Home Blog Page 6370

இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!


photoon sep29 - 2026
இப்படித்தான் தள்ளிக்கிட்டு போகணும்!
வேறு வழி?!

நாட்டின் அதிகார அமைப்பு!?


dayanidhi house - 2026
யலேய் அய்யா.. கொஞ்சம் கதவைத் திறவேம்லே…
ம்ம்ஹூம் தொறக்க முடியாது… எங்க அய்யா திட்டுவாவ…
ஏய்… எஞ்செல்லம்ல… எங்கண்ணுல்ல… சாக்லெட்லாம் வாங்கித்தாறன்… யே சொல்லுடே… ஐஸ்க்ரீம் வேணுமா? வாங்கியாறம்லே… கொஞ்சம் கதவைத் திறவேன்…
ம் ஹூம் தொறக்க முடியாது! எங்க அய்யா சொல்லிருக்காவ… நீங்க சொல்லுதீயல்லா… இந்த மாதிரில்லாம் சொல்லிக்கிட்டு பூச்சாண்டிங்க வருவாங்க… அவங்க என்ன சொன்னாலும் சரி… என்ன செஞ்சாலும் சரி… கதவ மட்டும் தொறந்துடாதன்னு சொல்லிருக்காவ…
ஏய் நீ இப்ப்டில்லாம் பேசினா உன்னை போலீசு அங்கிள் கிட்ட பிடிச்சுக் குடுத்துடுவேன்…
அது சரி! நீங்க புடிச்சிக் குடுக்கலைன்னாலும் எங்க அய்யாவும் அதத்தான் செய்வாரு! அதுனால தொறக்க மாட்டேன்!
யப்பா… நாங்கல்லாம் சிபிஐகாரவுக… அதான்ம்லே ஒங்கிட்ட கெஞ்சி கேக்கோம்… சமத்தா கதவத் தொறந்து விடுதியா?!
மாட்டேன் போ! எங்க அய்யாவும் அதத்தான் சொன்னாவோ! யலேய் சிபிஐகாரவுக வருவாக… கெஞ்சிக் கேப்பாக; ஆசை வார்த்தை சொல்லி கேப்பாக… ஆனா கதவ மட்டும் தொறந்துடாதன்னு நேத்து மட்டுமா சொன்னாவோ…. ஆறு மாசமா சொல்லிட்டிருக்காவல்லா! ஐங் நானா தொறந்துவிடுவேன்… வேற சோலிய பாருங்க.. போங்க!
யலேய் தம்பி… அர மணி நேரத்துக்கு மேல ஆயிட்டுடே! அமைச்சர் வீடா இருந்தா நாங்க வருவமா? முன்னாள் அமைச்சர் வீட்டுல ரெய்டுக்கு வந்ததுக்கே இப்டில்லாம் கெஞ்ச வேண்டிருக்குடே! எங்க நெலமைய கொஞ்சம் யோசிச்சி பாத்தியா? மீடியாகார பயலுவ வேற கேமராவ மேலயும் கீழயுமா ஆட்டிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் அலையுதாவ! ஏ… கொஞ்சம் தயவு பண்ணி கதவ திறந்து விடுப்பா… இல்லன்னா…
இல்லைன்னா…. என்ன செய்வீய?
அ…..ழு….. து….டு..வேன்…
சரி சரி… கண்ணை துடைச்சிக்கிங்க! ஒங்களைப் பாத்தா பாவமா இருக்கு! நான் தொறந்து விடுதேன்! ஆனா எங்க அய்யாட்ட என்னய மட்டும் மாட்டி விட்டுடாதீய… சரியா!!!

அடையாள பொம்மைகள்


photoon kolu - 2026
கொலுவோடு கொலுவாக
அடையாளம் தெரியாமல்!

அவ தாரமே! அட பாரமே!

