கணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான  குழந்தைகள்…!

Published:

fi - 2026
காதல் கணவன் இறந்த துக்கம் தாளாமல் சுடுகாட்டில் தீக்குளித்து இறந்த மனைவி; தாய், தந்தையை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகள்.நெஞ்சை உருக்கும் சம்பவம்…!

திருச்சி மாவட்டம் சனமங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவா் பிரியா இவருக்கும் எம்ஆர்.பாளையத்தை சேர்ந்த முத்துச்செல்வன் என்பரும் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனா்.

பின்னா் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். பிரியா,முத்துச்செல்வன் தம்பதியினருக்கும் செந்தமிழ்செல்வன், ஆனந்தசெல்வன், வெற்றிச்செல்வன் ஆகிய மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனா்.

faire priya 1 - 2026

சிறுகுடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினா்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்துச்செல்வன் ட்ராகட்ர் ஒன்றில் தன் நண்பர்கள் மூவருடன் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் கணவர் இறந்த துக்கம் தாளாது பிரியா மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து கணவர் இறந்த பின்பு அவர் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்நிலையில் நேற்று பிரியா தன் கணவரை அடக்கம் செய்த மயானத்திற்கு தனியாக சென்று அவரது கணவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று கதறி அழுதுள்ளார்.

faire priya 2 - 2026

பின்னர் ஏற்கனவே தன் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் உடல் மீது ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்து அலறி துடித்தபடி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.faire priya 3 - 2026

அதனைதொடா்ந்து பிரியா இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசாரணையில் பிரியா இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே தந்தையை இழந்த துக்கத்திலிருந்த மூன்று சிறுவா்களும் தற்போது தாயையும் இழந்து நிர்கதியாக விடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img