மீனாட்சி மீனாட்சி..! என்னாச்சி என்னாச்சி?!

- 2026

தமிழகத்தைக் கலக்கிய சுவாமி நித்தியானந்தாவைத் தேடுவதில் குஜராத் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஜனார்த்தன சர்மாவின் இரண்டு மகள்களும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியுள்ளது என்பதால் அவரை தேடப்படும் நபராக வெளியுறவுத்துறையும் அறிவித்து விட்டது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் அவர் கண்டுபிடிக்கப் பட வேண்டிய நிலை.

இருப்பினும் தினமும் யூட்யூப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களில் சத்சங்கத்தில் சிரிக்க சிரிக்க பேசி வருகிறார் நித்தியானந்தா. அவர் எங்கிருந்து இவ்வாறு வீடியோ எடுத்து வெளியிடுகிறார்…? என்ற கேள்விகள் பரவலாக எழுப்பப் படுகின்றன.

ஆயினும் இமயமலைச் சாரலில் எங்கேயோ பதுங்கியிருக்கிறார் என்று நித்தியானந்தா குறித்து சிலர் தகவல்களைச் சொல்லி வருகின்றனர். அவர் ஈக்வடார் தீவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக ஒரு தகவல் பரவிய நிலையில், இல்லை இங்கிருந்து ஹைதி தீவுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று ஒரு ஈக்வெடார் அதிகாரி கூறுகிறார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

அதே நேரம், நித்தியானந்தா அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோ இப்போது பெரும் வைரலாகி வருகிறது.

நா ன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்… என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா . அதில், பெங்களூருவில் செட்டியார் வீட்டில் பொட்டியடி பையனா திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்குப் போனேன் என்று கூறும் அவர், தமக்கு நுாற்றியோரு ரூபாய் தட்சணை கொடுத்தார்கள் என்றும், அதற்கு அவர்களுக்கு ஹீலிங் – வைத்தியம் செய்து வந்தேன். என்னை எதுக்கு ஓட ஓட விரட்டுறாங்க. நான் வாழ வேண்டாமா? என்னை வாழ விடுகிறீர்களா? நான் என்ன அதற்காக சாகவா முடியும்? தற்கொலை செய்வதும் சாவதும் ஹிந்து மதத்தில் சொல்லப் படவில்லை!

என்னை திருவண்ணாமலையில் இருந்து துரத்தி அடித்தீர்கள்… நான் பெங்களூரு பக்கம் ஒதுங்கினேன். அங்கேயும் என்னை வாழவிடவில்லை. நான் மதுரைக்கு வந்தேன். அங்கேயும் என்னை இருக்க விடாமல் துரத்தி அடித்தீர்கள்… மதுரை கோயிலுக்குள் விடவில்லை…. ஆதீனத்துக்குள் விடவில்லை. மதுரை மீனாட்சி அம்மாவிடம் போய் கேட்டேன்… அதனால் என்ன உனக்கு என்று ஒரு ஆதீனம், ஒரு கோயில் எல்லாம் வந்தாச்சு என்றார்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

என் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. அதை புதுப்பிக்க போனேன். ஆனால் அதை ரத்து செய்து,முடக்கி வைத்தார்கள். என் பாஸ்போர்ட் கூட முடக்கிவிட்டார்களே என்று மீனாட்சி அம்மாவிடம் போய் கேட்டேன். அதலான் என்ன … உனக்கு ஒரு நாடே உருவாக்கித் தருகிறேன் என்று கூறி, கைலாசா நாட்டையே தந்துவிட்டார் அம்மா…

சாதாரண ஆளா இருந்த என்னை நீங்களே பெரிய ஆள் ஆக்கிவிட்டீர்கள். திருவண்ணாமலை, பெங்களூரு, மதுரை என என்னை ஏன் விரட்டினீர்கள்? அப்படியே விட்டிருந்தால் நான் காணாமல் போயிருப்பேன்’ என்று தன் வாழ்க்கையின் நியாயத்தை, இந்த சமூகத்தின் முன் வைக்கிறார் நித்தியானந்தா.

முன்னதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க இந்தியாவின் அனைத்து தூதரகங்களுக்கும் தகவல் கொடுத்துள்ளது.

இந்நிலையில், நித்தியானந்தாவின் மீனாட்சி மீனாட்சி வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. உலகத்தார் தங்கள் பிரச்னைகள் தீர வேண்டுமானால், நேராக மதுரை அம்பாள் மீனாட்சியிடம் செல்லுங்கள்… மீனாட்சி மீனாட்சி என்று சொல்லுங்கள். அம்மா என்னாச்சி என்னாச்சி என்று உங்கள் துன்பங்களை மாற்றுவாள் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசியுள்ளார் தவத்திரு மகரிஷி நித்தியானந்த மகாசுவாமிகள்!

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories