பவம் – சிங்கம்
  2. பாலவம் – புலி

  3. கௌலவம் – பன்றி

  4. தைதிலம் – கழுகு

  5. கரம் – யானை

  6. வணிஜை – எருது

  7. பத்ரம் – கோழி

  8. சகுனி – காக்கை

  9. சதுஷ்பாதம் – நாய்

  10. நாகவம் – பாம்பு

  11. கிமுஸ்துக்னம் – புழு

 

15 திதிகளின் பெயர்கள்

திதிகள் – 15

ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

  1. ப்ரதமை
  2. த்விதியை

  3. த்ருதியை

  4. சதுர்த்தி

  5. பஞ்சமி,

  6. ஷஷ்டி

  7. ஸப்தமி

  8. அஷ்டமி

  9. நவமி

  10. தசமி

  11. ஏகாதசி

  12. துவாதசி

  13. த்ரயோதசி

  14. சதுர்த்தசி

  15. பௌர்ணமி (அல்லது) அமாவாஸ்யை

  மாதம் என்பது இரண்டு பக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும் பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது. தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.

நட்சத்திரங்களும் அவற்றின் சங்கல்ப பெயர்களும்

நட்சத்திரங்கள் – 27

 வான் வட்டப்பதையில் உள்ள நட்சத்திரங்கள் இருபத்தேழும் பன்னிரண்டு ராசிகளுக்குப் பங்கிடப்பட்டிருக்கின்றன. நட்சத்திரங்கள் 27 – ம் வருமாறு: நடைமுறைப் – பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது அஸ்வதி – அஸ்வினி பரணி -அபபரணீ கார்த்திகை – க்ருத்திகா ரோகிணி – ரோகிணீ மிருகசீர்ஷம் – ம்ருகசிரோ திருவாதிரை – ஆர்த்ரா புனர்பூசம் – புனர்வஸூ பூசம் – புஷ்யம் ஆயில்யம் – ஆஸ்லேஷா மகம் – மகா பூரம் – பூர்வபல்குனி உத்திரம் – உத்ரபல்குனி ஹஸ்தம் – ஹஸ்த சித்திரை – சித்ரா சுவாதி – ஸ்வாதீ விசாகம் – விசாகா அனுஷம் – அனுராதா கேட்டை – ஜ்யேஷ்டா மூலம் – மூலா பூராடம் – பூர்வ ஆஷாடா உத்திராடம் – உத்ர ஆஷாடா திருவோணம் – ச்ரவண அவிட்டம் – ஸ்ரவிஷ்டா சதயம் – சதபிஷக் பூரட்டாதி – பூர்வப்ரோஷ்டபதா உத்திரட்டாதி – உத்ரப்ரோஷ்டபதா ரேவதி – ரேவதி  


 

ராசிகள் – 12

  1. மேஷம் 2. ரிஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி
  2. துலாம் 8. விருச்சிகம் 9. தனுசு 10. மகரம் 11. கும்பம் 12. மீனம்

-மேலே சொன்ன நட்சத்திரங்கள் இருபத்தி ஏழும் ஒவ்வொரு ராசிக்கும் 2 1/4 நட்சத்திரம் வீதம் பங்கிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு. ஆகவே, ஒவ்வொரு ராசியிலும் ஒன்பது பாதங்கள் அல்லது 2 1/4 நட்சத்திரங்கள் உண்டு.

கிழமைகளும் அவற்றின் சங்கல்ப பெயர்களும்

கிழமைகள் – 7 ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும். சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது. ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது. நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது   ஞாயிறு – பானு வாஸரம் திங்கள் – இந்து வாஸரம் செவ்வாய் – பௌம வாஸரம் புதன் – ஸௌம்ய வாஸரம் வியாழன் – குரு வாஸரம் வெள்ளி – ப்ருகு வாஸரம் சனி – ஸ்திர வாஸரம்

அயனங்களும் ருதுக்களும் அவற்றின் வடமொழிப் பெயர்களும்

அயனங்கள்: ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸூர்யன் மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது. தைமாதம் தொடங்கி ஆனி ஈறாக 6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், கிரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.   ருதுக்கள் – 6


ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சித்திரை, வைகாசி – வஸந்த ருது ஆனி, ஆடி, – க்ரீஷ்ம ருது ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது மார்கழி, தை – ஹேமந்த ருது மாசி, பங்குனி – சிசிர ருது