பொண்டாட்டிய காணோம்னு போலீஸ்ல புகார் சொன்னான்… இப்ப அப்பா அம்மாவுடன் சேர்ந்து… கம்பி எண்ணுறான்!

Published:

muslim areested 16 year girl - 2026

மரக்கடை பகுதியைச் சேர்ந்த முகம்மது நிஷார், தனது மனைவியை காணவில்லை என வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் விசாரணையின் முடிவில் அவர், அவரது பெற்றோருடன் கைது செய்யப் பட்டுள்ளார். அதற்குக் காரணம், அவர் மனைவிக்கு வயது 16 என்பதுதான்!

மரக்கடை பகுதியைச் சேர்ந்த முகம்மது நிஷார், தனது மனைவியை காணவில்லை என வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். விசாரணையில் இறங்கிய போலீசார், அவரது மனைவி தன்னோடு தவறான தொடர்பில் இருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற இளைஞருடன் மாயமானது தெரியவந்தது.

பின்னர், ரஞ்சித்குமாரிடம் இருந்து பெண்ணை மீட்டபோது போலீஸார் திடுக்கிட்டனர். காரணம், அந்தப் பெண்ணுக்கு அப்போது வயது 16 தான்.

அந்தப் பெண் 16 வயது சிறுமி என்பது தெரியவந்ததை அடுத்து, போக்சோ சட்டத்தில் நிஷார் முகம்மதுவையும் ரஞ்சித்குமாரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன், குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் முகமது நிஷாரின் பெற்றோர் அப்துல் சலாம், பர்சானாவையும் கைது செய்தனர்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

பொண்டாட்டிய காணோம்னு போலீசுக்குப் போனவனுக்கு காப்பு போட்டு போலீஸு உள்ள தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது

Related articles

Recent articles

spot_img