மத்திய அரசின் சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம்: மம்தா பானர்ஜி

Published:

mamta banarjee - 2026

மத்திய அரசு கொண்டு வந்த திருத்தி அமைக்கப்பட்ட வாகன சட்டத்தை மேற்கு வங்காளத்தில் அமல் படுத்த மாட்டோம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”திருத்தி அமைக்கப்பட்ட வாகனச் சட்டத்தை நடைமுறை படுத்தினால் பொதுமக்களின் மீது அதிக சுமையை வைப்பது போல் ஆகிவிடும் என்று எங்கள் மாநிலத்தில் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இந்தச் சட்டத்தை நாங்கள் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தமாட்டோம்.” என்று கூறினார் மம்தா பானர்ஜி.

முன்னதாக, திருத்தி அமைக்கப்பட்ட அபராதங்களை அமல்படுத்துவது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று அறிவித்தார்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி, தம்மால் தம் மாநிலத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.

சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு இந்த திருத்தப்பட்ட சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் படி, சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதம் பல மடங்கு விதிக்கப் பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  புட்டுத் திருவிழாவுக்குப் புறப்பட்டார் பரங்குன்றம் சுப்பிரமணியர்!

Related articles

Recent articles

spot_img