AVDAR1 - 2026
குப்பைத் தொட்டி கவிழ்ந்து கிடப்பது போல்
பின்னே…
தீவிரவாதத்தை ஒழிக்க எடுத்த அவதாரமாம்
இதற்கு மேல் நோ கமெண்ட்ஸ்…

இப்படியும் பேச வரும்!?


photoon oct11 - 2026
அட… இப்படியும் பேச வேண்டி வருமோ?
…….
ஒரு காலத்தில் நாங்கள் ஒருவரை மலையாளி என்று மதிப்போடு கூறி மகிழ்ந்தோம். ஆனால், பதிலுக்கு அவர்கள் எங்களை தெலுங்கர் என்று கேவலமாக, அரசியல் நாகரிகம் இல்லாமல், மனிதப் பண்பே இல்லாமல் கொக்கரித்து வக்கிரமாக மகிழ்ந்தார்கள். நான் சவால் விடுகிறேன்…. என்னை தமிழன் இல்லை என்று நிரூபிக்கத் தயாரா? நான் இந்த மண்ணின் மைந்தன் என்று நிரூபிக்கிறேன். அந்த சும்மையார் சும்மாவாச்சும் கூறிச் சென்றால் நாங்கள் சும்மாயிருப்பதா? நேற்று கேள்வி கேட்டார்கள்… பிறப்பு இடச் சான்று அளிக்கும் அதிகாரி கையொப்பம் இட்டுத் தந்த பிறப்பிடச் சான்றெல்லாம் இருக்கிறதா என்று! இவர்கள் இப்படி எல்லாம் கேட்கிறார்கள் என்றவுடன், இந்தப் பொய்யை, அதுவும் ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறும் பொய்யை பொய்யாக்க வேண்டும் என்பதற்காகத்தான்… இன்று அதிகாலை மேலோகத்தில் இருக்கும் அந்த அமரரான அதிகாரியிடம் இருந்து மைண்ட் வேவ் நவீன டெக்னாலஜி மூலம் இதோ… இப்போதுதான் வரவழைத்து உங்களிடம் எல்லாம் காட்டுகிறேன் அந்த பிறப்பிடச் சான்றிதழை!

சென்னையில் மகாசுதர்ஸன ஹோமம்

உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது.

ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று யாகத்தில் கலந்துகொண்டு பகவத் தரிசனம் பெற்றனர். இந்த ஹோமத்தை ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் நண்பர்களோடு வருடந்தோறும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

sudarsana homam sudarsana yagna3 - 2026

sudarsana homam sudarsana yagna4 - 2026

sudarsana homam sudarsana yagna5 - 2026

sudarsana homam sudarsana yagna6 - 2026

sudarsana homam sudarsana yagna7 - 2026

sudarsana homam sudarsana yagna1 - 2026

செய்தியும் படங்களும்: குமரி.எஸ்.நீலகண்டன்

Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

சிருங்கேரி மடத்தில் ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம்

லோக க்ஷேமார்த்த நிமித்தமான ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் சென்ற ஆவணி மாதம் 18ம் தேதி (04.09.2011) ஞாயிற்றுக்கிழமை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள சிருங்கேரி மடத்தில் காலை 7 முதல் பகல் 1 வரை நடை பெற்றது. விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், ஹோமங்கள் தொடக்கம், மந்த்ர புஷ்பம், மஹா ஹவின் நிவேதனம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்தப்பரஸாதம், ஸந்தர்பணை, மங்களா சாஸனம் ஆகியவை சிறப்பாக நடை பெற்றன. ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று இறைவனின் தரிசனம் பெற்றனர். சீனிவாசன் குடும்பத்தினர் நண்பர்களோடு வருடந்தோறும் நடத்தும் இந்த சிறப்புமிக்க ஸ்ரீஸுக்த, ஸ்ரீதந்வந்திரி ஸ்ரீமஹா ஸுதர்சன ஹோமம் இந்த வருடமும் மங்களகரமாய் நடைபெற்றது.

Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Guru charanam

UDAYAVAR - 2026

Guru Brahmaa Guru Vishnu
Guru Devo Maheswara
Guru Saaksaat Param Brahma
Tasmai Shri Guruve Namaha

Meaning
Guru Is Brahmaa (Who plants the qualities of goodness)
Guru Is Vishnu (Who nurtures and fosters the qualities of goodness)
Guru Is Maheswara (Who weeds out the bad quality)
Guru Is Supreme Brahman Itself
Prostration Unto That Guru
——————————-
Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara. Guru Sakshath Parambrahma, Tasmai Shri Gurave Namaha. (tr: Guru is the creator Brahma, Guru is the preserver Vishnu, Guru is the destroyer Siva. Guru is directly the supreme spirit — I offer my salutations to this Guru.)