5-வதும் பெண் குழந்தையா? போனிலே முத்தலாக்; கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு.!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி
KAMIL U - 2026

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் கமீல்.

இவர் கடந்த பதினோரு வருடங்களுக்கு முன் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஏற்கனவே நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கமீல் மனைவி ஐந்தாவது முறையாக கர்ப்பமானார்.

இதனையடுத்து பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு கமீல் மனைவி சென்றுள்ளார்.

ஆனால் அவருக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஐந்தாவது பெண் குழந்தை எனக்கேட்ட கமீல் தன் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி போனிலே முத்தலாக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன் குடும்பத்துடன் சென்று தன் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

கமீல் மனைவி புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரணை நடத்தி கணவரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.