மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில், காலியாக உள்ள பணி!

தமிழகம் வேலைவாய்ப்பு
job - 2026

பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில், காலியாக உள்ள ஏழு மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன் பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல் மற்றும் அறுந்த வலைகளை சரி செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை கீழ் உள்ள பயிற்சி நிலையங்களில், பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருப்பின் முன்னுரிமை வழங்கப்படும்.

பவானிசாகர் புங்கார் காலனி டேம் சாலையில் உள்ள, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் நவ., 19க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல் அறிய, 04295 299242 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.