இப்படி செய்ங்க !வேண்டாம் சொல்றவங்க கூட வேணும் வேணும்னு சாப்பிடுவாங்க !

Published:

ventaikai 1 - 2026வெண்டைக்காய் மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள் :

பொருள்                                      – அளவு
வெண்டைக்காய்                            கால் கிலோ
தயிர்                                             2 கப்
மஞ்சள் தூள்                                 அரை டீஸ்பூன்
உப்பு                                             தேவைக்கேற்ப
கடுகு                                            1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு                            1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம்                       1
மிளகாய் வற்றல்                          4
கறிவேப்பிலை                             ஒரு கொத்து
சீரகம்                                          அரை டீஸ்பூன்
எண்ணெய்                                   தேவைக்கேற்ப

அரைக்க
அரிசி                                         – அரை கப்
துவரம்பருப்பு                             – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்                     – 10
பச்சை மிளகாய்                          – 2morkuzhampu - 2026செய்முறை :

அரைக்கக் கொடுத்துள்ளவற்றை முதலில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தயிரைத் தேவையான நீர் விட்டு மோராக்கிக் கொள்ளவும்.

வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

பிறகு, அதில் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதியளவு வெந்த பிறகு அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளற வேண்டும்.

காய் நன்கு வெந்ததும், மோரை அதில் கலந்து, 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், சிறிது கறிவேப்பிலை போட்டு, இறக்கி வைத்து ஆற விடவும். சுவையான வெண்டைக்காய் மோர்க்குழம்பு தயார்.

 

Related articles

Recent articles

spot_img