பாகிஸ்தான் பெண், பிரதமருக்கு ராக்கி கட்டி வாழ்த்து !

Published:

rakki - 2026ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதர்களுக்கு ராக்கி கயிறு கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள். இம்முறை சுதந்திர தினமான இன்று ரக்‌ஷா பந்தன் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.rakki 2 - 2026பாகிஸ்தானை சேர்ந்தவர் குயாமர் மொஹ்சின் செயிக். இந்தியாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர், ஓவியரான அவரது கணவருடன், ஒரு முறை டில்லி சென்றார். அப்போது, ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்த, பிரதமர் மோடியை, சந்தித்துள்ளார். அது முதல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக் ஷா பந்தன்’ பண்டிகையை முன்னிட்டு, மோடிக்கு, ராக்கி கயிறு கட்டுவதை குயாமர் மொஹ்சின் செயிக் வழக்கமாக வைத்துள்ளார்rakki 4 - 2026இந்நிலையில் ஒவ்வொரு ரக்‌ஷா பந்தன் பண்டிக்கைக்கும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வரும் சகோதரி குயாமர் மொஹ்சின் செயிக் பிரதமருக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘ஒவ்வொரு முறையும் ரக்‌ஷா பந்தன் அன்று எனது மூத்த சகோதரரான மோடிக்கு ராக்கி கட்டுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிரதமர் மோடி எடுக்கும் நல்ல முடிவுகளை உலகம் அங்கிகரிக்கும். மேலும் அவர் நீண்ட ஆயுளுடனும் வெற்றியோடும் வாழ கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.rakki 1 - 2026இன்று இவர் பிரதமர் மோடிக்கு தன் கணவர் வரைந்த ஓவியத்தை பரிசாக கொடுத்தார்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

Related articles

Recent articles

spot_img