கல்வெட்டியல், தொல்லியல் படிக்க வேண்டுமா?! விண்ணப்பியுங்க!

அடடே... அப்படியா? கல்வி சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல் வேலைவாய்ப்பு
temple kalvettu - 2026

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓர் ஆண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அகழாய்வுக்கான பட்டய வகுப்புகள் 2020 ஜனவரியில் தொடங்க உள்ளன

இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை இலக்கியம் குறித்தும், கல்வெட்டு எடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் வகுப்புகள் நடக்கும்.

ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை என்ற www.ulagaththamizh.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இந்த பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் 2,500 ரூபாய்.

வயது வரம்பு கிடையாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 20-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.