சைக்கிளில் சாலையைக் கடந்த மாணவிகள்! வேகமாய் வந்த கார்! ஒரு மாணவி உயிரிழப்பு!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

acc - 2026

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு மாடர்ன் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் புவனேஸ்வரி மற்றும் ஸ்ரீ வித்யா. இவர்கள் இரண்டு பேரும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சென்றுள்ளனர்.

நெடுஞ்சாலையின் ஒரு பாதியைச் சைக்கிளுடன் கடந்த இவர்கள், மறு பாதியைக் கடந்து எதிரே போவதற்காகச் சாலையின் நடுவே இருக்கும் மீடியனில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது மீடியனில் இருந்து சற்று கீழே இறங்கிய மாணவிகள் மீது சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி வேகமாக வந்த டாடா சுமோ கார் மோதியுள்ளது.

cycle - 2026

இதனால் மாணவிகள் அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில், புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த ஸ்ரீ திவ்யா விருத்தாசலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

accitent - 2026

மாணவிகள் மீது மோதிய கார் அங்கிருந்து நிற்காமல் சென்றதால், அந்த காரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் புவனேஸ்வரி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.