இண்டிகோ விமானத்தின் என்ஜினில் தீ! விமானி சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
indico - 2026

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீவிபத்தில், விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் கோவா அமைச்சர் உட்பட 180 பேர் உயிர்தப்பினர்.

கோவாவில் இருந்து தில்லிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் நேற்று இரவு வழக்கம் போல தில்லிக்குப் புறப்பட்டது. விமானத்தில் கோவா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் அவரது அலுவலக அதிகாரிகள் உட்பட 180 பேர் இருந்தனர். விமானம் கோவாவில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஒரு என்ஜினில் தீ பிடித்து எரிவதைப் பயணிகள் பார்த்து பதறி அலறினர்.

அதைக் கண்ட விமானி, தீ பிடித்த என்ஜினை அணைத்துவிட்டு மற்ற என்ஜின் மூலமாக விமானத்தை இயக்கி, கோவா விமான நிலையத்துக்குத் திருப்பினார். விமானம் அங்கு பத்திரமாகத் தரையிறங்கியது தாம்தான் பயணிகளுக்கு உயிரே வந்தது.

இதுபற்றி கோவா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நிலேஷ் கேப்ரியல் கூறும்போது, ‘விமானத்தில் இடது பக்க என்ஜினில் தீப்பிடித்தது. இதைக் கண்டதும் பயணிகள் அலறினர். ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு, ஒரு என்ஜினைக் கொண்டு விமானத்தை இயக்கி சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் வேறு விமானம் மூலம் தில்லி சென்றோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.