வைரமுத்து கண்ட சிதம்பரத்தின் பழைய முகம்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை
vairamuthu - 2026

ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்ததாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 106 நாள்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரம் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடா்ந்து, சென்னைக்கு சனிக்கிழமை வந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ப.சிதம்பரத்தை இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கவிஞர் வைரமுத்து சந்தித்தார்.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில் கூறியதாவது,
இன்று காலை ப.சிதம்பரத்தை
அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்;
சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திஹார் சிறையில் சென்று சிதம்பரத்தை வைரமுத்து சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.