மிசால கைதாகி உள்ள இருந்தேன்னு நானே சொல்ல எனக்கே வெட்கமா இருக்கு…!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
stalin mk - 2026

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி., திருநாவுக்கரசு, பாஜக., மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பி.டி.அரசகுமார் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எம்ஜிஆருக்கு பின் நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின்தான். முதல்வர் இருக்கையை தட்டி பறிக்க நினைத்திருந்தால் கூவத்தூர் பிரச்னையின் போதே ஸ்டாலின் முதல்வர் ஆகி இருப்பார். காலம் கனியும். அப்போது அவர் நிச்சயம் முதல்வர் அரியணையில் அமர்வார் என்றார் பிரதமர் மோடி குறித்தும், பாஜக., குறித்தும் கடுமையான அவமரியாதை மற்றும் அவதூறுப் பிரசாரங்களைச் செய்து வரும் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக.,வின் துணைத் தலைவர் வக்காலத்து வாங்குவது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/MaridhasAnswers/status/1201388184950558720

இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியபோது… உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தான் திமுக.,வின் எண்ணம். ஆனால் மாவட்டங்களுக்கான வரையறை இல்லாமல் நடத்தக் கூடாது. அதிமுக தான் உள்ளாட்சியை நிறுத்த முயற்சிக்கிறது. மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் எதுவானாலும் மன பூர்வமாக வரவேற்கிறோம்.

கருணாநிதிஆட்சியில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் டிவி கொடுத்தோம். அதேபோல் பொங்கல் பரிசு திட்டத்தை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அரிசி அட்டைக்கு மட்டும் என பாரபட்சம் காட்டக்கூடாது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு துணிச்சலான உண்மைகளை அரசகுமார், வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என்று பேசினார் ஸ்டாலின்.

ஸ்டாலின் பேச்சுக்கு சமூகத் தளங்களில் கடுமையான கேலியும் கிண்டலும் செய்யப் பட்டு வருகிறது.

1 thought on “மிசால கைதாகி உள்ள இருந்தேன்னு நானே சொல்ல எனக்கே வெட்கமா இருக்கு…!”

  1. சிசி இந்த பழம் புளிக்கும் அனுதாபங்கள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.