15ஆயிரம் கடனுக்காக 13வயது மகளுக்கு கட்டாய திருமணம்; தந்தை உள்பட 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது.!

Published:

chiled marriag - 2026

கரூா் மாவட்டம், கடவூா் அருகே 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்ததாக வந்த புகாரில், அவரது தந்தை, கணவா் உள்பட 5 போ கைது செய்யப்பட்டனா்.

கரூர் மாவட்டம் கடவூரை அடுத்துள்ள ஆதனூா் எருதிகோன்பட்டியைச் சோந்தவா் பெருமாள் (45)கூலித்தொழிலாளி

complaint 2 2 - 2026

. இவரது 13 வயது மகள், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த மனுவில் அவா் கூறியிருப்பது: எனது தந்தை பெருமாள் குஜிலியம்பாறை அருகிலுள்ள கவுண்டனூரைச் சோந்த உறவினா் மூக்கனிடம்(45) கடந்தாண்டு ரூ.15,000 கடன் வாங்கியிருந்தார்.

அந்த பணத்தை எனது தந்தையால் திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் என்னை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு(23) கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி கட்டாயமாக திண்டுக்கல் அடுத்த கரிக்காலி பெருமாள் கோயிலில் வைத்து எனது விருப்பமில்லாமல் கட்டாய திருமணம் செய்து கொடுத்தனா்.

ARASED 5 - 2026

தீபாவளி பண்டிகைக்கு எனது பெற்றோர் வீட்டுக்கு சரவணகுமாருடன் விருந்துக்கு வந்தேன்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

அப்போது மீண்டும் கணவருடன் செல்ல மறுத்தேன். இந்நிலையில் எனது பெற்றோர் தொடா்ந்து சரவணகுமாருடன் குடும்பம் நடத்த செல்லுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார்கள் அவர்கள் மீது காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சிறுமியின் தந்தை பெருமாள், தாய் வீரமணி(40), கணவன் சரவணகுமார். அவரது தந்தை மூக்கன்(45), மூக்கனின் மனைவி அஞ்சலம்(40) ஆகிய 5 பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினா் புதன்கிழமை பிற்பகல் கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறன்றனா்.

Related articles

Recent articles

spot_img