தர்பார் எப்படி இருக்கு?! நம்ம டிவிட்டர் வாசிகள் போடுற மார்க் என்னான்னு பாருங்க…!

அடடே... அப்படியா? சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
darbar rajini1 - 2026

என்னமோ போங்க.. இப்பல்லாம் படம் தியேட்டர்ல பாக்குறதுக்கு முன்னாடியே படத்த பத்தி விமர்சனம்… அதாங்க ரிவ்யு எழுதிடுறாங்க… அவ்ளோ பரப்பான சுறுப்பான வேக மய உலகத்துல நாம வாழ்ந்துட்டிருக்கோம்.

முன்னெல்லாம் படத்த பாத்துட்டு, ஒரு சினிமா ஜர்னலிஸ்ட் வீட்டுக்கு போயி, குறிப்ப எடுத்து மூளைய கசக்கிப் பிழிஞ்சி, சாறு எடுத்து ரெண்டு வரி நாலு வரியா எழுதி… பல தடவை பேப்பர ரோல் ரோலா கிழிச்சி எறிஞ்சி… ஒருவழியா ஒரு ரிவ்யு எழுதி ஆபீஸ்ல கொடுக்கும் போதே நாலு நாள் ஆயிடும். அப்புறமா அது அச்சேறி, வாசகர் கைக்கு வர்றதுக்குள்ள ஒருவாரம் ஓடிப் போயிருக்கும்.

அதுக்குள்ள கலெக்சன கல்லா கட்டி, படம் எப்டி இருந்தாலும் அது சரியா அமைஞ்சி காச பாத்துடுவாங்க.!

ஆனா இப்பல்லாம் பாருங்க… டிவி.,க்கள விட அதிவேகமா தியேட்டர்ல சினிமாவுக்கு வரிசைல நிக்குற நேரம் தொடங்கி, பல பேரு டிவிட்டர் பேஸ்புக்குன்னு ரிவ்யு எழுதிடுறாங்க. அவங்க எழுதுறதுதான் பிறகு படத்தோட தலையெழுத்துன்னு ஆயிடுது இப்பல்லாம்.

இன்று காலை தர்பார் படம் வெளியானது முதல் பல பேரு தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் சுமுகமான ரிவ்யுவும் கொடுத்தாங்க… சிலபேரு கண்டபடி ரிவ்யுவும் கொடுத்தாங்க.

darbar rajini2 - 2026

இங்க நாம சிலபேரோட வித்யாச ரிவ்யுவ பாக்கலாம்… அவங்களோட புண்ணியத்துல இன்னிக்கு டிவிட்டர்ல இந்திய அளவுல ட்ரெண்ட் ஆனதுல முதலிடம் பிடிச்சிருக்கு தர்பார்.

Trending in India #DarbarReview 54.4K Tweets

#DarbarReview Breaking News? தர்பார்? ஏமாற்றமே!

https://twitter.com/Khushal_Offl/status/1215077997784363008

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.