வினோத திருவிழா ! கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கி வழிபாடு !

uthrakant 1 - 2026திருவிழாக்கள் அவரவர் மரபுப்படி ஆங்காங்கே கொண்டாடப்படுகிறது.அதில் வினோதமான பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.

இந்த வரிசையில் உத்தரகாண்டிலும் ஒரு வினோத திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ‘பாக்வால்’ என்ற திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இரு பிரிவினராக பிரியும் மக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ரக்‌ஷா பந்தன் நாளில், ஷ்ரவன் பூர்ணிமா என்ற பெயரில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

‘கல் வீச்சு விளையாட்டின் போது மண்ணில் சிந்தப்படும் ரத்தத்துக்குப் பிறகே கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்’ என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நேற்று 10 நிமிடங்கள் நீடித்த  நடந்த கல் எறியும் நிகழ்வில்,  100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கோவிலின் தலைமை நிர்வாகி ஜோஷ் தெரிவித்துள்ளார்.

‘பழங்காலத்தில் கடவுளை குளிர்விக்க ஆண்டுக்கு ஒருமுறை ஒருவரை பலியிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. அப்போது வயதான பெண்மணி ஒருவர், தன்னுடைய ஒரே பேரனைப் பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடவுளிடம் முறையிட்டுள்ளார்.

இதை அடுத்து அந்த கோவிலில் இருந்த பக்தர்களின் கனவில் வந்த கடவுள், முதியவரின் வேண்டுதலை தான் ஏற்பதாகவும் மனித பலிக்கு பதிலாக ஒருவரை ஒருவர் கற்களால் பலமாக தாக்கிக்கொண்டு மனித ரத்தம் மண்ணில் சிந்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை ஏற்ற பக்தர்களும், அன்று முதல் ஆண்டுதோறும் கற்களால் தாக்கிக்கொள்ளும் ஷ்ரவன் பூர்ணிமாவைக் கொண்டாடி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

சம்யல், கஹர்வால், ஒல்கியா, லாம்கரியா ஆகிய நான்கு கடவுள்கள் தங்கள் நிலங்களை காப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த நான்கு கடவுள்களை வணங்குபவர்களும் இரு குழுவாகப் பிரிந்து கற்களால் தாக்கிக்கொள்கின்றனர். மூத்த மதகுருவிடமிருந்து உத்தரவு வந்தவுடன் தாக்குதலை நிறுத்தி விடுகின்றனர்.

‘திருவிழாவின்போது கற்கள் பயன்படுத்தக் கூடாது’ என அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊர் மக்கள் கற்களைப் பதுக்கி வைத்து திருவிழாவின்போது தாக்கிக்கொள்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories