இரண்டு தலையுடைய பாம்பு!

அடடே... அப்படியா? இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
2head snake - 2026

இரட்டை தலை பாம்பு கண்டுபிடிப்பு… அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இரட்டை தலையுடைய அரியவகை பாம்பு ஒன்றை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2 பேர் கண்டறிந்துள்ளனர்.

பாம்புகள் குறித்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேவ் நண்பர்கள் 2 பேர், பைன் காடுகளுக்கு மத்தியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது இந்த இரட்டை தலை பாம்பை கண்டுள்ளனர்.

பின்னர் தங்கள் பெயருடன் இணைந்து அந்த பாம்புக்கு டபுள் டேவ் என்று பெயரும் சூட்டியுள்ளனர். இரண்டு தலைகள், 4 கண்கள், 2 நாக்குகள் ஆனால் ஒரு உடல் என்பதே இந்த டபுள் டேவ்வின் சிறப்பு அம்சம்.

இரண்டு தலைகளுடன் அவற்றால் விரைவாக நகர முடியாததால் எளிதில் இரையாகி விடுகின்றன என்றும் இதனால் உலகில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இரட்டை தலை பாம்புகள் உள்ளன என்றும் டேவ் நண்பர்களில் ஒருவரான டேவ் ஷ்னீடர் கூறுகிறார்.

தங்கள் ஆராய்ச்சி நிறுவனத்திடம் அனுமதி பெற்று 8 முதல் 10 அங்குலம் உள்ள நீளமுள்ள இந்த அரியவகை பாம்பை டேவ் நண்பர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.