ஏசய்யா பிரசாரத்தில் மத கலகம் ஏற்படுத்த சதி! சுப்பாரெட்டி குற்றச்சாட்டு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
IMG 20191202 WA0001 - 2026

ஏசய்யா பிரச்சாரத்தில் மத கலகங்கள் ஏற்படுத்தும் சதி. திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் பரபரப்பு குற்றச்சாட்டு.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெப்சைட் காலண்டரில் இயேசையா என்று எதற்காக இருக்கும்?

முன்பு கூட கிரிஸ்டியன் கிராஸ் அடையாளங்கள் பஸ் டிக்கெட் மீது பிற மதப் பிரச்சாரம் என்று கூறி தீய பிரச்சாரம் செய்தார்கள் என்று டிடிடி சேர்மன் ஜெகனின் சித்தப்பா ஒய்வி சுப்பாரெட்டி ஆத்திரமடைந்தார்.

டிடிடி வெப்சைட்டில் இயேசையா பிரச்சாரம் மீது சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி சீரியஸாக பதிலளித்தார் .

டிடிடி நிர்வாக மண்டலி மீதும் ஜகன் அரசாங்கம் மீதும் குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காகவே தீய நோக்கத்தோடு திருமலையில் அன்னிய மதப் பிரச்சாரம் என்று பொய் பிரச்சாரம் செய்வதாக எரிந்து விழுந்தார்.

சந்திரபாபு தொடர்பான மீடியா நிர்வாகிகள் அன்னிய மதப் பிரச்சாரம் என்று தீய பிரச்சாரத்திற்கு முன் வந்துள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார். டிடிடி வெப்சைட் காலண்டரில் ஏசையா என்று ஏன் இருக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

இந்துக்களின் புண்ணிய தலத்தில் அன்னிய மதப் பிரச்சாரம் ஏன் செய்வார்கள் என்று வினவினார்.

மாநில அரசு மீது சேறு வாரி பூசுவதற்கு எந்த விஷயமும் கிடைக்காததால் டிடிடி மீது சதி செய்கிறார்கள் என்று சுப்பாரெட்டி போர்க்கொடி உயர்த்தினார்.

வெங்கடேஸ்வர சுவாமியை கூட அரசியல் ஆதாயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று கோபமடைந்தார். அவர்களை அந்த கடவுள் கூட மன்னிக்க மாட்டார் என்று விமர்சித்தார்.

முன்புகூட கிறிஸ்டியன் சிலுவை அடையாளங்கள் இருந்ததாக சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்தார்கள் என்றும் விசாரணை செய்த பின் ஹைதராபாத் மற்றும் பிற இடங்களிலிருந்து சோஷல் மீடியா வழியே செய்த பிரச்சாரமாக அது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் கூறினார்.

இதெல்லாம் தெலுங்கு தேசம் கட்சி சோசியல் மீடியா செய்த சதி என்று குற்றம்சாட்டினார். பஸ் டிக்கெட் விவாதம் கூட அதில் ஒரு பாகமே என்றார்.

சென்ற அரசின் ஆட்சியில் பிரிண்ட் செய்த டிக்கெட்டுகளை வேண்டுமென்றே நெல்லூரில் இருந்து வரவழைத்து சர்க்குலேட் செய்தார்கள் என்று குற்றம் சாட்டினார். இப்போது நடக்கும் ஏசையா பிரச்சாரம் கூட சதியில் ஒரு பாகமே என்று சுப்பாரெட்டி குறிப்பிட்டார் .

சென்ற ஏப்ரல் 6, 7 தேதிகளில் கூகுள் செர்ச்சில் காட்டியதுபோல் கூறுகிறார்கள். அப்போது அதிகாரத்தில் இருந்தது தெலுங்குதேசம் அரசு தானே என்றார். அவற்றை தம்மேல் சுமத்துவதாக அவர் எரிந்து விழுந்தார்.

சந்திரபாபு அரசியல் லாபத்துக்காக மதக்கலகம் உருவாக்குவதற்கு சதி நடக்கிறது என்று ஒய்வி தீவிரமாக குற்றம்சாட்டினார்.

நன்றாக மழை பொழிந்து மக்களெல்லாம் சுக சந்தோஷமாக இருக்கிறார்கள்என்றும் எந்த விஷயமும் கிடைக்காததால் மதங்களிடையே பற்ற வைக்க சதி செய்கிறார்கள் என்று ஒய்வி என் குற்றம் சாட்டினார்.

டிடிடி வெப்சைட்டில் ஏசையா என்ற எழுத்துக்கள் காணப்படுகின்றன என்று வரும் குற்றச்சாட்டுகளின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார். இதற்குள்ளாகவே விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். கூகுள் செர்ச்சுக்கு கூட புகார் செய்துள்ளோம் என்றார். விசாரணை நடத்தி கிரிமினல் கேசில் பிடித்துப் போடுவோம் என்று அவர் தெளிவாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 20 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.