spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeNewsதமிழ் இதழ் கலைமணி விருது

தமிழ் இதழ் கலைமணி விருது

sri+ram+1
sri+ram+2
sri+ram+3

11072008 cni mn 02 img7 large
திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில், விருது பெற்றவர்களுடன் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள்

தமிழ் இதழ் கலைமணி விருது

திருவாவடுதுறை ஆதினகர்த்தர், ஆனித்திருமஞ்சன விழாவின்போது, பத்திரிகையாளர் என்ற முறையில், தமிழ் இதழ் கலைமணி என்ற விருதினை அளித்து கவுரவித்தார். அப்போது, ஒரு பொன்னாடையைப் போர்த்தி, ருத்திராட்ச மாலை அணிவித்து, பட்டயம் ஒன்றையும் அளித்தார்.

அண்மையில் விகடன் பிரசுர வெளியீடாக வெளிவந்திருக்கும் என் ‘தட்சிணாமூர்த்தி வழிபாடு’ நூலைப் பார்த்துவிட்டு, மிகவும் சிலாகித்து கடிதம் அனுப்பியிருந்தார் ஆதினகர்த்தர். அதன் தொடர்ச்சியாக இந்த விருதை அளித்து, ஆன்மிகப் பணி மேன்மேலும் தொடரவேண்டும் என்று பாராட்டி வாழ்த்தினார்.

முன்னர் மஞ்சரியில் ஆசிரியப் பணியில் இருந்தபோது, என் கட்டுரைகளைப் படித்து வாழ்த்து தெரிவிப்பார். தமிழார்வமும், தமிழ் இலக்கியப் பணிகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் மனமும் கொண்ட திருவாவடுதுறை ஆதினத்துக்கு நெடுஞ்சாண்கிடையாக ஒரு வணக்கம்…

இது குறித்த தினமணி செய்தி கீழே…

—————————————————————————-

மயிலாடுதுறை, ஜூலை 10: நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆடல்வல்லான் ஆனித் திருமஞ்சன விழாவில் 12 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் முன்னிலையில், காலை 8 மணிக்கு ஆடல்வல்லானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மதியம் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது.

ஓதுவா மூர்த்திகளின் இசை நிகழ்ச்சியுடன் பிற்பகல் நிகழ்ச்சிகள் தொடக்கப்பட்டன.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் தா.ராசவன்னியன் “உமாபதி சிவாச்சார்யரின் இலக்கியங்கள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் பேசினார்.

ஆதீனப் புலவர் ஆதி. முருகவேள் எழுதிய “முப்பால் உணர்த்தும் மூன்று பொருள்’ என்ற விழா மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆதீன குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விழா மலரை வெளியிட்டார்.

வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

சென்னை கண் மருத்துவ நிபுணர் சந்திரேஷ்பெய்டு 2-ம் பிரதியைப் பெற்றார்.

விருது வழங்கும் விழா

ஓதுவா மூர்த்திகள், சிவாச்சார்யர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள் 12 பேருக்கு ஆதீனத்தின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை குருமகா சந்நிதானம் வழங்கினார்.

விருது பெற்றோர் பெயர்- விருது :

தூத்துக்குடி ஆலாலசுந்தரம் வேத சிவாகம வித்யாலயம் ஆசிரியர் கல்யாணசுந்தரம் பட்டர்- சிவாகமச் செல்வர்.

திருநெல்வேலி தாழையூத்து அருள்மிகு அழகிய கூத்தன் திருக்கோயில் ஸ்தானிகர் ஆர்.எம். கணேசபட்டர்- சிவாகமத் திருத்தொண்டர்.

சிவகிரி அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் ஸ்தானிகர் எஸ்.கணபதிசுந்தரம்- சிவாகமத் திருத் தொண்டர்.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் சோ. கனகசபாபதி- தெய்வத் தமிழிசைச் செல்வர்.

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் திருக்கோயில் ஓதுவார் வே. பாலசுப்பிரமணியம் – தெய்வத் தமிழிசைச் செல்வர்.

உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் கோயில் ஓதுவார் ஆர். சுந்தரவடிவேல்- தெய்வத் தமிழைச் செல்வர்.

சென்னை, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் சு. விக்ரமன் என்ற வேம்பு- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.

சென்னை நாடக ஆசிரியர் கவிஞர் ஞா. மாணிக்கவாசகன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் த.ராசவன்னியன்- இலக்கியத் தமிழ்ச் செல்வர்.

சென்னை விகடன் பிரசுரம் பொறுப்பாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம்- தமிழ் இதழ் கலைமணி.

காஞ்சிபுரம் ஸ்தபதி எஸ். சுப்பையா- சிற்பக்கலைப் பேரரசு.

திருமுருகன்பூண்டி ஸ்தபதி சு.கனகரத்தினம்- திருக்கோயில் கலைச் செல்வர்.

விருது வழங்கும் விழா மற்றும் சிறப்பு பூஜைகளில் ஆன்மிக அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் பங்கேற்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe