
களியக்காவிளையில் நேற்று இரவு எஸ்.எஸ்.ஐ வில்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அங்குள்ள மசூதியை நோக்கி ஓடிச் சென்று தப்பித்த இரு இசுலாமிய பயங்கரவாத தொடர்பாளர்கள் விவகாரம் குறித்து, முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது…
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகுசாலையில் சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை காரில் வந்த இரண்டு பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டு சுலபமாக தப்பியுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
அவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகவும் தற்போது செய்தி வருகிறது.

நேற்று கேரளாவில் நடந்த முழு கடையடைப்பு, ஆளும் கம்யூனிச அரசினால் CAAவிற்கு எதிராக தொடர்ச்சியாக நடைப்பெற்று வரும் போராட்டங்கள், இது போன்ற பயங்கரவாதிகள் கொலை ஆயுதங்களுடன் சுற்றி திரிவதற்கு ஏதுவாக அமைகிறதா என்பதையும், SSI வில்சன் என்ற தனிக் காவலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதாமல் நமது தமிழக காவல்துறையின் மீது நடத்தப்பட்ட ஓர் வன்முறை தாக்குதலாக கருதி தமிழக அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் சுட்டு கொன்ற அந்த பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும். 2014ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட, ஹிந்து முன்னணி தலைவர் பாடி சுரேஷ்குமார் அவர்களின் கொலையில் சம்மந்தப்பட்ட பயங்கரவாதிகளான சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் தலைமறைவாக இருப்பதோடு, தமிழகத்தில் மேலும் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு வேறு சிலருடன் தொடர்பில் இருப்பது நேற்று பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறையினரால் 3 பேர் சென்னையில் கைதின் மூலம் விளங்குகிறது.

இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்… என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.