“என்னை ஒன்றும் செய்யாதே!”

அடடே... அப்படியா?

sirumi_2357779f “என்னை ஒன்றும் செய்யாதே” சிரியாவில் கேமராவை பார்த்து துப்பாக்கி என்று பயந்து இரு கைகளையும் தூக்கி விம்மிய சிறுமி. உலகையே உலுக்கிய புகைப்படம் இது. இணையத்தில் வைரல் போன்று பரவி வருகிறது இந்தப் படம். இந்தப் படத்தில் உள்ள அந்தப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தில் பயம். அழுகை வெடிக்கும் நிலை. கைகளைத் தூக்கி என்னை ஒன்றும் செய்யாதே என்று கெஞ்சும் முகபாவனை….. இந்தக் காட்சியை வெளியிட்ட புகைப்படக் கலைஞர் நாடியா அபு ஷபான். சிரியாவில் எப்போதும் குண்டு சத்தத்தையே கேட்டுப் பழகிய இந்தக் குழந்தை, படம் பிடிக்க கேமராவை சரி செய்தபோது, துப்பாக்கியால் சுடப் போகிறார் என்று மிரண்டு கைகளை உயர்த்தி நின்ற காட்சியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இது இணைய தளத்தில் பலரையும் பரிதாபப்பட வைத்துள்ளது..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.