வாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கை தேவை!

Published:

goatmarketkrishnagiri - 2026

வாகனங்களில் ஆடு திருடுபவர்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.

நாகப்பட்டினத்தை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி வந்த டாடா மான்ஸா காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்தக் காருக்குள் மூன்று ஆடுகள் இருந்தன. காரில் இருந்த 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி (28), முகமது சையது (25) உள்ளிட்ட 4 பேரும் சாலையோரங்களில் படுத்திருக்கும் ஆடுகளைத் திருடுபவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் அந்த 3 ஆடுகளையும் சன்னாநல்லூரில் திருடியதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்துள்ள போலீசார் ஆடுகள் மற்றும் கார்களை பறிமுதல் செய்தனர்.

இது போல், நேற்று (15/11/19)மதியம் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகிலுள்ள ஆலுச்சாம்பாளையத்தில் திருடர்கள் இருவர், ஆடு ஒன்றை மோட்டார் சைக்கிளில் திருடி சென்றபோது சித்தோடு செல்லப்பம்பாளையத்தில் பிடிபட்டனர்!

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பிடிபட்டது. அவர்களைப் பிடித்த கிராமத்தினர், இது குறித்து உடனே போலீஸில் தகவல் கொடுத்துள்ளனர். இதுபோல், தங்கள் பகுதியில் வேறு ஆடுகள் ஏதேனும் திருடு போயிருந்தால் உடனடியாக சித்தோடு காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனு தரவேண்டும் என்றும் கோரிக்கைகள் சமூகத் தளங்களில் பகிரப் பட்டன.

Related articles

Recent articles

spot_img