வறுமையின் கொடுமை: அரளி விதையை அரைத்து ஐவரும் உண்ண ஐயோ என அலரித்துடித்த அக்கம் பக்கம்!

Published:

arali vithai - 2026

கோவையை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.. இவரது மனைவி அம்சவேணி.. இவர்களுக்கு மணிகண்டன், சபரிகிரி, சத்யபிரியா என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் குடும்பம் இது.. இதில் சத்யபிரியா என்பவர் 2-வது மகள்.. உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இவருக்கு மருத்துவம் பார்க்க கோவிந்தராஜ் தம்பதியிடம் போதிய வசதியும், பணமும் இல்லை என்றும் தெரிகிறது. மகளுக்கு வைத்தியம் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் இந்த தம்பதிக்கு அதிகமாகவே வாட்டத்தையும், கண்ணீரையும் தந்து வந்துள்ளது.

இந்நிலையில், கோவிந்தராஜ் வெளியே சென்றிருந்தபோது அம்சவேணி 4 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலை செய்யது கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதனால், அரளி விதையை அரைத்து அதை சாப்பாட்டில் கலந்து பிள்ளைகளுக்கும் தந்து, தானும் சாப்பிட்டுள்ளார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென அம்சவேணிக்கு மனசு மாறிவிட்டது.. உடனே குழந்தைகளை ஒரு ஆட்டோவில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.. இப்போது அம்சவேணி உட்பட 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

அம்சவேணி சாப்பாட்டில் விஷம் கலந்து குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related articles

Recent articles

spot_img