தெலங்கானா போலீசின் மெத்தன கொடூரத்தால்… ஆந்திரா போலீஸ் புது முடிவு!

Published:

hyderabad rape case accusts - 2026

சம்ஷாபாத் கொலை சம்பவத்திற்கு பிறகு ஆந்திரா போலீசார் பரபரப்பு முடிவு எடுத்துள்ளனர். தெலங்காணா ‘ஜஸ்டிஸ் ஃபர் திசா’ சம்பவத்தால் போலீசார் அலெர்ட் ஆகி உள்ளார்கள்.

பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

தெலங்காணா கொடூர கொலையில் பக்கா ப்ளான் செய்து யாரும் இல்லாத இடத்திற்கு இட்டுச்சென்ற கூட்டாக கொடும் செயலில் ஈடுபட்டு பெட்ரோல் ஊற்றிக் கொன்றுள்ளனர்.

ஆனால் இந்தக் கொடுமைகளில் போலீஸாரின் மெத்தனப் போக்கு தெளிவாக தெரிகிறது என்று விமரிசனங்கள் எழுந்துள்ளன.

‘திசா ‘வின் பெற்றோர் தம் மகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்தபோது இரவில் உடனடியாக உதவாமல் அது தங்கள் எல்லையில் இல்லை என்று அனுப்பி விட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு போலீஸ் ஸ்டேஷன்களுக்கு பெற்றோர்கள் இரவில் அலைந்தபின்தான் போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள். அதற்குள் தீவிரமான காலவிரயம் ஆனதோடு நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

ஒரு வேளை போலீசார் சரியான நேரத்தில் களத்தில் இறங்கி இருந்தால் அந்தப் பெண் உயிரோடு இருந்திருப்பாள் என்று விமர்சனங்கள் வெளிப்படுகின்றன.

அந்த மனித மிருகங்கள் அந்தப் பெண்ணை இரவு ஒன்பதரை க்கு இழுத்துச்சென்று 10.20 க்கு லாரிகளில் ஏற்றி விட்டார்கள். நள்ளிரவு 2 மணிக்கு பெட்ரோல் ஊற்றி எரித்தார்கள்.

பெற்றோர் புகார் அளிக்க வந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேஷன்களைச் சுற்றி அலையவிடாமல் போலீசார் சரியாக நடந்து கொண்டிருந்தால் சூழ்நிலை வேறாக இருந்திருக்கும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

தெலங்காணாவில் நடந்த இந்த கொடூரத்தால் ஆந்திரா போலீசார் அலெர்ட் ஆகி உள்ளார்கள். குண்டூர் எஸ்பி பரபரப்பு முடிவு எடுத்துள்ளார்.

இனி போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லை பற்றி கவலைப்படாமல் பாதிப்புக்குள்ளானவர்கள் வந்தால் புகார் வாங்க வேண்டும் என்ற முக்கிய உத்தரவு வெளியிட்டுள்ளார். யார் புகார் கொடுக்க வந்தாலும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எஸ்பி பிஹெச்டி ராமகிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் டயல் 100 நம்பர் 24 மணி நேரமும் உதவியில் இருக்கும். பாதிக்கப்பட்டோர் வாட்ஸப் நம்பர் 86 88 83 15 68 க்குக் கூட விவரம் அளிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இது ஒன்றும் புதிய வழிமுறை அல்ல. அதற்கு ஜீரோ எப்ஐஆர் என்று பெயர். எப்போதிலிருந்தோ அமலில் உள்ளது. இது பற்றி பல போலீசாருக்கு புரிதல் இல்லாததால் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றனர் . இனி இதுபோல் நடக்கக்கூடாது . எங்கு புகார் அளித்தாலும் அங்கேயே ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்து அதன் பின் சம்பந்தப்பட்ட ஸ்டேஷனை அறிந்து அதற்கு புகாரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img