ஆண்டாள் கோவில் வர்த்தக கடைகளில்… கிறிஸ்துவ மத சின்னங்கள் விற்பனையா?! அதிர்ச்சி..!

Published:

srivilliputhur temple shop - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வர்த்தகக் கடைகளில், கிறிஸ்துவ மத சின்னங்கள், பொம்மைகள் விற்பனை செய்தது பெரும் அன்பர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கோயிலுக்கு தரிசனத்துக்கு வந்த சிலர், ஆண்டாள் கோயில் இது போன்று வியாபாரத்துக்காக செய்வது தங்களைப் புண்படுத்தியதாகக் கூறி, ஒரு வீடியோவினை வெளியிட்டனர். அதில், ஆண்டாளுக்கும் பாதுகாப்பில்லை, ஆண்டாள் கோயிலுக்கும் பாதுகாப்பில்லை என்று மனம் குமுறி கருத்து தெரிவித்தனர்.

வேறு எந்த மதத்தின் வழிபாட்டுத் தலத்திலும், இந்துக்களின் புனிதச் சின்னங்களை விற்பனை செய்வார்களா என்று கேள்வி எழுப்பிய அவர்கள், இதற்கு கோயில் நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது என்று, வருத்தத்துடன் தங்கள் மனக்குமுறலைப் பதிவு செய்தனர்.

https://twitter.com/yajathri/status/1210963278513360896

தகவல் அறிந்த, ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாஜக., நிர்வாகியான ராஜா என்பவர், சம்பந்தப் பட்ட இடத்துக்குச் சென்று, அது குறித்து விசாரித்து, அந்தக் கடைக்காரருக்குப் புரிய வைத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்த போது… அண்மையில், ஒரு வீடியோ முகநூலில் பகிரபட்டது அதில் ஆண்டாள் சன்னதி வீதியில் ஒரு தெருவோர திருவிழா கடையில் வேற்று மத சின்னங்கள் விற்கப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு பகிர்ந்துகொண்டிருந்தார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

அந்த கடைக்கு நேரில் சென்று தாயார் கோவில் அருகில் வெளியூரில் இருந்து வந்து தொழில் பண்ணுறீங்க சந்தோஷம் இது போன்ற பொருட்களை விற்பனை செய்யாதீர்கள் என கூறி புரிய வைத்து எடுக்க வைத்தோம்.

எங்களுக்கு இது தெரியாதுண்ணே நாங்க தெருவோர வியபாரிகள் இனி இங்கே விற்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்

அவர்களுக்கு எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து, ஏதாவது உதவி தேவைனா கூப்பிடுங்க என கூறி வந்தோம் என்றார்.

Related articles

Recent articles

spot_img