
தமிழக பெட்டிக்கடைகளில் கிடைக்க கூடிய தேன்மிட்டாய் போலவே மிகவும் ருசியாக மிருதுவாக வீட்டுலேயே இட்லிமாவில் ஐந்து நிமிடத்தில் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள்.
இட்லிமாவுஒரு கப் , புளிப்பாக இருக்ககூடாது. சோடாஉப்பு கால் ஸ்பூன் , ஆரஞ்சுகலர் பொடி, சீனி 100கிராம்.
முதலில் சீனியை எடுத்து அதில் அரைகப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்கவிடவும்.
நுரையாக பாவு வரும் பொழுது இறக்கிவைக்க வேண்டும்.
பிறகு சோடாஉப்புவை இட்லி மாவுடன் கலந்து காய்ந்த எண்ணெயில் ஒவ்வொரு ஸ்பூனாக ஊற்றவேண்டும்.
மாவுக்கெட்டியாக இருக்கவேண்டும். நல்லா வெந்தபிறகு எண்ணெய் சத்தம் நின்ற பிறகு அதை எடுத்து சூட்டுடன் சீனி பாவுடன் கலந்து ஒரு 20நிமிடம் ஊறவிடுங்கள்.
பிறகு எடுத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

